Posts

Showing posts from January, 2019

நிசப்த வானம் நீ

நான் செல்லும் தொலைவெல்லாம்  முடியாமல் நீள,  காணும் இடமெல்லாம்  அவள்முகம் ஆள விண்ணோடு சொந்தங்கள்  என்றெண்ணி படைத்தானோ  நிலவோடு நிதம்சண்டைஇட  இவளை இங்கு அடைத்தானோ  யான் கண்ட பசுமை  அவள் தாவணி போர்வைகள்  யான் கண்ட குளுமை  பணிவிழுகும் அவள் மூச்சு  நிசப்த வானில் நட்சத்திரம் முத்தமிடும்  சப்தம் உன் வாய்மொழியில் விளங்குதடி ,  அன்னதானமிட அமர்ந்தேன் நான்  அன்னமே தானமிட வருகையிலே  ஆகாய சிற்பங்கள் என்மீது பொழிகிறதோ  அவள் வந்து நனையட்டுமே  ..... தொடரும் .