Posts

Showing posts from February, 2016

என் தந்தையுடன் நான் ,

என் தந்தையுடன் நான் கைகள் படைத்து இருப்பது உம் விரல் கோர்த்து நீவிர் வழிகாட்ட தான் என் கால்கள் படைத்து இருப்பதும் உம்மை பின்ப்பற்றி நடக்கத்தான்  என்பதை உணர்கிறேன் இப்போது கலங்கரை விளக்கமாய் நீயிருக்க வழிதேடும் மிதவை நான் கடிகார முள்லாய் நீஇருக்க  நேரமாய் நான் கணிப்பொறி விசையாய் நீ தேடுபோறியாய் நான் நீராய் நீ இருந்தால் மூழ்கி போவேனா நான் காற்றை நீ இருக்க விழுந்து விடுவேன நான் நிலமாய் நீ இருக்க முளைக்காமல் போவேனா நான் மரமாய் நீ இருக்க பேயாமல் போவேனா நான் கேட்டு போய்விடுமென தெரிந்தே பால் தயிராக்க படுகிறது செத்து போய்விடுமென தெரிந்தே கோழி வளர்க்க படுகிறது ஓடிப்போய் இடுமென தெரிந்தே மாடுகள் கட்டி போடப்படுகின்றன வீணாய் போய் விடுமென தெரிந்தே உணவுகள் உரமாக்கபடுகின்றன இதெல்லாம் தெரிந்தவர் என் தந்தை என்பதாலோ என்னவோ நான் நல்லவனாகவே இருக்கிறேன்,, உன் கரம் பிடுத்து கோவில் செல்லும் வேளைகளில் உணரவில்லை சாமியுடன் தான் நடக்கிறேன் என்று தன் உதிரத்தில் உயிர் கொடுத்தாய் உழைப்பிலே உணவளித்தாய் கஷ்டத்திலே பணமளித்தா

ஒரு நாள் இரவு

ஒரு நாள் இரவு பாலைவன பூந்தோட்டமா என்ன நம் காதல் .,,- அல்லது பனிவிழும் எரிமலையா நம் உணர்வு ,தெரிந்து இருந்தால் இரவில் விடரும் சூரியனாய் பிறந்து இருக்கலாம் ,, நான் கண்ணீர் விடும் வேளைகளில் என் கவிதைகள் தான் என் கரம் பிடிக்கின்றன தனிமையின் பிடியில் தலையணை உறவில் கண் மூடுகிறேன் கனவிலே நீ வர ,     தலையணை நானாக மடிசேரும்  வேளைகளில் திளைக்கிறது கன்னி உடல் தூங்கும் போதே தெரிந்து விடுகிறது எழ வேண்டும் என்று கடினம் தான் , அவள் கண்களில் காண்கிறேன் என் உருவத்தை ,,அவளும் பாவம் என்னை போலவே கட்டுக்குள் வைத்துள்ளாள் விடை தெரியாத கேள்விகள் எங்கள் மனதிலே வேள்வியாய் தோன்ற ,, சிரமம் என்று தெரிந்தும் அவளின் சேலைக் கடலிலே மூழ்க எட்டிப் பாய்கிறது கதிரவனும் கைகாட்டி எழுப்புகிறான் என்னால் தான் இயலவில்லை உன்னை கனவிலே பிரிய கூட,, என்ன ஒரு பொறாமை அவனுக்கு,,- தினமும் நம் கனவை களைத்து விடுகிறான் முகம் கழுவாத என் கண்களில் மங்கலாக வந்து செல்கிறது அவளின் உருவம் மஞ்சள் பூசிய அவள் முகத்திடையே மழுங்கி விடுகிறேன் ந

என் வீட்டு கண்ணாடி

               என் வீட்டு கண்ணாடி                                                 பழுதாகி போனதென்று நினைக்குறேன் என்னையும்  அழகாய் காட்டுகிறது என்னுடன் தான் நீயும் இருந்தாய் ,பின்னர் ஏன் உனக்குமட்டும் வயதாகவில்லை நான் சிரித்தால் சிரிக்கிறாய் அழுதாலும் அழுகிறாய் உன்னை காட்டிலும் உற்ற நண்பன் எவனடா!! என் வீட்டின்  காவலாய் நீ இருக்க ,மற்ற கண்களில் இருந்து தடுப்பதேனடா உடைந்தால் வீட்டிற்கு ஆகதென சொல்லும் அளவாய் நெருங்கிவிட்டாய் என் வீட்டில் நீ என் முகத்தை மட்டும் கண்கிறாயே வெறுக்க இல்லையா உமக்கு அந்த அளவா நேசிக்கிறாய் என்னை ,,-_இல்லை ""காதலா"" என்மேல் உனக்கோ பொய் பேச தெரியாதே எப்படி பிழைக்கிறாய் இவ்வுலகிலே இவ்வளவு அழகை பிரதிபலிக்கும் உனக்கு வாயை ஏன் கொடுக்க மறந்தான் ஒருவேளை உனக்கும் காதல் திருமணமா உலகில் நீ ஒருவன் தானடா ஏழை முதல் பணக்காரன்வரை சமமாய் காண்கிறாய் படுக்கை முதல் பாத்ரூம் வரை எங்கும் நீ ஒருவேளை கடவுளா நீ என்னவொரு வரம் உனக்கு எல்லா கன்னிகளையும் துயிலுரித்து

Matttikonden ,,,,

அவள் இதய இடுக்கிலே சிக்கி தவிக்குறேன் வெளிவர வழியில்லை உன் கன்னக்குழியிலே விழுந்து தொலைகிறேன் தூக்கவும் ஆளில்லை உன் விழியின் அழகிலே தொலைந்து போகிறேன் திரும்பவும் இயலவில்லை உன் கூந்தல் சிறகிலே மாட்டி முளிக்கிறேன் எதுவும் புரியவில்லை
Avalukkaga என் இதய துடிப்பை நிறுத்துகிறேன் என்னவள் துயில் உறங்குகிறாள் , கவிதைகள் இல்லை இவ்வுலகிலே இக்கவிதையை வர்ணிக்க!!! தமிழ் அகராதியில் தேடிபார்த்தேன் இல்லை என்ற பதில் தான் எனக்கு கிடைத்தது .. பிரம்மன்னும் பிரமித்தான் போலிருக்கிறது உன்னை படைத்தது தவிறவிட்டதற்கு இயல் இசை நாடகத்தில் உன் பெயரும் சேர ஆசைபடுகிறேன் இச்சிற்பத்தை உணர்த்திட .. தெளிவாய் தெரியவில்லை நான் தொலைந்த நாள் ,, அழகிற்கும் மேலாய் ஒருவார்த்தை இருந்தால் கூறுங்கள் அவளிடம் கூற வேண்டும் சிலையை நடக்க செய்தவன் யாரோ உன்னை கண்ட பின்னர் தோன்றுகிறது உன் இதழோர மச்சமாய் நன் இருக்க உன் நுனி விரல் தீண்டுகையில் மோட்சம்  பெற்றேன் உன் அழகின் வசந்த பார்வையில் நம் உலகம் சிறிதாய்  ஆனதடி கவிதைகள் கன்னிதீவாய் நீள கஷ்டங்கள் தேதி தாளை குறைய நேரங்கள் உன் நுநி விரலில் சுருங்க தூங்கா பொழுதுகள் சதமடிக்கின்றன ..