Posts

Showing posts from July, 2017

இருமண பிரசவம்💓💏

இருமண பிரசவம் காதல்,  இருமனங்களுக்கு இடையே நடக்கும் பிரசவம் அது தொடும் தொலைவில் இருந்தும் தொடமுடியாத பனிக்காற்று உச்சிமீது பளீரென்று அடிக்கும் பங்குனி வெயில் தவழ்ந்து வரும் காலில்லாத குழந்தை வாடியே போகாத ஒரு மலர் சொற்களால் விளக்க முடியாத ஒரு கவிதை எண்ணி பார்க்க முடியாத பகல் நட்சத்திரம் பார்வை இல்லாத விழிக்கோளம் கண்ணிடையே ஊசிபோன்று உறுத்தாமல் நிற்கும் மாயஜாலம் , மந்திர உலகின் கைப்பிடி , சுவர்கத்தின் வாசல்படி நரகத்தின் கொல்லைபுறம் முள்ளில் இருந்தும் குத்திடாத ஒருவகை ரோசா கவிஞ்சர்களின் கருவறை இளசுகளின் இன்பசுரங்கம் காற்றிலே செதுக்கிய ஒரு சிற்பம் தீட்டவே முடியாத சித்திரம் ராட்ஷச அலைகளின் மேல் கொஞ்சி விளையாடும் ஜெல்லிமீன் வெள்ளிச்சம் இல்லாத விளக்கு அது தோடிராகம் பாடியும் சலிக்காத இசையது தேடி தேடி அலைந்தும் படம்பிடிக்க இயலாத படமும் அதுவே உணர்வுகளின் காட்டாற்று வெள்ளமும் அதுவே கண்கள் உலகின் மிகப்பெரிய கொள்ளைகாரர்கள் பார்த்த நொடியில் எதையும் கடத்தும் சக்தி அதற்கு மட்டுமே அமிர்தமும் அதுவே நஞ்சும் அதுவே , கண்களால் வயப்பட்டு நெஞ்சத்தால் இடைபட்டு அ