Posts

Showing posts from July, 2016

நிறமிகள் ஏறிடும் கண்

நிறமிகள் ஏறிடும் கண் கண்கள் முழுதும் நீரால் நிரம்பிய காலம் கரையேறி நீயால் நிரம்புகிறது நித்தம் வெண்மைக்கும் கருமைக்கும் மத்தியில் வாழ்ந்த என் காலங்கள் நிறமி பிடித்து வழக்கம் மாற்றி வீசியதும் உன்னாலே , வண்ணங்கள் ஏதும் நான் கண்டதும் இல்லை கவனிக்கவும் கவனித்திடவும் வைத்தது உன் கனிவு வசந்தங்கள் கண்டேன் முதல் முதலாய் என் ஸ்பரிசம் என் கைவிரல் தீண்டுகையில் வானம் மொத்தம் உன் கூந்தலாக காட்சி தந்திடுமோ என ஒரு வியப்பு கண்மணிகள் சிந்தாமல் உன் கண்ணின் மையின் கரைகொண்டு சூழ்கிறது என் வாழ்வின் எல்லைகள் விளக்கேற்றிய நேரம் பிரகாசிக்கும் விளக்காய் மஞ்சளான முகம் பளீருகிறது என் பார்வையின் குறுக்கே தாண்டவம் ஏனோ அழகிலே வீதிகள் தொடரில் சாமந்தி பூவின் வர்ணனையோடு ஒரு விளையாட்டு நீ மட்டும் அங்கே நடந்து செல்கிறாய் என்கிறது என் அகம் நிழலும் இங்கு நிறமாய் தெரியுதடி உன் பின்பம் விழுவதாலோ இல்லை உந்தன் எதிரோளிப்போ கட்டில் அடங்காத காட்டாறாக மாறிவிடுமோ உன் நெஞ்சம் என்னிடத்தில் இதயத்துடிப்பும் இயந்திர துடிப்பாய் வெடிக்குமோ காதலின் சூழ்ச்சமத்தில் , நியுரான் எல

தினம் நிதம்

தினம் நிதம் இரு இமைகளும் ஒற்றையாய் கழன்று விழ கருவிழியின் மச்சம் தெறித்து உன் உருவம் வரைந்ததுவிடுகிறது சட்டென முடியும் நேரத்தில் இதயம் செய்த தசை ஏதோ, காதல் தசையோ உன் பெயரின் வசையோ , உன் பெயருக்கு அடிமை ஆனதோ என் கைவிரல்கள் பார்க்குமிடமொத்தம் உன் பெயர் , சிலைகளில் இருந்து கழண்டு விழுந்து உன்னில் பொருந்தி கொண்டதோ அழகே உன் கூர் மூக்கு , பால்வழி அண்டங்கள் கண்டதில்லை யாவரும் உன் விழியின் அண்டத்திலே கண்டேனே நான் மட்டும் வதம் செய்யும் உன் பார்வையை எதை கொண்டு நான் மூட கண்கள் மூடிடவா மறைந்து மறைந்து உன்னை காண என்ன பூச்சியினம் நான் ? அப்படியாவது இருந்து இருக்கலாம் உன் பாதத்தின் சூடிலாவது இதம் கண்டு இருப்பேன் ,, எந்தவித தூரிகை கொண்டுனை வரைந்தான் என்பதே தெரியாமல் உன்னை மெய்துறந்து பார்க்கும் சிறுவன் போல் நான்  , உயிர் வந்து பூண்டதோ தூரிகையின் நார்களுக்கும் , ஆழி பேரலைகளின் வேகம் என்னவென்று நான் அறியா உன் வாசத்தின் வேகம் மட்டும் அறிவேன் ஒவ்வொரு முறையும் சாய்க்கிறதே அழகாக வஞ்சமில்லாமல் வளர்ந்தேனோ தெரியவில்லை , அன்னர்ந்தே பார்க்கிறாய் என்னையும் ந

குருட்டு வெளிச்சம்

குருட்டு வெளிச்சம் மெல்ல தவழ்கிறது உயிருள்ள ஒரு சிப்பி , தன்னுள்ளே முத்தினை அடக்கிக்கொண்டு மெல்ல தவழ்கிறது இரு கால் சிப்பி மண்ணின் கடல் மேலே , கல்லை கட்டி கடலில் போட்டாலும் கருவிற்கொன்னும் ஆகாதுன்னு ஒரு கேள்வி நீ கேட்க கடவுளையும் தவிக்க விட்டு என் தாயும் என்னுடனே பிறக்குமய்யா ரெண்டாம் முறையாக ., உன் வயித்த கிழிச்சு நான் பிறக்க வெளியவந்து நானும் கத்த > நீயும் கத்த மொதமொதலா நீ சிரிச்ச முழுசா உன்ன பாத்துபுட்டு , என் அழுகை நிக்கையிலே உன் நித்திரை இழுக்குமோ , ஒரு குட்டி கதையொன்னு  உனக்காக கொண்டு வந்தேன் அக்கதையும் உன் கதையும் ஒன்றாய் இருந்திடுமோ , நித்தம் நான் கண்முழிச்சேன் என் கண்ணும் படைக்குமுன்னே வெளியே ஒரு சத்தம் என்னவென்று நானும் கேட்க காதுமில்ல அப்போது மூன்றாம் மாதத்துலே என் உருவம் பெரிதாக நான் உணர்ந்தேன் உங்கரத்தை . மெதுவாய் நீ சீண்டும் நேரமெல்லாம் சுகமாய் நான் தூங்க சுத்திநிக்கும்  கடல் மட்டும் வத்திடுமோ வத்தாதோ என் கேள்வி நான் கேட்டேன் பதிலாய் ஒரு மர்ம முடிச்சினை நீ இட்டாய் , தொப்புள்கொடி , உன் முத்தம் மட்டும் நான் உணரவே இல்லை ,

புரியாத புதிர்?

புரியாத புதிர் ? மனதின் ஓரங்களில் கரை இருந்திடும் ஒவ்வொரு நிமிடமும் சிரிப்புகள் பொய்யாய் முடிகிறது . விடிந்திடும் ஒவ்வொரு காலைகளும் ஒரே போலதான் இருக்கிறது . கதிரவன் ஒளிக்கதிர்களுக்கு மட்டுமோ. பாடல்கள் கேட்கப்படுகிறது . இன்ப நேரத்தில் இன்பமாக துன்ப நேரத்தில் துன்பமாக . விலைகொடுத்து வாங்கப்படும் பொருட்களில் அன்பும் இணைகிறது. பொருளால் அன்பு கிடைத்திடுமோ அடியேன் , ஏழைகள் அனைவரும் சைத்தான்களோ . உங்கள் பணக்கார பார்வைகளில் .. அதானே சூரிய பொழுதுகளை கூட கடற்கரையில் கழிக்கும் கூட்டமல்லவா அந்தஸ்து. நிர்வாண உடுப்பில் உடலை மறைத்து . எல்லோரும் கர்வம் கொள்வதில்லை உண்மை உழைப்பால் வந்த பணம் கொண்ட எவரும் பணக்காரராய் நடப்பதும் இல்லை உண்மைதானே .. விடியற்காலை ஓடியும் பகல் பொழுதில் அமர்ந்துகொண்டும் இரவு பொழுதுகளில் குடித்தும் கழிகிறது ,பெரும்பாலான புள்ளிகளின் வாழ்க்கை , எங்கு தொடங்கி எங்கு முடிகிறது தெரியாமல் அலைந்திடும் இவர்களின் மனதுகளுக்கு பேராசை மோகங்கள் மட்டுமே மிச்சம். வாழ்வெனும் கடலில் மூழ்கிய பிறகே தெளிகிறது , அவரவர் நித்திரைகள் . ஆசுவாசம் செய்கிறேன்

காதலுடன் க கற்பனை

காதலுடன் கற்பனை சூரிய மார்க்கமாய் மத்திய வெயில் ஒன்று புவியின் கீழ்த்தளத்தை பார்த்து சிரித்துகொண்டே தன் அக்கினி வியர்வையை தூருகிறது நனைகிறேன் நான் அதில் . உடலின் மொத்த வெப்பமும் ஒரு புள்ளியில் இனைந்து கணம் கூட நேரம் விடாமல் என் நெஞ்சின் அருகே குளிர்வதாய் ஒரு பொல்லாத நினைப்பு . கடிகாரம் கொஞ்சிடுமோ காலம் தான் விடை கேட்குமோ தென்றல் கூட அனுமதி கேட்கிறது அவள் என்னை பிரியும் நேரத்தை எதிர்பார்த்து . விரல்களின் உணர்வுகள் தொட்டுவிட என்னை கேட்கும் மூளையின் ஒருவித பகுதி தானாக கேட்டு அனுமதி மறுக்கபடுகிறது உடனடி பதில் வந்தது அவளின் உள்மனம்  கூறியது . இறக்கைகள் படைக்கவில்லையே எப்படி பறக்கிறாய் என கேட்டாய் , தேவதையின் வாசம் பட்டது என பதில் கூறுகிறேன் . வாஞ்சனை கொள்ளாமல் எப்படி ஒரு கூறிய பார்வை செல்லமாய் கிழிக்கிறது என்னை மொத்தமாய் . விதிவிலக்குகள் விலகி செல்கிறது மதம் என் பாதத்தில் விழுந்து கெஞ்சுகிறது சாதியின் கோரப்பிடி நேற்றே நசுக்கப்பட்டது யோசித்து தான் காதலித்தேன் என தெரியவில்லை , ஆனாலும் யோசிக்குறேன், அவளின் உன்னத கைவிரல் சுற்றும் நாள் எங்கு என்று / அவ

புதிதாக எதற்கு.. புதிதாக்கு.

புதிதாய் வேண்டாம் புதிதாக்கு இதுவரை யாரும் அறிந்தது இல்லை பெண்களின் மனதின் ஆழம் ,, கடினமும் கூட கதிரவன் அனலினை போல . கார்மேகம் முழுவதையும் கண்ணுள்ளே அடக்கி மையாக்கி வைப்பவள் சிருதுளியில் உலகையே நிரப்பிடும் ஒரு அமைதி வெள்ளம் பக்குவப்படும் எரிமலையின் ஒர் இடம் போலவே நிர்கதியின் அர்த்தம் அவள் மனம் மல்லிகையில் உடல் கொண்டு மார்கழியின் குணம் கொண்டு சிலநேரம் பங்குனியின் கோவமும் நடந்திடும் காலையின் பொற்சித்திரம் மங்கள முகமே இச்சையின் ஆசையில் இணங்கியே ஆகிறாள் இயற்கையை அழைத்துண்டு மண்ணுள்ளே செல்கிறாள் பாவம் நீ மனிதி உன் கரங்களில் ஒடுங்கட்டும் உலகத்தின் போர்முகம் . சினங்கொண்டு எழுந்திடு பேதையும் நீயே அறிவையும் நீயே பவளத்தின் கணங்கொண்டு பெண்சிங்கம் உண்டோ வேட்டையின் மாற்றத்தில். ஆடையை உடுத்திடு ஆடையாய் உடுத்திடு காமத்தின் விழிகளில் கருணையை காட்டாமல் ஆடை என்பது உடலை மறைக்கத்தான் புரிந்திடு நிமிர்ந்திடு . தோழியும் நீயே அன்னையும் நீயே தமக்கையும் நீயே என் காதலி மனைவியின் மாற்றங்கள் நீயே கொலை என்பது முடிவுகள் அல்ல கோழைத்தனத்தின் தொடக்கமே நீதான் பாவம் எ

கை ஏந்தும் எதிர்காலம்

கை ஏந்தும் எதிர்காலம் தெருவோரங்களில் விற்கபடுகிறது ஏழைக்குழந்தைகளின் கல்வி , கை ஏந்தும் எதிர்காலம் , வண்ண மீனாய் வளர்த்து என்ன பயன் அலங்காரமோ , மீந்த உணவை கூட குப்பையில் கொட்டும் ஒரு கூட்டமே பசியால் வாடும் நாங்கள் ஏன் தெரியவில்லை உம் கண்களுக்கு கல்வியின் வியாபாரத்தில் தந்தையின் சொத்து ஏற்றுமதியாகிறது மதிப்பெண் இறக்குமதி ஆகிறது நுகர்வோர் புத்தக புழுக்களே , தெருவுக்கு தெரு வீடுகளை விட ,பள்ளிகளே அதிகம் இருந்தும் எழுத்தறிவில்லாதோர் முப்பது சதவிகிதம் வானில் இருந்து குதித்தவர்களோ கண்டதை பார்த்திடும் நம் கண்களுக்கு ,, இவர்களை கண்டும் பார்பதில்லையே அது  ஏன் வாடியதால் வாரப்படும் குப்பையாகிறது நேற்று முளைத்த பூக்களும் , மாக்கள் எம்மாத்திரம் மனத்தால் வடிவமைக்கப்பட்டு உடலால் செய்யபடுகிறது அநாதை குழந்தைகள் வானமே வீடாகிறது குடிசை இவ்வளவு பெரிதோ அத்தனை வசதிபடைத்தவரோ இக்குழந்தைகள் , கேட்பாரற்று .. நாதி இல்லாமல் நாய் போல் இருந்திடும் இவர்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள் மாதர் சங்க கதாநாயகிகளே பேச வாய் வரவில்லையோ சொல்லிடும் எனக்கென என்று யோசிப்போர் பலவிதம்

நடந்திடும் காதல்-2

முதல் பொட்டில் நீ ஏறிடவே முழங்கால் இட்டு தவழ்ந்து வந்தேனோ மூன்று முடிச்சுகள் நீ இடவே முதல் முதலாய் நான் சிரித்தேனோ புன்னகையின் காரணமே என் புன்சிரிப்பின் ஓவியமே எங்கே இருந்தாயாடா இத்துனை நாள் தவற விட்டேனோ , உன் நிழல் என்மேல் விழாமல் . என் ஜாமங்கள் இருட்டில் வாடியதே வந்த ஒரு கணம் நிலவே என் முகம் ஏறியதே. மாயம் செய்து என்னை கொண்டாயோ மனதால் என்னை கொன்றாயோ விழுந்தேன் அடா முதல் முதாலாய் உன் பாத தடம் கண்டு காதலில் என்னை பிழிந்தவனே என்னை எடுத்துகொள் உனதாக பதில் போதுமோ உனக்கு ? இரு மனம் ஏறிட உறவுகளை போலவே மழை வந்து ஆசி அருள மொத்தத்தின் மூலமாய் மூன்றாய் உயிரின் முடிச்சு இணைந்தது கள்வனின் கைகளால் கள்ளியின் கழுத்திலே சாங்கியத்தின் தேடலாக தென்றல் வந்து துணை புரிய அகதி மனங்களின் விளிம்புகள் மட்டும் இணைந்தே விட்டது ஒரு துளி தங்கத்தின் முடிச்சிலே காண நேரம் வாய்க்குமோ வானவில் மழைதனில் ஒன்றாய் நிற்பதை கண்டே கண்டேன் கண்ணருகே இஜ்ஜோடியின் வாயிலாக கள்வருக்கு ஒரு மடல், வெட்கத்தின் உச்சி முனையில் பேனா முனை கொண்டு தவழுகிறேன் கண்ணுக்கு ஒரு முத்தமிடு கண்ணோடு கதை பேசு

நடந்திடும் காதல்

நடந்திடும் காதல் நிழல் தரையினில் விழுகாத நேரம் . அவள் மேகத்தின் இருட்டு என்மேனியின் ஆக்கிரமிப்பு நடத்திட , வானங்கள் பொய்யாய் போகுமளவு அவளின் நெற்றி காண , சிந்தனையின் ஆணிவைத்து அடித்தார் போல அவளின் புகைப்படம் தொங்கியது என் உயிர்அச்சாணி பிடிகொண்டு . ஒரு ஒரு நொடியும் வண்ணமாகுமோ அழகே ,வசந்தங்களின் முடிவு பாதை உன் இல்லம் நோக்கிதான் நிற்குமோ , விபரீதமாய் போகுமடி , கண்ணிமையை மூடிவிடு , சற்றே நான் கடக்கும் வரை . அலைச்சல் கொண்டு தெருவில் கூட ,பூக்கள் பூக்குமடி எங்கே நீ நடந்த தடம் . வாசல் இல்லாத இல்லமாக அனைத்தும் என் சொந்தம் ஆகுதடி எனக்கென நீ இருக்கையில் உலகமே என் காலடியில் ஒருதலையாய் என் தலையும் உன் தலையை சுற்றிட உன் முக திருப்பல் கூட மண் பாற்பது ஏனடி . வழக்கமாய் பார்க்கும் அத்தனையும் வண்ணமாய் போகுமோ , ஆயிரம் நிறங்களின் எதுவடி நீ . பிரம்மிப்பில் உச்சம் உன் விழிகளின் மரண பள்ளம் தானே இருள்வதற்குள் வீடு செல்லாத உன் இமைகளுக்கு என் பார்வையின் ஆழம் மட்டும் அழகாய் புரிகிறதே , என் விரல் பிடிக்கும் வரை எங்கே நீ இருந்தாயோ என் கண்ணில் தெரிந்த பின்னே , என