குருட்டு வெளிச்சம்

குருட்டு வெளிச்சம்

மெல்ல தவழ்கிறது
உயிருள்ள ஒரு சிப்பி ,
தன்னுள்ளே முத்தினை
அடக்கிக்கொண்டு மெல்ல
தவழ்கிறது இரு கால் சிப்பி மண்ணின் கடல் மேலே ,

கல்லை கட்டி கடலில் போட்டாலும்
கருவிற்கொன்னும் ஆகாதுன்னு
ஒரு கேள்வி நீ கேட்க
கடவுளையும் தவிக்க விட்டு
என் தாயும் என்னுடனே
பிறக்குமய்யா ரெண்டாம் முறையாக .,

உன் வயித்த கிழிச்சு நான்
பிறக்க வெளியவந்து நானும் கத்த > நீயும் கத்த
மொதமொதலா நீ சிரிச்ச
முழுசா உன்ன பாத்துபுட்டு ,
என் அழுகை நிக்கையிலே
உன் நித்திரை இழுக்குமோ ,

ஒரு குட்டி கதையொன்னு
 உனக்காக கொண்டு வந்தேன்
அக்கதையும் உன் கதையும்
ஒன்றாய் இருந்திடுமோ ,

நித்தம் நான் கண்முழிச்சேன்
என் கண்ணும் படைக்குமுன்னே
வெளியே ஒரு சத்தம்

என்னவென்று நானும் கேட்க
காதுமில்ல அப்போது
மூன்றாம் மாதத்துலே
என் உருவம் பெரிதாக
நான் உணர்ந்தேன் உங்கரத்தை .

மெதுவாய் நீ சீண்டும் நேரமெல்லாம்
சுகமாய் நான் தூங்க

சுத்திநிக்கும்  கடல் மட்டும்
வத்திடுமோ வத்தாதோ
என் கேள்வி நான் கேட்டேன்
பதிலாய் ஒரு மர்ம முடிச்சினை
நீ இட்டாய் ,
தொப்புள்கொடி ,

உன் முத்தம் மட்டும்
நான் உணரவே இல்லை ,
சேமித்து வைத்தாய் என்பதை
இப்போது உணர்கிறேன் ,

என் தந்தையின் தொடுதலில்
சிலநேரம் குளிரும்
சிலநேரம் நெருப்பும்
சிலநேரம் இரண்டும்
சேர்ந்து இருக்கும்
எளிதாக காண்பேனே ,
அவர் இதழ் முத்தம் என்னைத் தொட .

நீ சீண்டும் நேரமெல்லாம்
என் உச்சிமுதல் பாதமும்
அமைதியை அடைந்தது
மெய்சிலிர்க்கும் உன் அன்பை காணவே
அழுதுகொண்டே வெளிவந்தேன் ,

நான் அழகோ
அருவெருப்போ
எனக்கது தேவையில்ல
உன் அன்பு மாறாது
அது மட்டும் போதுமென்றேன்
என் தோழன் கடவுளிடம் .

எப்படி உன் வயிற்றில் வந்தேன்
என புரியவில்லை
ஆனாலும் மகிழ்கிறேன்
உன்னை கண்டு

பக்குவமாய் தூக்குகிறாய்
மெல்லமாய் இடுகிறாய்
முத்தம் கூட முனுமுனுப்பாய் கொடுக்கிறாய் ,

இடுப்பு வலி தந்து நான்
பிறந்தும் ஒரு கோவம் உனக்கில்ல ,
மாறாக ஒரு பதிலை
நான் தருகிறேன் உனக்காக

என்னை பெற்றெடுக்க
நீ பட்ட அக்கஷ்டம்,
என் தவிற யார் ஆறிவார்?,

வலிதந்து நான் பிறக்க
என்ன பாவம் நான் செய்தேன் ,
பிறக்கும் போதே
நீ அழுதாய் ,
பிறந்தே பின்னே நான் அழுதேன்
நீ அழுவதை கண்டு,
>நீ சிரித்தாய்
நான் அழுவதை கண்டு
மொழிமுறை மாற்றம்

என் வாயில் இருந்து வரும்
ஒவ்வொரு வார்த்தைக்கும்
அர்த்தம் உன்னிடமே
என் பசிகளுக்கு நீ செவிகொடுக்கும்
நேர்கையிலே
தொப்புள்கொடி அருந்துவிடவில்லை
என நான் அறிகிறேன் ,

என்னை அழுகவைக்காமல்
இருந்திடவே நீ இருந்தால் ,
உன் கண்ணீர்களுக்கு
முற்றுபுள்ளியாக நான் இருப்பேன்
என் அன்னையே உனக்காக
நான் எடுக்கும் முதல் சபதம்
என் முத்தம் வாயிலாக ..

கவியரசன்,..

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு