எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பசியில் உணவு
வறுமையில் பணம்
தூக்கத்தில் கனவு
வேலைநேர உறக்கம்
படிப்பில் மதிப்பெண்
குழந்தை சிரிப்பு
முதுமையில் ஆதரவு
தாகத்தில் தண்ணீர்
சிந்தனையில் தெளிவு
அழுகையில் ஆதரவு
சிரித்து பேச உறவு
சிணுங்கி பேச காதல்
குழப்பத்தில் தீர்வு
தனிமையில் குடும்பம்
வெறுத்து ஒதுக்க எதிரி
மழைநீர் ஒழுகா வீடு
மாத முதல் சம்பளம்
மகிழ்ந்து விளையாட நண்பன்
குதித்து விளையாட கிணறு
உணவு விளையும் நிலம்

இவை எல்லாம்
எதிர்பார்ப்பின் உச்சமாய் இருக்க
ஏமாற்றமே பலருக்கு பெரிய எதிர்பார்ப்பின்
அன்பளிப்பாக  கிடைக்க,
எதிர்பார்த்து இருந்தலால் மட்டுமே
புரியும் எதிர்பார்ப்பின் தாக்கத்தை,,

ஆசையால் வரும் எதிர்பார்பினை விட
அன்பிற்குஎங்கும் உள்ளங்களிலே
எதிர்பார்பெனும் தீயாய் எரியா
அணைக்க கூட அன்பு  வருவதில்லை

தெருஓர பிள்ளைகளின் கண்களிலே
தினம் தினம் இருக்கும்
காட்சியின் விளக்கமே எதிர்பார்ப்பு

அனாதை பிள்ளைகளின் இல்லத்திலே
எளிதாய் காணலாம் அன்பின்
பார்வையே  எதிர்பார்ப்பு

முதியோர் இல்ல மரங்களிலே
ஒளிந்து உள்ளது பல
மனங்களின் எதிர்பார்ப்பு

மழை வருமா என
வானத்தை காணும் விவசாயி
கண்களில் காணலாம் எதிர்பார்ப்பு

சிறகை நீட்டி நீர்மேல்
திரியும் கொக்கிலே
காணலாம் எதிர்பார்ப்பு

காதலை சொல்லும் தருணம்
அவள் முடிவை அறிய
ஏங்கும் நொடியில் உள்ள எதிர்பார்ப்பு

கணவன் உடன் சேரும்
பொழுதிலே எழும் சிலிர்ப்பு
விளக்க முடியாத எதிர்பார்ப்பு

அடுத்த நாள் காலை
உதயம் கண்போமா என்ற
நோயாளியின் சிரிப்பும் எதிர்பார்ப்பு

விளக்க முடியாத பல
உண்மைகளில் ஆடு புலி
ஆட்டம் ஆடுகிறது இந்த எதிர்பார்ப்பு

எவ்வளவு கூறினாலும் இக்கவிதை
விளங்குமா என்பது
எந்தன் எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பிலே முடியும்
தருணங்கள் இருக்கும் வரை
இந்த எதிர்பார்ப்பை எதிருங்கள்
உங்கள் வாழ்வின் உண்மையை காணலாம்  ,,,,

எதிர்பார்ப்பு இருக்கும் வரை
ஏமாற்றங்கள் இருக்கும் என்பது
கட்டாயம் இருக்கும்,

எனவே உங்களுக்காக எதிர்பார்ப்பு ,,,,

Comments

Popular posts from this blog

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு