எது திருப்தி????

எது திருப்தி
கைசிசு மார்பிலே உதடு இட
நான் என்று கொஞ்சிட முன்வரும்
பாலும்,, சிலிர்த்திடும் தாயும், இதுவா ?

காதல் கள்வன் மேனியில் தீ வைக்க
ஆசை துணை  கலவியில் கலந்திட
கட்டில்களோ ஆனந்த நடனமாட இதுவா ?

கண்களின் வியர்வையை துடைத்திட
கணபோழுதுகள் குறைந்திட
கனவுகள் நிறைவேற ,,களம் மாற ,இதுவா?

கால்கள் மேடையேற நினைவுகள்
நிஜமாக!!! கைகள் ஒன்றோடொன்று
அடித்து கொள்ள அந்த நொடி ..இதுவா ?

நால்வரின் வயிற்றை நம்மால்
நிறைத்திட பசி எனும் தீ விலகிட
கை இரண்டும் இணைய ,,வரும் வார்த்தை
கண்கள் பேசிட ,,இதுவா

கண்கள் வரைந்திட கைகள் பார்த்திட
உருவம் ஆன காதல்
அழாகாய் தெரிய ,,இதுவா

நெல்மணி சிரித்திட,உழவன் கலங்கிட
மனதும் நிறைந்திட,மாடுகள் விரைந்திட
பலபேர் உணவாக நெல்மணி ,, இதுவா?

தோல் கசங்கிட கால்கள் நாட்டியமாட
முதுமையிலும் உழைத்துத்தான்
உண்ணுவேன் என்கிற பிடிமை ,,இதுவா

மாதம் முதலே பணத்தை
வங்கியில் எடுத்து எண்ணி பார்த்து
சிரித்துகொண்டே கடனடைக்க  போக ,,இதுவா

மூங்கில்கள் இசையமைக்க
இமைகள் உறங்க போக
கனவுகள் கதவினை திறக்க ,,இதுவா

தந்தையின் இடது பையிலே
இருபது ரூபாய்காக திருடனாக
படம் பார்த்த நேரம் ,,இதுவா

பள்ளியிலே ஓரடி அளவுகோல்
இரண்டாக பகிர ,என் நண்பனின்
தியாகத்தில் வந்த கண்ணீர் ,,,இதுவா

மழைக்காக ஒதுங்கிய இடத்திலே
என் மனம் நினைந்திட காதல்
என்ற பூச்சி ஒட்டிக்கொண்ட துளிர்ப்பு ,,இதுவா

மதிப்பெண் அட்டையில் நான் வாங்கிய
முப்பதை என்பதாக்கி கையெழுத்து
வாங்கி, மாட்டமல் இருந்த நிமிடம் ,,இதுவா

பள்ளிகூட அறையிலே பல காதல்களை
பூட்டி விட்டு வெளிசெல்லும் வழியிலே
புதிதாய் பூத்த காதல் ,,இதுவா

எது ,,இவற்றிலே எது திருப்தி ,,
என் பார்வையில்,
எனக்கும் தெரியவில்லை
எது திருப்தி என்று
காவல் நிலையத்தில்
புகார் அளிக்க வந்துள்ளேன்
கண்டுபிடித்து தர ,,,,
தெரிந்தால் சொல்லுங்களேன்,,

``````~காரணம் மனித மனது அடங்காதது ...`````

நாய்களுக்கு பழைய உணவே திருப்தி
வாகனத்திற்கு எரிபொருளே திருப்தி
ஆடைகளுக்கு துவைத்தலே திருப்தி
மண்ணிற்கு மழையே திருப்தி
மழைக்கோ மரமே திருப்தி ,,,

மனிதற்கு???????????????????????????

கேள்விகளுடன் கவி ,,,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

மல்லிகை மொட்டு

கனவு கள்வன்