கிராம காதல்... தொடர்வு 2

தொடர்வுடன் ,,,காதல்

மஞ்சள் கொம்புகள்
கயிற்றிலே சேர
காற்றும் சுதிபாட
கண்ணீரும் நாதஸ்வரம் வாசிக்க
மழை வந்து ஆசிக்க ,
முடிந்தது இருமணம் ,,

ஆள்இல்லா  சோலையிலே
ஆசிக்க வந்த ஐம்பூதமும் ஒதுங்க
விழியிலே புதிதாய் மழை
என்னவள் என்னுடன் இருக்கிறாள் என்று
அவனும்,காதல் கணவனாக மாற்றியது
குறித்து அவளும் ,,,

வழி நெடுங்க வாழை பந்தல்
வரவேற்க குருவிகள்,
மணம் சூழ பூக்கள்,
மகிழ்ந்தது  மங்கையர் மனம்
ஏனோ இடுக்கிலே ஓரமாய்
சோகமும் ஒட்டிக்கொள்ள ,
கள்வன் கண் பார்க்கையிலே
வதந்கிப்போனது சோகமும்,

சில்லறை மணியாய் அவள் சிரிக்க
சிதைந்து போனது கள்வன் மனம்
கண்ணருகே கனி இருந்தும்
மனமோ வரவில்லை உண்பதற்கு

கண்கள் இரண்டும் இணைய
இணைந்தது மனங்களின் சொந்தங்கள் வெளியே
கொளுத்தப்பட்டது கூரையும்
விடுக்கப்பட்டது விரல்களும்
பிரிக்கப்பட்டது மனங்களும்
சேர்க்கபட்டது உயிர் மட்டும்

கடைசி வரை கைவிரல்
இடுக்குகளில் நான் இருப்பேன் என
கூறிய கள்வன் மனம் ,கடக்கயிலே
கண்ணீர் கூட சொந்தமில்லை ,,,

காதல் இணையும் சான்றாக
எழுந்தது வீரமும் ,
மறைந்தது சோகமும்
சிரித்தது உதடுகளும் ,
ஓடியது சொந்தங்களும்
பார்த்தன கண்களும்
காணாமல் போயின சாதிகளும் ,
மதங்களும் ,மொழிகளும்...

பிரிக்க வந்த சொந்தங்கள்
வாழ வைக்க போவதில்லை ,
சேர வந்த மனங்களோ
உடையவும் போவதில்லை
,,,உண்மையில் மனம்
இருந்தால் வாழத்தட்டும் ,,

காதல் என்றும் அழிவதே இல்லை
கண்களில் நீர் இருக்கும் வரை
சின்னமா என்னவென்று புரிவதே இல்லை
காதலும் கண்ணீரும் ..இல்லை
இமைகளும் சொந்தமோ,..

இருக்கும் மனங்களில்
நிற்கும் காதலும் ,..
கனவுடன் வாழும் சொந்தங்கள்
கைகெட்டும் தொலைவுகளில்
இருப்பது இல்லை,காமத்திற்கு மட்டும்
வாழும் சொந்தங்கள் நிலைப்பதும் இல்லை .


மனதோர சிணுங்கலுடன்
வாழும் எண்ணற்ற
மனங்களுக்கு சமர்ப்பணம்ச
சாதிகொலைகள் அகல
வாழ்க்கை ஒன்று தான்
வாழ்ந்து பாருங்கள் பிடித்து.
பிரிக்க நினைத்தால் உதறுங்கள் ,..
சிதறி விடும்,,,,,


அன்புடன் ..
உங்கள் .......ம,கவியரசன்

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு