கண்ணுக்குள்ளே பொக்கிஷம்

கண்ணுக்குள்ளே பொக்கிஷம்

விழி திறந்து மெய் மறந்தால்
சொல்லேதும் கேட்கவில்லை என்மனதும்,,,,,
“சிறகிட்டு பறக்கிறதோ என்னவோ
எல்லை கேளாமல் எட்டிபாய்கிறது ,,
காதலின் ஆழம் தான் என்னவோ
மூழிகிட நெஞ்சம் கொஞ்சிட ,
சிதறி ஓடும் காக்கை போல
சிக்கு பிடிக்குறது உயிர்க்கு

பாடியலையும் குயிலிசையாய்
அவள் குரல் காற்றிலே அலைந்தோட
கரையும் பனியாய் என் மனம்

விளக்கிருக்கும் ,வெளிச்சமும் இருக்கும்
விடியல் பொழுதிலே ,இரண்டும் இல்லை
எந்தன்  விழியிலே
பச்சை குத்திய கண்களாய்
ஓடிபிடிக்கிறது மனதும் உன்னை

வார்த்தைகளின் நீளம் விளங்காமல்
அமைதிக்கொல்லும் பொழுதுமிது ,
உள்ளே பழத்தையும் வெளியே
முள்ளை காட்டும் பழாசுலையாய்
அவள் காதல் ,,

எட்டி பிடிக்கத்தான் மனது வரவில்லை
கனவுகளோடு குடும்பம்நடத்தும் கொடுமையிது
எனினும் என்றும்
கண்ணுக்குள்ளே பொக்கிஷமாய் அவள் ,,,,,,,

கவியரசன் ,,,,,,,/////////////////

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு