தலைப்பில்லா கவிதை

தலைப்பில்லா கவிதை

காதல்கடக்கும் வேளைகளில்
கண்ணீர்கூட சுகம் ஆவதேனோ

இருக்கும் இருநூறு எழுத்துகளில்
எதை கோற்பது உன்னை கூற

விழியின் தவம் என்னவோ
விழித்தே நிற்கிறது உன்னை காண

இமைகளும் என் பேச்சினை கேட்காமல்
எதோ ஒன்று செய்யுதடி

உறங்கவில்லையடி மனது
பைத்தியம் போல் புலம்பி தவிக்கிறது

பச்சை பிள்ளையாய் என் மனம் தவிழ
தூக்க கூட நீ வராதது ஏன்???

ஒருதலை காதல் என்று எவன் பெயர்
வைத்தது மனமோ இங்கில்லாமல்
அவளிடம் சேர இருதலைதானே...>>>

தனிமைகூட இனிக்கிறது பெண்ணே
உன் நினைவுகள் நெஞ்சிலே பதிந்ததால்,

கைபேசி கைவிலங்காக மாற
இரவின் நீலம் கூடுதடி

சிந்திய துளிகளை சேர்த்தால் கூட
சமுத்திரம் ஆகுமடி ,ஒருதுளி
கூடவா உன்னை சேரவில்லை

நொடிபோழுதுகள் நொண்டுதடி
நீ இல்லா இடங்களும் பேசுதடி

நினைவுகள் என்னை எரிக்க
கண்ணீர் வந்து அனைக்குதடி

நீ இல்லா பொழுதுகள்
காற்றில்லா உலகம் ஆகுதடி
,மூச்சு காற்றும் சேரலையே
உன் மூச்சில்லா காற்றிலே
ஏனடி கண் பார்த்தாய்
இதழ் சேர்த்தாய்
கை கோர்த்தாய்
நினைவுகளும் கேட்குதடி உன்னை .....

வரமாய் வந்து சாபமாய்
போனேதேனோ ,,
விழி இரண்டும் வற்றவில்லையடி
பார்க்கலாம் எத்தனை வலிமை
என் காதல் என்று

கண்ணாடியும் தாடி
வைத்து ,மதுவால் உடல் நிறையுதடி
நெஞ்சிலே நீ இருக்க
இதய துடிப்பும் விடுமுறை
கேட்குதடி,,,,

கவியரசன் ,..........

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

மல்லிகை மொட்டு

கனவு கள்வன்