மல்லிகை மொட்டு

மல்லிகை மொட்டு

கூந்தலுக்கு நீ அழகா
இல்லை உனக்கு கூந்தல்
அழகா ,புரியவில்லை
என்னவள் தலையினிலே
நீ குடியேறும் தருணத்திலே

வெள்ளை நிறமெப்படி வந்தது
தெரியவில்லை ,நிறம் பொருந்த
படைத்தானோ ,வரம் வாங்கி
படைக்கப்பட்டதோ ,விளங்கவில்லை

உன்னிடமும் ஒரு கேள்வி ,
அவ்வளவு உயரத்திலே நிற்கிறாயே
மெல்லிய கையிரினை பிடித்தவாறு ,
பயம் இல்லையோ ,,
சாகசம் செய்கிறாயோ ...என்னவளுக்காக

பாவம் நல்ல காரியத்திலும்
நீ ,கேட்ட காரியத்திலும் நீ
யாரடா நீ ...
விதவை பெண்களுக்கு
என்ன பாவம் இழைத்தாய்
ஏன் உன்னை சூடுவது இல்லை ,

கன்னி பெண்களின் தலையிலே நீ
இருக்கையிலே பதறுதடா
நெஞ்சம் ,,நான்  இருக்க வேண்டிய
இடத்திலே நீ

உதிர்வதிலே  .சிலிர்கிறது உள்ளம்
எப்படியோ வீழ்ந்துவிட்டான் பாவி என்று

என்னவொரு வாசம் உமக்கு
என்னவளிடமிருந்து எப்படி பெற்றாய் ,
எவ்வளவு ஒட்டியும் எனக்கு வரவில்லை ,

வரம் பெற்றாயோ அவளிடம் ,
.தன் இனத்திற்காக,

ஆனாலும் தினமும் தூக்கிலே
ஏற்றுகின்றனர்,சுரணையே இல்லாமல்
அடுத்தநாள் தலையிலே நீ .
படுக்கையிலே நீ ,வரமடா உமக்கு ,
,முதலிரவிலே மூன்றாம் நபராய் நீ
எல்லாம்  (உறுப்பினையும்) எப்படியோ
தொட்டு விடுகிறாய் ,என்ன பயன்
அடுத்தநாள் குப்பையிலே நீ
வாழ்வடா உமக்கு
சாதித்தே சாகிறாய் ..

பாவமடா நீயும் ,
என்னவள் திரும்பி பார்க்காமலே
வாடுகிறாய்,

ஒருவேளை எல்லா பூக்களும்
தலையின் பின்னால்
வைக்கபடுவதர்காகவே
வாடுகின்றன ,நினைக்கிறேன் நான் ..

என்னதான் கூறினாலும்
ஈடாகாது ,ஆண்களின் பாவத்தினை

என்னவளின் தலைக்கு பின்னே
என்னை  சிரித்து பார்க்கும்
மல்லிகை மொட்டு ,
பார்த்து புலம்பும் கண்கள் ,,,

வேதனையுடன் கவியரசன் ,,,
விளையாட்டாய் கற்பனை ,,,,

  

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு