அர்த்தமற்ற அமைதி



ஆழ்கடல் தூங்கும் வேளையிலே
பல கடல் எழுகிறது
தலையணை அருகே ,

எண்ணிப்பார்க்க ஆசையில்லாமல்
நட்சத்திரங்கள் கோவப்படும்
வேளையிலே ,
முறைத்து கொண்டிருக்கும் நிலவு ,

சிரிப்பிலே சிறைவைத்து
போனவர் ஏனோ திரும்பவில்லை
மனதருகே ,
விழியிற்கும் வெட்கமில்லை
கதறிக்கொண்டே இருக்கிறது
மனதிற்கும் பூட்டு இல்லை
சாவியும் அவனிடமே ,,

கால்கள் ஓய்வில்லாமல்
நடக்கிறது அனுமதி இல்லாமலே ,

கனவுகள் கலைகிறது
காற்றேதும் அடிக்கவில்லை,

நெஞ்சமோ உடைகிறது
ஆயுதமும் ஏதுமில்லை

சிலையும் வடிக்கிறது
என் கண்கள் உன்னை
கண்ணீரால் ,

இவ்வேளை நிலவும்
நீளும் நிலவும்
நீடிக்கிறது அர்த்தமற்ற அமைதி ,..

வார்த்தையின் ஆழமோ
உன் பெயர் ,.........
துடிக்கிறது இதழும் .

கவியரசன் ,,,,ஜஸ்ட் பீலிங்க்ஸ் 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு