காதல் கோவை


நிலவும் வெட்கப்படும் தருணம்
தரையில் தெரிகிறது
தேவதை முகம் ,..

ஆகாயம் என்பது தொலைவு அல்ல
நீ விலகும் நேரத்தினை விட ...

வெளிச்சம் கூட இருட்டாகும் பெண்ணே
உன் மந்திர மேனியினால்,

பகலெல்லாம் இரவாகும்
பளிங்கு உதட்டால் நீ
சிரிக்காத பொழுதிலே ,

பனிபாறையும்
பனைவெல்லமாகும்,
கல்லிசெடியும்
ரோஜாவாக மாறும்
என்னடி பெண்ணே
உன் இதழின் வசியத்திலே ,

கதைபேசும் கண்களின் முன்னே
மீன்கள் வாயடைத்து போகும் ,

என்னதான் மலரோ
வாசம் கூட நாறுகிறது ,
உன்னை முகர்ந்த பின்னால் ,

வார்த்தைகள் செய்த சாபமோ
வழுக்கியும் கூட
வருவதில்லை வெளியே ,

கண்ணே மணியே கொஞ்சிட
கவிஞன் இல்லை நான் ,
ஆக்கிவிட்டு போவது ஏனோ .

அகண்ட பார்வையும் சுருங்குமடி
உன் ஒற்றை முடி நீ
ஒதுக்கையிலே ,

கட்டுடல் மேனியும்
காலாவதியாகும் ,


நெற்றியிற்கும் பாதத்திற்கும்
உள்ள தூரங்கள்
பாதாளம் தொடுகின்றன ,
ஒற்றை அடி நீ கடக்கையிலே ,

எழுதிவைத்து தான் செய்தானோ
இச்சிலையை ,என்னவொரு
போட்டி பிரம்மனிடம் ,
போட்டி வைத்தவன் நான்தானோ ,

கடற்கரை காற்று கூட
கவிபாடும் ,
என் அருகே உன்
மூச்சு வருவதிலே ,

பித்து பிடித்தவன் போல்
புலம்புகிறேன் ,
வேடிக்கை மட்டும் பார்ப்பதேனோ,

விளக்கணைக்கும் தருணம் வரை
தெரியவில்லை
சுவர்க்கம் தொலைவில் இல்லை என்பது ,,
நெடுதூர பயணம் கூட
சுகமளிக்கிறது ,
இருட்டின் பாதையிலே ....

காதலுடன் கவி ....

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு