Posts

Showing posts from August, 2016

கடக்கும் நிகழ்காலம்

கடக்கும் நிகழ்காலம் வெள்ளை காகிதத்தின் மெத்தையிலே தவழ்ந்து செல்லும் கவிதை நீ பிடித்து எழுதும் எழுத்தாணி .நான் நான்கில் திசைகள் மறந்து போனது குவியம் மொத்தம் உன் திசை பார்த்தே விளக்கில்லா இரவினை போலானதடி என் வாழ்வும் மின்மினி பூச்சியாய் உன் அன்பு கொஞ்ச நேரம் மட்டும் இறந்துவிட்டால் என்ன ? உன் மூச்சின் பிடியில் சிக்கி நானும் , தேய்ந்து போகிறேன் உன் கண்மை குச்சியாய் என் காதல் விடியல் யாரைத்தான் எழுப்பிடவில்லை , நான் மட்டும் விதிவிலக்கு காதலின் இரவில் நிலவும் நான் காதலின் பகலில் கதிரும் நான் உறக்கமேன்பது எனக்கேது ? உன் விழியின் மொழி அறிந்த பின்னே ஒரு தலையாய் நான் சுற்றினாலும் சலித்து போகவில்லை என்னவளே உன் காற்றில் தக்கையாய் நான் ! முறுக்கி விடுகிறது உன் பார்வை இரும்பாய் என் மனம் திரும்பி விடுவாய் என்றே நான் திரும்பியதில்லை நிமிடத்தில் பாலைவனம் நொடியிலே பசுமை வனம் என்னவோ மாயம் அனைத்தும் உன்னாலே நடந்து தான் செல்கிறாய் நிச்சயம் நடந்து தான் செல்கிறாய் உறுதி கேட்கிறது என் விழிகள் தேவதை அன்றோ சிறு ஏமாற்றம் மின்னலின் மறுபெயரோ உடன

உன் சிரிப்பு

உன் சிரிப்பு இடிகள் ஏதும் இடித்திடவில்லை மின்னலும் வந்ததாய் தெரிந்திடவில்லை சப்தம் கேட்டு அடங்கி முடிகிறது வானவில் காட்சி . கணநேரம் கிட்டுமோ காண நேரம்தான் கிட்டுமோ மறுநொடியில் களைந்து விடுகிறது மேகம் வரைந்த ஓவியம் என்ன வகை தின்பண்டமோ தெரியவில்லை மறுநொடியில் காலியாகிறது வந்தவுடன் மனம் சென்றவுடன் காற்றடிக்கும் திசையெல்லாம் வர்ணம் ஆகுமோ இல்லை .உன்னை கடந்ததால் இருந்திருக்கும் வசந்தங்கள் வரவேற்கும் வாரங்கள் காத்து நிற்கும் தெருமொத்தம் உன்னை காண சேர்ந்து நிற்கும் அழகே உன் அழகின் தரிசனம் காணிடவோ. உன் உதட்டின் வரிகளை நீ விரித்து பற்கள் வானத்தை பறவைகள் பார்க்க இடையே வந்து செல்லும் காற்றாய் உன் நாவு எழுதிவைத்து செல்கிறது ஒற்றை நொடிகளில் ஆயிரம் பக்கங்களை ஒற்றை சிரிப்பினால் . என்ன ஒரு கவிதை அன்றோ . குளிர்காலம் வெயில்காலம் மொத்தம் உன் முகமோ சிரித்தால் குளிர் முறைத்தால் வெயில் , நடுவில் வரும் மழை மட்டும் உன் காதல் , மின்னலின் புகைப்படம் உன் சிரிப்பு கவியரசன் .

காதலின் நுனி.

தளிர் வீசும் ஒரு காலம் கனவோடு கவிதையும் பேசும் தென்றல் என் மூச்சை கடத்தி அவள் ஆடையில் ஒட்டும் மாயம் அரங்கேறும் மந்தை விழிகளிலே இளையவள் கடந்திடும் அக்கணத்திலே என் உயிர் நாடி மொத்தம் ஸ்தம்பித்து ஒரு பொட்டில் தெறிக்கும் என் நெற்றியடி , நேர்த்தியாய் செய்த அப்புருவம் என் விழி கோணத்தில் ஏறிக்கொண்டு வானவில்லாய் மாறி வளைகிறது பூகம்பம் வீசாமல் பூ கம்பம் என்னெதிரே வீசி செல்கையில் தோற்றே போகுதடி, அப்பூகம்பம் , நெடுங்காலம் கழித்து ஒருநாள் மலரும் மொட்டென உன்சிரிப்பு நிற்கையில் மற்றவை எதற்கு . கவிதைகள் பேசும் முன்னர் காற்றும் பேசுதடி விழிகளால் உன்கோலம் என் நெஞ்சில் காற்றடித்தும் அழியாமல் உன் பேரை கேட்குதடி , வாழ வந்தவள் நீதான் என்றும் என் மனதுக்கு சொல்லிவிட்டாயோ பழையவை கழிந்து புதியன புகுகிறது நிகழ்காலம் .உந்தன் ஏமாற்றம் அதிகரிக்கும் என நான் அறிவதில்லை உன் காதல் பாடத்தில் தெரிந்து கொண்டும் அறிய மாறுகிறது ஆழ்மனது ஆசைகள் அடிக்கடி புயலாய் அடித்திடும் போதெல்லாம் தடுப்பணை எழுப்பி தடுக்கிறது கருங்கல் மேடெழுப்பிய அவ்விழிகள் , கூச்சத்துக்கு உன் குணத்தினை