Posts

Showing posts from September, 2016

பூக்களின் புயல்🌠🌠☁🌸👱

பூக்களின் புயல் சஹாரா சஞ்சலபட்டதோ குளிர்ப்ரதேசமாய் என் கண்களில் மட்டும் தென்படும் இடமெல்லாம் பனித்துளிகள் ஒன்றின்மீதேறி ஒன்று விளையாடிகொண்டு கால்வைத்த இடம்தடம் பதிய நான் சென்ற இடம் ஏது மந்திர ஜாலம் ஏதும் நிகழ்கிறதா என எனக்குள்ளே ஒரு கேள்வி யார்கண் பட்டது மணற்மொத்தம் பனியாக தொலைவிலே பூக்களின் புயல் மெதுவாய் நகர்ந்து என்னை நோக்கியே புயல் கொஞ்சம் விலக உள்ளிருந்து கால்முளைத்த ஒரு தேவதை பூக்களும் வீழ்ந்ததோ இவள் கொண்ட அவ்வழகில் பூவிற்கும் சற்று வேறுபட்ட ஒரு உருவம் அவள் அழகில் உண்மையில் பின்னே நிற்கும் அவ்வளவும் , மைநிறமும் கடன்வாங்கும் அவள் கண்ணிடையே ஊர்ந்துசெல்லும் விழிமுகத்தில் எந்த உலகில் வானவில் ஒருநிறத்தில் நின்றதோ அவ்வுலகில் இருந்து கடந்து வந்து பொருந்திகொண்டதோ இவள் முகத்தில் ஒரு குளத்தில் இருவேறு நிறம் எப்படி சாத்தியபட்டதோ நான் அறியேன் , ஐயோ பரித்துவிட்டனரே என அஞ்சியே போனேன் , பார்த்தால் அது அங்குதான் உள்ளது என்ன இடத்தில் உள்ளது சிவப்பு பழங்கள் மயில்தோகை இங்கே சுருக்கமின்றி அதுவல்லது ஒரு புடவை அவள் உடுப்பில் கண்களை கயிறு கொண்

இன்பக் காட்டினூடே. 👯💏

இன்ப காட்டினூடே திருப்பங்கள் நிறைந்த சாலையிலே நான் மட்டும் நேர்வழியில் புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகம் போலவே , கண்ணுக்கு புலப்படாத காதல் அலைகள் மட்டும் இருவேறு தொலைவுகளில் , மேகங்கள் என்னதான் வெண்மை என்றாலும் கருநிறம் சேர்ந்த பின்னரே மழை என பொழிகிறது இதில் நான் கருமையோ மழையோ வானவில்லுக்கும் புதுவர்ணம் தந்து அழகு படுத்தியதடி உன் சிரிப்பு நீ லேசாக உன் இதழ்களை திறந்து மூடுகையில் தென்றல் கூட காவல் தான் , சொர்க்கம் செல்லும் இருவழிகளை அழகாய் கண்டுவிட்டேன் ஐயோ அது உன் மூக்கின் வாசலோ இமைகளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் ஒரு நொடி திறக்கையில் என் உயிர் நீராகிட கடல் எப்படி வந்தது அடியே பாலை வனத்தின் அருகே வாயருகே நிச்சயம் இனிப்பை வைத்து வீண்பேச்சு எதற்கென்று உன் புலம்பல் என் காதுபட கேட்கிறது , இருந்தாலும் என் மனமோ , தீண்டிவிட தயக்கம் , மெதுவாய் ஒரு வலி சில்லென்று என் இதயத்தின் மேற்பரப்பில் அதையும் அழகாய் எப்படி நான் கூற வார்த்தகைகளில் , மெலிந்து விட்டதோ வானம் என சற்றே பயந்துவிட்டேன் அடடே இது என்ன என்று ! கதிரவன் மட்டும் செந்நிறத்