Posts

Showing posts from March, 2016

மௌனத்தின் வடிவம்

மௌனத்தின் வடிவம் கதிரவன் உதிர்த்த பின் தான் புரிகிறது பல உயிர்களின் உண்மை நிலை , அர்த்தவன காட்டிலே எதையோ தேடும் விலங்கை போல் , விடை தெரியாத உலகிலே அலையும் மனித சடங்கள் , கனவுகளுக்கும் கைகால் முளைத்தது போல் கண்களிலே அத்தனை மகிழ்ச்சி உதாரனமாய் ஒரு வாழ்வுவேண்டும் என்றால் தெருவோர இயல்பாய் , தினம் தினம் காணும் துன்பத்தை உடுத்தி அதிலும் இன்பம் காணும் ஒரு பிழைப்பை வாழு , சட்டங்கள் எல்லாம் விடுமுறை எடுத்தது போல எத்தனை விரோதம் வெளியிலே எல்லாம் வீசும் காற்றை போல் மறையுமென ஒரு நம்பிக்கை மனதிலே , இத்தகைய சுழலிலே எழும் ஒரு கணம் மௌனத்தின் வடிவம் ,

விடியற்காலை ஈரம்

விடியற்காலை ஈரம் நட்சத்திரம் ஏதோ இறங்கிவிட்டது போல நடுவானில் வெளிச்சம் இல்லாமல் நம்பிக்கை இல்லா மனது நம்ப மறுக்கிறது நம்பி சொன்னவளை ....... நன்குதான் நடந்தது நாட்பொழுது முழுவதும் நங்கூரமாய் அவள் நினைவு வாட்டி எடுக்க நசுங்கிபோவேனே நான் நடந்தது எல்லாம் நினைவிலே இருக்க நெஞ்சமது நேசம் மட்டும் வேண்டுமென நச்சரிக்க நலிந்து விடுமோ பயத்திலே நனைந்து விடுகிறது  வியர்வையில் நல்லது தான் மனதும் தேட நக இடுக்கிலும் அவள் வாசம் நண்பனின் துணையும் கேட்காமல் நடுசாம பொழுதுகள் நகர்ந்து செல்ல ,, நாட்டியம்போடுகிறது கண்ணீர் துளிகலும் நன்னீர் குளம் போல் விடியற்காலை ஈரம் என்னை எழுப்புகிறது ,,,,

கண்ணுக்குள்ளே பொக்கிஷம்

கண்ணுக்குள்ளே பொக்கிஷம் விழி திறந்து மெய் மறந்தால் சொல்லேதும் கேட்கவில்லை என்மனதும்,,,,, “சிறகிட்டு பறக்கிறதோ என்னவோ எல்லை கேளாமல் எட்டிபாய்கிறது ,, காதலின் ஆழம் தான் என்னவோ மூழிகிட நெஞ்சம் கொஞ்சிட , சிதறி ஓடும் காக்கை போல சிக்கு பிடிக்குறது உயிர்க்கு பாடியலையும் குயிலிசையாய் அவள் குரல் காற்றிலே அலைந்தோட கரையும் பனியாய் என் மனம் விளக்கிருக்கும் ,வெளிச்சமும் இருக்கும் விடியல் பொழுதிலே ,இரண்டும் இல்லை எந்தன்  விழியிலே பச்சை குத்திய கண்களாய் ஓடிபிடிக்கிறது மனதும் உன்னை வார்த்தைகளின் நீளம் விளங்காமல் அமைதிக்கொல்லும் பொழுதுமிது , உள்ளே பழத்தையும் வெளியே முள்ளை காட்டும் பழாசுலையாய் அவள் காதல் ,, எட்டி பிடிக்கத்தான் மனது வரவில்லை கனவுகளோடு குடும்பம்நடத்தும் கொடுமையிது எனினும் என்றும் கண்ணுக்குள்ளே பொக்கிஷமாய் அவள் ,,,,,,, கவியரசன் ,,,,,,,/////////////////

காணாமல் போன வார்த்தைகள்

காணாமல் போன வார்த்தைகள் இளந்தளிர் மேனியும் இலையுதிர் காலமும் ஒன்றாய் வரும் சமயத்திலே வாடி அடிக்கிறது கோடைகாற்று , விழிகோலம் ஒன்றாய் மாற எலெக்ட்ரான் பாய்ச்சல் மனதிலே பாய என செய்வது துளை விழுந்தது ,, அதில் இறங்கிவிட்டாள் அவள் , பேர்த்து எடுக்கிறாள் உயிரை ஆழத்திலே இருந்து ஆடைகள் சீராய் மாற ஆண்மகன் பட்டம் வந்தது அன்புகொடுக்க ஒருஜீவன் அமைதியில்லாமல் அடம்பிடிக்கும் மனசு , திராவகம் போல் அவள் மேனி என்னை உருக்கிட காதல் கசிந்து ஒழுகியது எரித்து எரித்து என்னை கொன்ற என்மனம் அவளை நோக்கி பாய்ந்தது உயிர்பயணம் வைத்து செய்தது வேலையை வார்த்தைகள் ஒருவழியாய் விழுந்தன வெளியே பாதி உயிர் அவளிடம் இருக்க என்னிடம் வந்து சேர்ந்தது மீதி உயிர் விட்டு விட்டு துடித்த இதயம் ஒரே அடியாய் துடிக்க உள்ளே வந்து சிக்கிகொண்டால் அவள் வளந்தது துளிர் விட்ட செடியாய் காதல் ,, என்றும் ஏதோ ஒரு புயலை போல இக்கணமும் அவளை கண்டால் காணாமல் போகின்றன  வார்த்தைகள் ,,, கவி ,,,,..........//////

சந்தர்ப்பம்

சந்தர்ப்பம் மஞ்சார மழையினிலே மனதுகளின் வெதுப்பினிலே கண்மூடி வரும் சுகங்கண்டு இளம்பறவை சந்தர்ப்பம் தேடுதம்மா .. காலம் ஓடும் திசையினிலே காற்று செல்லும் வேகத்திலே கண்ணுக்கு மறைவாய் பல திறமைகள் தேடுகின்றன ,,சந்தர்ப்ப சாலையை ... விழிமேல் மூடும் இமைக்கும் உடல்மேல் மூடும் தோலுக்கும் என்ன தெரியும் சந்தர்ப்பம்,,, தோல் மேல் உள்ள ஆடைக்கும் விழிபார்க்கும் ஒருவர்க்கும் மட்டுமே கிடைக்கிறது சந்தர்ப்பம் சந்தர்பங்களும் சந்தர்ப்பம் தேடும் நேரமிது,,, ஓடுங்கள் பிடியுங்கள் அடையுங்கள் ஒருமுறை மட்டுமே கிட்டும் மறவாதீர் ,,, இதுவும் பொக்கிஷம் போலதான் .. தவிரவிட்டால் இவர் கிடைக்கமாட்டார் .. நெற்றியில் இருபுருவம் இணைத்து என்ன தோன்றுகிறதோ அதனையே செய் ,,, வெற்றிபெற வாழ்த்துகள் நம்பிக்கையுடன் கவி ..///

நிுர்

நீர் நிஜமும் மறையும் தருணத்திலே நிழலும் கரையும் விஷயத்திலே , நெஞ்சம் உருகும் சமயத்திலே காதல் நுழையும் கலங்கத்திலே கண்ணிலே தோன்றி இமையை நினைக்கும் நீயா ,,, காலங்கள் வலியது , காரணங்கள் நிறைந்தது கண்ணிலே தூசி விழுந்தாலும் காயங்கள் உடலில் நிறைந்தாலும் களிம்பு கூட உன்னால் தானே ,, நீயா கற்பனைக்கு கவித் தந்து கடவுள் அனுப்பியா வந்தாய் , விக்கினாலும் நீதானே , துக்கத்திலும் நீதானே கக்கினாலும் நீதானே சொக்கினாலும் நீதானே பத்தினாலும் நீதானே திட்டினாலும் நீதானே வாடினாலும் நீதானே வறுமையிலும் நீதானே யார் நீ ,,எல்லாவற்றிகும் முன்னிர்கிறாய்,, இருவது முப்பதில் காணாமல் போய்விடுவாய்என இப்போதே  கூறுகிறார்கள், என்ன ஒரு மாயம் ,, கதிரவன் கண்டதும் மறைகிறாயே உனக்கும் அவனுக்கும் என்ன சண்டை ,, இருப்பதாலோ என்னவோ உன்னருமை புரியவில்லை இவர்களுக்கு ,, கடல் முழுதும் இருக்கிறாய் என்றிருக்கும் இவர்கள் அறியா, பருக முடியாதென்று ,, பிறப்பிலும் நீ பசியிலும் நீ உடலிலும் நீ உயிராய் நீ உணர்வாய் நீ இறப்பிலும் நீ , என்ன சொல்வது காப்பாத்துங்கள் என் நண்பன் இறக்கும் தேதி இப்போதே வந

அழகு என்பது????

அழகு என்பது???? அணுப்பிளவை மேற்கொள்ளும் அவள் கண்களோ கார்மேகம் கொடுத்த கூரையோ கண்களின் ஈர நிழலோ கதிரவன் கொடுத்த ஒளியோ கலைஞன் வரைந்த ஓவியமோ ,, கற்பனை கதையோ காலைபொழுதின் காற்றோ மழைபோழுதின் இருட்டோ ...மறைத்து போகுமே மழழை சிரிப்பிலே ....அழகே அது தானே இலையுதிர் சோலையோ இஞ்சியின் சுவையோ பாலின் நிறமோ பசுவின் மடியோ குயிலின் சத்தமோ கடலின் அமைதியோ கன்னியின் மேனியோ கலங்கரை விளக்கமோ தாயின் அன்பிலே சிறிதானது ,,,அழகே தாய் தானே . சிரிக்கும் உதடுகளுக்கு ஓய்வளிக்கும் முதுமையோ செரிக்கும் வயிற்றினை அமைதிகாக்கும் வறுமையோ கண்னுக்கு நிம்மதி தரும் குருடோ கத்திநாளும் கேட்காத காதோ ஒவ்வோர் நிலையிலும் புரிதலே அழகா கட்சி தருகிறது // வைரமுத்துவின் வரிகளோ வாலியின் தத்துவமோ கண்ணதாசன் அனுபவமோ தீண்ட தூண்டும் இசையே ஆகிறது அழகு .... காதுகளின் இடுக்குகளுக்கு மதியிலே ஒளிந்துகொள்ளும் காதணிகளும் மூக்கின் மேல் ஒய்யார மிடுக்கில் அமரும் மூக்குத்தியோ கழுத்துக்கு கீழே கண்களில் பார்வை சரியும் வகை அணிகலனோ என் அழகின் மார்பை அணைக்கும் உரிமை இல்லா உடையும் இடுப்பிணை கிள்ளும் ஒட்டியாணமும் ஐயோ

மழலைமொழி

மழலைமொழி பேசிடத்தான் வார்த்தைகள் வரவில்லை அமைதி பேசுதடா ஆயிரம் வார்த்தைகள் வழக்கில் இருந்தாலும் நீசொல்லும் அம்மா ஆகுமா கண்ணோர கண்ணீருடன் நீ என்னை பார்க்கையிலே பாவங்களும் ஒட்டிகொல்லுதடா என் தங்கமே .. கதறி அழும் போதிலே காதிலே கண்ணிவெடிகள் வெடிக்குதடா உனக்கு உணவு ஊட்டுவதை விட உலகிலே கடினமென்பது எது இடுப்பிலே உன்னை சமாளிக்க போர்களங்கள் வேணுமடா இரவிலே நிலவும் கூட உறங்கலாம் உன் சத்தங்கள் ஓய்வதே இல்லை பௌர்ணமிகள் கூட வராமல் ஆகலாம் உன் சிரிப்புகள் நிறையும் தருணத்தில் உலகம் கூட குளித்து விடும் ஆனால் உன்னை குளிப்பாட்டுவது ஐயோ ,, கண்கள் கூட மூடி விடலாம் தொட்டில் ஆட்டும் சோர்விலே என்னவோ பேசுகிறாய் யாரிடமும் பேசுகிறாய் என்னாதான் பேசுகிறாய் எதற்கு பேசுகிறாய் கடவுளுக்கும் நமக்கும் இதுதான் வித்தியாசமோ ,,, உன் நெற்றியிலே குடிகொள்ளும் கருமை பொட்டுக்கு எத்தனை  வரம் கால்களின் கொலுசுகள் தவம் பெற்று வந்ததோ தரையிலே தவழும் உமக்கு இடுப்பிலே தவழும் வெள்ளி அறைஞான் கயிறும் எதோ பார்த்து சிரிக்கிறது குத்திவிடுமோ என்ற பயத்திலே தாலியும் அகல்கிறது பசியாற்றும் பொழுதிலே அழுத்த

கிராம காதல்... தொடர்வு 2

தொடர்வுடன் ,,,காதல் மஞ்சள் கொம்புகள் கயிற்றிலே சேர காற்றும் சுதிபாட கண்ணீரும் நாதஸ்வரம் வாசிக்க மழை வந்து ஆசிக்க , முடிந்தது இருமணம் ,, ஆள்இல்லா  சோலையிலே ஆசிக்க வந்த ஐம்பூதமும் ஒதுங்க விழியிலே புதிதாய் மழை என்னவள் என்னுடன் இருக்கிறாள் என்று அவனும்,காதல் கணவனாக மாற்றியது குறித்து அவளும் ,,, வழி நெடுங்க வாழை பந்தல் வரவேற்க குருவிகள், மணம் சூழ பூக்கள், மகிழ்ந்தது  மங்கையர் மனம் ஏனோ இடுக்கிலே ஓரமாய் சோகமும் ஒட்டிக்கொள்ள , கள்வன் கண் பார்க்கையிலே வதந்கிப்போனது சோகமும், சில்லறை மணியாய் அவள் சிரிக்க சிதைந்து போனது கள்வன் மனம் கண்ணருகே கனி இருந்தும் மனமோ வரவில்லை உண்பதற்கு கண்கள் இரண்டும் இணைய இணைந்தது மனங்களின் சொந்தங்கள் வெளியே கொளுத்தப்பட்டது கூரையும் விடுக்கப்பட்டது விரல்களும் பிரிக்கப்பட்டது மனங்களும் சேர்க்கபட்டது உயிர் மட்டும் கடைசி வரை கைவிரல் இடுக்குகளில் நான் இருப்பேன் என கூறிய கள்வன் மனம் ,கடக்கயிலே கண்ணீர் கூட சொந்தமில்லை ,,, காதல் இணையும் சான்றாக எழுந்தது வீரமும் , மறைந்தது சோகமும் சிரித்தது உதடுகளும் , ஓடியது சொந்தங்களும் பார்த்தன

கிராம காதல்... தொடர்வு..

தொடர்வுடன்......கிராம காதல் கல்லிபாலு வெடிக்கையிலே கன்னிபொண்ணும் சமஞ்சிருச்சு கட்டம்போட்ட சட்டஎல்லாம் சுத்தி சுத்தி வருகுகுது கண்ணிபோன்னு மனசு ஏனோ கள்வனையே, தேடுது காதலுடன் இவ பார்க்க கண்கள் ரெண்டும் சேருது கள்வனின் நெஞ்சிலே பச்சையும்தான் ஊருது காதல்கோட்ட ஏதும் இல்ல புழுதி பறக்கும் மண்ணுல மனசு மட்டும் போதுமையா சோறுதண்ணி சேரல தலப்பாகயிலே என் நெஞ்சு முடிஞ்சு கிடக்கு என் சீலையும் உன் விரலும்பட வரம் கேட்டு இருக்கு கண்ணுமையும் உன்ன கேட்டு உசுர தான வாங்குது கன்னக்குழி நீ இறங்க காத்தும்தான  இருக்கு கூழாங்கல்லு உசன போல உன்மேனி இருக்கு சுருட்டு பீடி தாலு போல என் தோலும் கிடக்கு ஏணிவெச்சும் எட்டலடி உன்காதல் அளவு கடுகளவும் இல்லையடி பயம்மும் தான எனக்கு கண்மணி சிந்தாம காலமுழுதும் காப்பேன் கூரசீல போதும் என வந்தவளே உமக்கு தொட்டும் தொடரும் நாளையும்,,,,,, கவியரசன் ...ர்

கிராமத்து ரசனை

கிராமத்து ரசனை கன்னுகுட்டி துள்ளியோட தாயின் கண்ணும் தேடுதம்மா கூடார பொந்தினிலே சிட்டுகுருவி வசிக்குதம்மா காளைகள் கன்னிகளை தேட கண்ணின் பார்வை ஓடுதம்மா கண்டாங்கி கூரையிலே பலஜோடி ஒளியுதம்மா காரவீடு முன்னாடி பாஞ்ஜாயத்தும் கூடுதம்மா மரத்தோட துணையினிலே பல சிசு தூங்குதம்மா வேர்வ பட்டு வேர்வபட்டு விளைநிலம் விளையுதம்மா நாளுக்கொரு பொழுதுமில்ல விளையாட ஆட்டம் இல்ல உழப்பாடம் நடக்குதம்மா கிராம காதல் நெல்பாத்த நீ விதைக்க எந்தன் மனம் புதயுதடி, நீ தொட்ட கஞ்சிசோறும் கறிசோறு ஆகுதடி வேர்வபட்ட உன் சீல சொர்கமா மாறுதடி கல்லுமண்ணு கஷ்டமில்ல மனசுலே குத்தம் இல்ல உழைத்திட வருத்தமில்ல உனைவிட ஏதுமில்ல உலகமே பெரிசு இல்ல என்னபுள்ள செஞ்ச நீ ...... தொடரும் ,,...... கவியரசன்.,,,

தலைப்பில்லா கவிதை

தலைப்பில்லா கவிதை காதல்கடக்கும் வேளைகளில் கண்ணீர்கூட சுகம் ஆவதேனோ இருக்கும் இருநூறு எழுத்துகளில் எதை கோற்பது உன்னை கூற விழியின் தவம் என்னவோ விழித்தே நிற்கிறது உன்னை காண இமைகளும் என் பேச்சினை கேட்காமல் எதோ ஒன்று செய்யுதடி உறங்கவில்லையடி மனது பைத்தியம் போல் புலம்பி தவிக்கிறது பச்சை பிள்ளையாய் என் மனம் தவிழ தூக்க கூட நீ வராதது ஏன்??? ஒருதலை காதல் என்று எவன் பெயர் வைத்தது மனமோ இங்கில்லாமல் அவளிடம் சேர இருதலைதானே...>>> தனிமைகூட இனிக்கிறது பெண்ணே உன் நினைவுகள் நெஞ்சிலே பதிந்ததால், கைபேசி கைவிலங்காக மாற இரவின் நீலம் கூடுதடி சிந்திய துளிகளை சேர்த்தால் கூட சமுத்திரம் ஆகுமடி ,ஒருதுளி கூடவா உன்னை சேரவில்லை நொடிபோழுதுகள் நொண்டுதடி நீ இல்லா இடங்களும் பேசுதடி நினைவுகள் என்னை எரிக்க கண்ணீர் வந்து அனைக்குதடி நீ இல்லா பொழுதுகள் காற்றில்லா உலகம் ஆகுதடி ,மூச்சு காற்றும் சேரலையே உன் மூச்சில்லா காற்றிலே ஏனடி கண் பார்த்தாய் இதழ் சேர்த்தாய் கை கோர்த்தாய் நினைவுகளும் கேட்குதடி உன்னை ..... வரமாய் வந்து சாபமாய் போனேதேனோ ,, விழி இரண்டும் வற்றவில்லையடி

காதல் துளி

காதல் துளி கால்கள் நடந்து சென்ற வேளையிலே ,ஆட்கள் இல்லா சாலையிலே என் புருவம் விரிய கண்கள் செய்த புண்ணியமோ என்னவோ இமைகள் கூட பிரமித்து மூடாமல் பார்க்க ,இதழ்கள் யாரை தேடியதோ தெரியவில்லை வாயை பிளந்து அது ஒருபுறம் பார்க்க விழியிலே பசைகுத்தியது போல அவள் உருவம் நீங்கவில்லை இன்றும் ,, அவள் பிரம்மனின் தவிறவிட்ட படைப்பு ,கார்மேகம் கூந்தாலாகி வானவிலுக்கு கருப்பேட்ரிய புருவங்கள் மலையின் விளிம்புடிய விழிகள் சிற்பமாய் செதுக்கப்பட்ட மூக்கும் சிலம்பால் இடப்பட்ட பொட்டும் கதிரவன் விடியல் கொண்ட நெற்றியும் அதில் ஏறிக்கொண்ட வகிடும் நாவல் பழம் நறுக்கிய உதடும் அதனருகிலே ஒட்டிக்கொண்ட கண்ணகுழியும் என வர்ணிக்கவே வார்த்தைகள் போதாது ஒருநாள் தான் சிரித்தால் என்னையும் பார்த்து பிடித்துகொண்டது காதல் காய்ச்சல்,மருந்தாக மனமோ அவளையே கேட்க , உடல் நிறைய பயத்துடன் அவளை நெருங்கிட அவளின் பார்வை விழவே பாதிநாள் போனது , பேசிடதான் சென்றேன் என்றாலும் வார்த்தைகளோ முட்டி முட்டி என் தொண்டையை புண்ணாக்கிவிட்டது , வாயருகே ஒன்றும் வந்து சேரவில்லை . பதட்டத்துடன் அவளை பார்க்க தரிசனம் எனக்கும் வாய்

எது திருப்தி????

எது திருப்தி கைசிசு மார்பிலே உதடு இட நான் என்று கொஞ்சிட முன்வரும் பாலும்,, சிலிர்த்திடும் தாயும், இதுவா ? காதல் கள்வன் மேனியில் தீ வைக்க ஆசை துணை  கலவியில் கலந்திட கட்டில்களோ ஆனந்த நடனமாட இதுவா ? கண்களின் வியர்வையை துடைத்திட கணபோழுதுகள் குறைந்திட கனவுகள் நிறைவேற ,,களம் மாற ,இதுவா? கால்கள் மேடையேற நினைவுகள் நிஜமாக!!! கைகள் ஒன்றோடொன்று அடித்து கொள்ள அந்த நொடி ..இதுவா ? நால்வரின் வயிற்றை நம்மால் நிறைத்திட பசி எனும் தீ விலகிட கை இரண்டும் இணைய ,,வரும் வார்த்தை கண்கள் பேசிட ,,இதுவா கண்கள் வரைந்திட கைகள் பார்த்திட உருவம் ஆன காதல் அழாகாய் தெரிய ,,இதுவா நெல்மணி சிரித்திட,உழவன் கலங்கிட மனதும் நிறைந்திட,மாடுகள் விரைந்திட பலபேர் உணவாக நெல்மணி ,, இதுவா? தோல் கசங்கிட கால்கள் நாட்டியமாட முதுமையிலும் உழைத்துத்தான் உண்ணுவேன் என்கிற பிடிமை ,,இதுவா மாதம் முதலே பணத்தை வங்கியில் எடுத்து எண்ணி பார்த்து சிரித்துகொண்டே கடனடைக்க  போக ,,இதுவா மூங்கில்கள் இசையமைக்க இமைகள் உறங்க போக கனவுகள் கதவினை திறக்க ,,இதுவா தந்தையின் இடது பையிலே இருபது ரூபாய்காக திருடனாக படம் பார்

விமர்சனம்

விமர்சனம் கனவுகளுக்கு கைவிலங்கிட்டு கொடுஞ்சிறையில் அடைக்கும் கொடியவன் தானே இவ்விமர்சனம் ,, கற்பனையின் வடிவத்தை அகங்குளிர செதுக்குவதும் விமர்சனம் தானே , சென்னையின் சாலைகளில் ஆடி கார் ஓடுவதும் அறைவயிற்று பசிக்காக அலைய வைப்பதும் விமர்சனம் தானே முயற்சிக்காக முயல்பவனை முடக்கி போடுவதும் வாய்ப்புக்காக அலைந்தவனை வாழ வைப்பதும் விமர்சனம் தானே ஒன்றிணைத்து பேசபடுவதின் தொடக்க புள்ளியும் வெற்றி பெற்றவரை வாய்குளிர வாழ்த்துவதும் இவ்விமர்சனம் தானே கண்ணெதிரே குளிர்ச்சியையும் மறைமுக வெப்பத்தையும் கொண்டிருக்கும் விமர்சனமே எத்தினை கண்கள் தான் உமக்கு,, நீ செய்த நல்லதை விட பாவங்களே மிகுதி ,,,! கல்லறையில் உள்ள பிணங்களுக்கே அறியும் உண்மை குற்றவாளி யார் என்பது ,,,தப்பி விட்டாய் உனக்கு நல்ல நேரம் தான் உனக்கோ உயிரும் இல்லை உடலும் இல்லை உருவம் கூட இல்லை பிறகு எங்கு தான் ஒளிந்துல்லாய் எப்படி கொல்கிறாய் எப்படி அணைக்கிறாய் , எனக்கும் சொல்லி தருவாயா ,,, ஒரு சொல்லிற்கே இத்துணை குணமிருக்க ,மனிதற்கு எவ்வளவு இருக்கும் புரிந்து தான் பாருங்களேன்!!! மாற்றம் நிச்சயம் .,,,,

வரம்

வரம் சந்திரனில் வீடும் செவ்வாயில் குடி நீரும் புதனில் காற்றும் வாங்கி என்னவளை குடியேற்ற வழி செய்தால் அது வரம் , சிரிப்பிலே உணவும் அன்பிலே மனதும் அணைக்க துணையும் என்னுடன் எப்போதும் இருந்தால் அது வரம் கனவிலே தூக்கமும் நிஜத்திலே உண்மையும் வாய்மையில் வெற்றியும் வாய்த்திட  வாழ்ந்தால் அது தான் வரம் குடிசையில் குடும்பமும் குடித்திட கூழும் கொடுத்திட மனமும் யாரிடம் இருந்தாலும் அவன் தான் வரம் பசுமை மாறாத கிராமமும் எழில் நீங்காது அடம்பிடிக்கும் வயலும் தன் காலை மண்ணிலே ஊன்ற துடிக்கும் கன்றும் பார்த்திட கிடைத்தால் அது வரம் இருப்பது போதுமென்ற மனமும் இருப்பதை கொடுக்கும் பணமும் மற்றவரை இன்பப்படுத்தும் குணமும் வாய்க்க பெற்றால் அது வரம் நுனி நாக்கே காதலிக்கும் தமிழும் சிறு உதடு அசைபோடும் இசையும் சிந்தனை மிகுந்த அறிவும் கிடைக்க பெற்றால் அது வரம் பிறந்தது எதற்கென்றும் வாழ்வது பயனென்றும் {மற்றவர்க்கு} இறந்தது நல்ல மனதமென்றும் சொல்ல கிடைத்தால் அது வரம் கண்ணீரில் நினையும் வேளைகளில் துடைத்திட கிட்டும் விரலும் மனம் பிளக்கும் தருணத்திலே அறுதல் கூற உறவும் வாய்த்த

மழை

மழை மழை தன் கருணையை மெல்ல வறண்ட மண்ணுக்கு காட்ட தொடங்கியது வானை நோக்கி பாவமாய் காணும் இச்சிறுமியை காணதான் இத்தனை வேகமோ இல்லை இச்சிறுமியை அள்ளி அணைத்திட மண்ணை வந்து அடைந்ததோ பறந்திடும் அனைத்தும் புகழிடம் தேட ஊர்ந்திடும் அனைத்தும் வெப்பம் தேட இளம்பருவ ஜோடிகள் காமத்தை தேட எத்தனை பசி தான் தீர்பாயோ தன் ஒற்றை துளியிலே புதை மண்ணிலே புதைந்துள்ள விதையும் ஏக்கத்துடன் எவன் என்று பூமியை பிளந்து காண துளி விரல் பட்டதும் சிலிர்த்து விரிகிறது ,,மொட்டு மாட்டு வண்டியின் ஈர ஒலியிலே விலகி செல்கிறது மண்ணின் வாசனை கண்ணில் நீர் ததும்ப மழை யாரை எதிர்பார்த்து அழுகிறது ஒருவேளை என்னைத்தான் எதிர்பார்கிறதோ ,,, மழை ஆணா பெண்ணா எதுவென்று தெரியவில்லை ,, அவளை கண்டதும் வெட்கப்பட்டு சாரலை தெளித்திட கன்னி உடல் கள்வனால் நினைக்கப்பட்டது ,,, மேக கூட்டத்திலே கடும் போட்டி போலிருக்கிறது இதனை மேகமும் கோவத்துடன் ஓரிடம் நோக்கி பேய, என்னவள் மாடியில் நிற்கிறாள்,, இவளை கொஞ்சிடதான் இதனை வேகமோ, கணபோழுதிலே தன் காதலை அவிழ்த்து விடுகிறது மழை நீரில் ஏ

சுதந்திரம்

சுதந்திரம் எது சுதந்திரம் பேச்சுரிமை கொடுத்துவிட்டு எது பேசினாலும் சிறையில் அடைப்பதா எழுத்துரிமை கொடுத்துவிட்டு எது எழுதினாலும் தவறு என்பதா குடியுரிமை கொடுத்துவிட்டு எது செய்தாலும் தடை போடுவதா இல்லை நினைத்தாய் என்பதை நினைவில் இருக்கும்படி செய்வதே உன் சுதந்திரம் இக்கால சுதந்திரம் ,,என்பது தாய் தந்தை மகனுடன் இருப்பது பெண்கள் தனியாக நடப்பது ஆண்பாதை  மாறாமல் இருப்பது எங்கயும் தமிழ் பேசுவது அனைத்திலும் பிறமொழி சேராதது விவசாயி விலை சொல்வது இடைதரகர் இல்லாமல் போவது இவை நம் நாட்டின் அத்தியாவசிய சுதந்திர தேவைகள் நம் தேவைகள் கதவுகள் இல்லா வீடுகள் காவல் இல்லா வட்டங்கள் குருவி பறக்கும் மாடிகள் அன்னியம் இல்லா வாணிபம் அயல் ஆள் இல்லா தொழில்கள் வேதிகள் இல்லா உணவுகள் கைபேசி இல்லா வாழ்க்கைகள் தூசிகள் இல்லா நகரங்கள் கள்ளி காட்டிலே நடந்து சென்றாலும் காரிலே ஊர்ந்து சென்றாலும் காலங்கள் மாறி போனாலும் கண்ணியம் குறைந்து போனாலும் சுதந்திரம் மட்டும் வாடகைக்கு கூட கிடைப்பதில்லையே,,,,

பெண் என்பவள் அதிசயம் ,

பெண் என்பவள் அதிசயம் , ஓர் உடல் பல வாழ்க்கை பல வடிவம் பல குணம் என்னவொரு அதிசயம் சேயும் இவள் தாயின் முன்னே தாயும் இவள் சேயின் முன்னே பாயும் இவள் கணவன் முன்னே பம்பரம் இவள் வீட்டின் முன்னே உடலிலே வீட்டை சுமக்கும் புதிரும் இவள் மனதிலே கணவனை சுமக்கும் கண்ணகி இவள் இவளின் ஆழ்மனத்தின் ஆழம் அழ்கடலை விட ஆழமானது உடலால் பலவீன பட்டாலும் மனதால் பலருக்கு சமம் அன்னையாக ஆணிவேராக இன்பமாக ஈகையாக உசிராக ஊடலாக எல்லையாக ஏமாற்றமாக ஐம்பூதமாக ஒற்றையாக ஓர் வம்சமாக ஔடதமாக விளங்கும் பெண் அதிசயமா இல்லை புதிரா,,என்னவென்றே புரியவில்லை படைக்கபட்ட அத்துணை கவிதைகளும் விரும்பும் ஒற்றை உயிர் இப்பெண்மை உயிரில் பாதியாக உடலில் மீதியாக உணர்வில் அதிகமாக உதிரத்தில் உயிராக உண்மையில் யார் இவள் கடவுளுக்கு பதில் படைக்கபட்டவளா இல்லை கடவுளாக அனுப்பபட்டவளா ஒர் படைப்பு இரு வீடு மூன்று உயிர் நாட்பது ஆண்டு ஐந்து பேர் ஆறு கால்கள் இவ்வளவா இப்பெண்மை இல்லை நீட்டினாள் இமயமலை உயரம் செல்லும் இவளின் பணிகளை என்