வரம்

வரம்
சந்திரனில் வீடும்
செவ்வாயில் குடி நீரும்
புதனில் காற்றும் வாங்கி
என்னவளை குடியேற்ற
வழி செய்தால் அது வரம் ,

சிரிப்பிலே உணவும்
அன்பிலே மனதும்
அணைக்க துணையும்
என்னுடன் எப்போதும்
இருந்தால் அது வரம்

கனவிலே தூக்கமும்
நிஜத்திலே உண்மையும்
வாய்மையில் வெற்றியும்
வாய்த்திட  வாழ்ந்தால்
அது தான் வரம்

குடிசையில் குடும்பமும்
குடித்திட கூழும்
கொடுத்திட மனமும்
யாரிடம் இருந்தாலும்
அவன் தான் வரம்

பசுமை மாறாத கிராமமும்
எழில் நீங்காது அடம்பிடிக்கும் வயலும்
தன் காலை மண்ணிலே
ஊன்ற துடிக்கும் கன்றும்
பார்த்திட கிடைத்தால் அது வரம்

இருப்பது போதுமென்ற மனமும்
இருப்பதை கொடுக்கும் பணமும்
மற்றவரை இன்பப்படுத்தும் குணமும்
வாய்க்க பெற்றால் அது வரம்

நுனி நாக்கே காதலிக்கும் தமிழும்
சிறு உதடு அசைபோடும் இசையும்
சிந்தனை மிகுந்த அறிவும்
கிடைக்க பெற்றால் அது வரம்

பிறந்தது எதற்கென்றும்
வாழ்வது பயனென்றும் {மற்றவர்க்கு}
இறந்தது நல்ல மனதமென்றும்
சொல்ல கிடைத்தால் அது வரம்

கண்ணீரில் நினையும் வேளைகளில்
துடைத்திட கிட்டும் விரலும்
மனம் பிளக்கும் தருணத்திலே
அறுதல் கூற உறவும் வாய்த்து
விட்டால் அது வரம்

சாலையோர மரம் அன்னையாக மாற
மற்றவர் பார்பாரே என்றில்லாமல்
வரும் உறக்கம் கூட வரம் தான்

தெருவிளக்கு வெளிச்சத்திலேயும்
படித்திட ஆர்வமுண்டு
என்பதை காட்டும் மகன்
பெற்றால் அது வரம்

தனிமையே நண்பனாகி மாறிவிட்ட
முதுமையிலே விளையாட பேரனும்
உரையாடிட உறவும்
அமைய பெற்றால் அது வரம்
இத்துணை கூறியும் எழுத
துடிக்கும் என் வேட்கையும் ஒரு வரம் தான்
,,,

வரத்துடன் ,தங்கள் மனதுடன்
கவியரசன் ,,,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு