கிராமத்து ரசனை

கிராமத்து ரசனை

கன்னுகுட்டி துள்ளியோட
தாயின் கண்ணும் தேடுதம்மா
கூடார பொந்தினிலே
சிட்டுகுருவி வசிக்குதம்மா

காளைகள் கன்னிகளை தேட
கண்ணின் பார்வை ஓடுதம்மா
கண்டாங்கி கூரையிலே
பலஜோடி ஒளியுதம்மா

காரவீடு முன்னாடி
பாஞ்ஜாயத்தும் கூடுதம்மா
மரத்தோட துணையினிலே
பல சிசு தூங்குதம்மா

வேர்வ பட்டு வேர்வபட்டு
விளைநிலம் விளையுதம்மா
நாளுக்கொரு பொழுதுமில்ல
விளையாட ஆட்டம் இல்ல
உழப்பாடம் நடக்குதம்மா

கிராம காதல்

நெல்பாத்த நீ விதைக்க
எந்தன் மனம் புதயுதடி,

நீ தொட்ட கஞ்சிசோறும்
கறிசோறு ஆகுதடி

வேர்வபட்ட உன் சீல
சொர்கமா மாறுதடி

கல்லுமண்ணு கஷ்டமில்ல
மனசுலே குத்தம் இல்ல
உழைத்திட வருத்தமில்ல
உனைவிட ஏதுமில்ல
உலகமே பெரிசு இல்ல
என்னபுள்ள செஞ்ச நீ ......

தொடரும் ,,......
கவியரசன்.,,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு