பெண் என்பவள் அதிசயம் ,

பெண் என்பவள் அதிசயம் ,

ஓர் உடல்
பல வாழ்க்கை
பல வடிவம்
பல குணம்
என்னவொரு அதிசயம்

சேயும் இவள்
தாயின் முன்னே
தாயும் இவள்
சேயின் முன்னே

பாயும் இவள்
கணவன் முன்னே
பம்பரம் இவள்
வீட்டின் முன்னே

உடலிலே வீட்டை சுமக்கும்
புதிரும் இவள்
மனதிலே கணவனை சுமக்கும்
கண்ணகி இவள்
இவளின் ஆழ்மனத்தின் ஆழம்
அழ்கடலை விட ஆழமானது
உடலால் பலவீன பட்டாலும்
மனதால் பலருக்கு சமம்

அன்னையாக
ஆணிவேராக
இன்பமாக
ஈகையாக
உசிராக
ஊடலாக
எல்லையாக
ஏமாற்றமாக
ஐம்பூதமாக
ஒற்றையாக
ஓர் வம்சமாக
ஔடதமாக
விளங்கும் பெண்
அதிசயமா இல்லை
புதிரா,,என்னவென்றே புரியவில்லை

படைக்கபட்ட அத்துணை
கவிதைகளும் விரும்பும்
ஒற்றை உயிர் இப்பெண்மை

உயிரில் பாதியாக
உடலில் மீதியாக
உணர்வில் அதிகமாக
உதிரத்தில் உயிராக
உண்மையில் யார் இவள்

கடவுளுக்கு பதில் படைக்கபட்டவளா
இல்லை கடவுளாக அனுப்பபட்டவளா

ஒர் படைப்பு
இரு வீடு
மூன்று உயிர்
நாட்பது ஆண்டு
ஐந்து பேர்
ஆறு கால்கள்
இவ்வளவா இப்பெண்மை
இல்லை நீட்டினாள்
இமயமலை உயரம் செல்லும்
இவளின் பணிகளை

என்ன சொல்வதென்று
திகைக்கும் முதல் முறை இது
காரணம் பக்கங்கள் போதவில்லை,
எழுதியும் விடியவில்லை

ஒன்றாய் இருந்தால் பரவாயில்லை
ஓராயிரம் உள்ளதே

கண்மணி நீயே
கருவறை நீயே
குடும்பமும் நீயே
குலமும் நீயே
சகலமும் நீயாய் இருக்க
எதை எழதுவது ,???????
கேள்விகுறிகளுடன்

பெண்கள் தின நல்வாழ்த்துகளுடன்
உங்கள் கவியரசன் ,


இது இவ்வுலகில் படைக்கப்பட்ட
படைக்கப்படவுள்ள
அனைத்து பெண்ணிற்கும்
சமர்ப்பணம் ,,,



Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு