Posts

Showing posts from October, 2016

அவள் காதல் நான்💖💁💃

அவள் காதல் நான் நேரங்களில் அழகு என்பது ஏது அன்று தான் கண்டேன் , ஒவ்வொரு நொடியும் என் பார்வையில் அழகானதை , சட்டென வானம் மொத்தம் தரையிறங்கி மேக போர்வை வீசி விளையாடுவது போல் ஒரு பிரம்மை தென்றல் அன்று எத்துனை வாசத்தினை சுமந்து என்மேல் மோதியதோ பூஜை அறையிலே நான் உணர்ந்த வாசம் சாலை அருகிலே இன்று மரம் தன் இயற்கை காதலியின் கைவிரல் பிடித்து மெல்ல அசைந்து கொண்டிருக்கும் வேளையில் குறுகுறுவென பார்க்கும் குருவிகள் தடதடவென பேசும் காகங்கள் மஞ்சள் மேனியில் பொட்டுவைத்தாற்போல் சிறு சிறு புறாக்கள் கொஞ்சி பேசி செல்லும் கிளிகள் எம்மிருவர் போலவே இணைபிரியாத காதல் பறவைகள் என எனக்கு நிழல் கொடுத்த அம்மரம் இத்தனை வேஷம் அணிந்து என் பார்வைக்கு விருந்தளிக்க அதோ நடந்துகொண்டே பெய்துவரும் அடைமழை தலை குனிந்த படியே என்னை நோக்கி வரும் பாசப்புயல் , என்னவென்று நான் கூற வார்த்தைகள் தொண்டைக்குழியை நசுக்கி நசுக்கி நான் பேசும் நான்கு வார்த்தைகள் கூட உன் பெயராக . வேற்றுகிரக வாசி போல துணைக்கு ஆளில்லாத அகதியை போலவே என் தேகத்தின் வியர்வை குளியல் என்னையே என்னிடம் தனிமைபடுத்த நான்கடி தூ

வயிற்று வலி கடிதம்😖💑👉😖😚🎹

வயிற்று வலி கடிதம் தலைவரே தயவு செய்து என்னை கொன்றுவிடு உன் மடிமேல் எனை சாய்த்து தனிமையில் அமிலம் பருக செய்திடாதே வலிகளும் வேதனை தரவில்லை சுகம் தான் , என் கண்ணீரும் உன் நினைவினை சுமப்பதால் , திரும்பிய திசையெல்லாம் நீ தெரிய போர்வைக்குள் புழுவாய் இங்கே நான் கண்ணுக்குள் நிலவுகள் தங்கிய காலம் எங்கு போயிற்றோ நினைவுகள் மட்டும் சுமந்து செல்கின்றன தேனீ பூச்சியை போல கண்ணீரால் என் கடல் நிரம்பி வழிகிறது நனைந்த உடுப்புடன் நீ நிலவில் குளுரும் என்று மட்டும் அறிந்த எனக்கு இன்றோ எரிந்துகொண்டே வெளிச்சம் தருகிறது அந்த நிலா கண்ணிமைக்குள் கட்டி வைத்த உன்னுருவம் என் கண்ணீரின் தடத்திலே மறைந்துபோன சோகம் என்ன மெல்ல மெல்ல நான் கட்டிய என் காதலின் சுவடுகள் ஒட்டடை சேர்ந்த உதவாக்கரை ஆனதன் காரணம் என்ன உதட்டு சாயம் பூசிய இடம் இன்று வடிவிழந்து நசுங்கிய சேலை கணக்காய் ஆனதன் உள்மூலம் என்னவோ விதியின் பெயரில் நான் மனதில் மணந்த உன்னை எப்படி பிரிப்பது உயிரில் இருந்து இறக்க முடியாமல் தவிக்கிறேன் மனதின் உள்ளே உன்னை கொண்டு மறக்க முடியாமல் தவிக்கிறேன் நினைவில் நிற்கும் உன்னை கொண்டு