வயிற்று வலி கடிதம்😖💑👉😖😚🎹

வயிற்று வலி கடிதம்

தலைவரே
தயவு செய்து என்னை கொன்றுவிடு
உன் மடிமேல் எனை சாய்த்து

தனிமையில் அமிலம் பருக செய்திடாதே
வலிகளும் வேதனை தரவில்லை
சுகம் தான் ,
என் கண்ணீரும் உன் நினைவினை சுமப்பதால் ,

திரும்பிய திசையெல்லாம் நீ தெரிய
போர்வைக்குள் புழுவாய் இங்கே நான்
கண்ணுக்குள் நிலவுகள் தங்கிய
காலம் எங்கு போயிற்றோ
நினைவுகள் மட்டும் சுமந்து செல்கின்றன
தேனீ பூச்சியை போல

கண்ணீரால் என் கடல்
நிரம்பி வழிகிறது
நனைந்த உடுப்புடன் நீ

நிலவில் குளுரும்
என்று மட்டும் அறிந்த எனக்கு
இன்றோ எரிந்துகொண்டே
வெளிச்சம் தருகிறது
அந்த நிலா

கண்ணிமைக்குள் கட்டி வைத்த
உன்னுருவம் என் கண்ணீரின்
தடத்திலே மறைந்துபோன
சோகம் என்ன
மெல்ல மெல்ல நான் கட்டிய
என் காதலின் சுவடுகள்
ஒட்டடை சேர்ந்த உதவாக்கரை
ஆனதன் காரணம் என்ன
உதட்டு சாயம் பூசிய இடம் இன்று
வடிவிழந்து நசுங்கிய சேலை
கணக்காய் ஆனதன் உள்மூலம் என்னவோ
விதியின் பெயரில் நான்
மனதில் மணந்த
உன்னை எப்படி பிரிப்பது
உயிரில் இருந்து
இறக்க முடியாமல் தவிக்கிறேன்
மனதின் உள்ளே உன்னை கொண்டு
மறக்க முடியாமல் தவிக்கிறேன்
நினைவில் நிற்கும் உன்னை கொண்டு

கருவறையில் நீ வந்தது இல்லை
கருவறையாய் தானே இருந்தாய் இத்துணை நாள் ,
பிரசிவித்த நேரம் பிரிவுதானோ
தொப்புள்கொடியாய் நம் காதல்
கத்தரித்தும் அது ஏனோ

நம் இருவர் நின்ற
ஒற்றைமரம்
நீ எங்கே என கேட்கிறது
வழமையாய் நம் மேல் விழும்
இரு பூ கொண்டு

கற்புக்கு அர்த்தம் தெரிந்த உனக்கு
என் வார்த்தைக்கு மட்டும்
அர்த்தம் புரிய இவ்வளவு நாள் ஏனோ,

என் சுருட்டை முடிகளில் தங்கிடும்
நீர்த்துளிகள்
உன் முத்தம் கேட்டு
கீழே விழுகாமல்
தினம் தாமாய் ஏறிடும்
நெற்றிபோட்டில் இன்று வடிவமே இல்லை
பூக்களின் வாசத்தில்
என்னை உணர்வாய் என்று நீ கூற
பூவும் வாடியது
நான் வைக்கும் முன்னரே

அலங்காரம் செய்து
நான் நிற்கிறேன்
மணப்பந்தல் பிணமாய்
சேலை சுற்றியும்
நகைகள் உடுத்தியும்
மாலை சூடியும்
நீ முதன்முதலாய் பார்க்க நினைத்த
ஒன்றை இருவிழிகள் பார்க்கிறது
மூக்கின் மேல் விரல்கொண்டு

கண்ணீர் ததும்புகிறது
கட்டளை இடுகிறது
என் இமைகள்
காலில் விழுந்த என் தகப்பன்
நினைவால் ,

திருமணம் நிச்சயமானது
தட்டுகள் இரண்டு மாறும் நேரத்தில்
ஒருமனம் மட்டும்
எரிந்துகொண்டு இருந்தது
அடுப்பங்கரையில்

அவன் இருந்த இடத்தில்
வேறொருவன் ,
நான் இருக்கும் இடத்தில்
என் புகைப்படம்

உண்மையாய் காதலித்துப்பார்
தியாகம் கூட
உயிர்கொடுக்கும் உனக்காக

நான்  இருந்த இடத்தை தருவதில்
எனக்கேதும் கவலையில்லை
நீ இருந்த இடம் மட்டும்
அப்படியே நினைவுகளில்
தென்றலில் ,மூச்சோடு கலக்கிறேன் உன் நெஞ்சில்
அந்தரத்தில் மிதக்கிறது என் கால்கள்
பிணம் என்கிறது ஊர்மக்கள்
வயிற்று வலி என்கிறது கடிதம்
உண்மை காரணம் என் அழகே
உன்னோடு நான் இருந்திடுவேன் நிச்சியம்
என் தந்தையால் என் கால்களில்விழுந்து
விட்டுகொடு என கேட்க இயலாது ,

பல வயிற்றுவலிகளுக்கு
பின்னால் ஒரு மனதின் வலி
நிச்சியம் இருக்கிறது

எழுத்தின் வடிவே
என் கண்ணீர்
மைத்துளிகள் , 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு