Posts

Showing posts from 2019

கிறுக்கன் உளறல் -2

வீழும் வான் , ஆசையில் புல் கனவோடு நீ கானலில் நான் விடிந்தது எழுந்தது என்றது கைப்பேசி கூச்சல். கண்ணிமைக்கும் கணத்தில் மின்னல் ஒளி என்னுள் தெறித்தது, வேடிக்கை பார்த்தேன் கண்ணாடியில்  என்முன் நீ. வாடகை வாங்கியது நீ வீசி சென்ற வாசனையும் காது துளைக்கும் சப்த நெரிசலும் புல்லாங்குழல் இசையானது.. கொலுசொடு இணைவுண்டு. ஐந்தடி தொலைவில் ஆச்சர்யம் காண்கிறேன், எடுத்துச்சொல்ல எவருமில்லை.

கிறுக்கன் உளறல்_1

நீல மயில் நித்திரை காண் மழலை வாடிய வானம் வருடிய தென்றல் வந்ததென்னவோ உன் நினைவு . மலை உச்சி மறுமுனையில் கயிர்கட்டி ஊஞ்சலில் ஆடும் காகித காற்றிடமே சென்றுவிட்டேன்.. மோட்சம்பெற. அவள் கண்ட தீ அகம் எரிய களைப்பாறும் தனிமையில் தனியே நான்.

கண்ணீர் துளிகள் - I

கண்ணோடு ஈரங்கள் காய்ந்தே போனாலும், விண்ணோடு நிலவுகள் தேய்ந்தே போனாலும் மண்ணோடு மழைத்துளி சேர்ந்தே போனாலும் என்னோடு நீ இருந்த அந்நேரம் மறந்தே போகலையே வினவிய கேள்வியெல்லாம் விழி முன் கடக்க விரல் பிடித்த நீ விண் தூரம் ஏனோ?

நிசப்த வானம் நீ

நான் செல்லும் தொலைவெல்லாம்  முடியாமல் நீள,  காணும் இடமெல்லாம்  அவள்முகம் ஆள விண்ணோடு சொந்தங்கள்  என்றெண்ணி படைத்தானோ  நிலவோடு நிதம்சண்டைஇட  இவளை இங்கு அடைத்தானோ  யான் கண்ட பசுமை  அவள் தாவணி போர்வைகள்  யான் கண்ட குளுமை  பணிவிழுகும் அவள் மூச்சு  நிசப்த வானில் நட்சத்திரம் முத்தமிடும்  சப்தம் உன் வாய்மொழியில் விளங்குதடி ,  அன்னதானமிட அமர்ந்தேன் நான்  அன்னமே தானமிட வருகையிலே  ஆகாய சிற்பங்கள் என்மீது பொழிகிறதோ  அவள் வந்து நனையட்டுமே  ..... தொடரும் .