Posts

Showing posts from May, 2016

சொல்லமுதே

சொல்லமுதே விண்மீன் செதுக்கிய பெண்மீனே . வால்மீன் தொடுத்த கண்மீனே .. வாழ்த்தாத உன் பெயரை கூறாது வாயும் உண்டோ ,, பவளதாமரை மலரே ,, பனிக்குள் பூத்த பங்குனியே ... பல்லாக்கில் செல்லும் பாதமே ,, விடை பெரும் காற்றே , விரும்பாத சுவாசமே ,, வித்தியாசம் காட்டும் உருவமே ,, விளையாடும் அழகே .. சிகரங்கள் தொடாத கண்விழியே ... எரிமலை சீண்டாத .. கரு மழையே . திகட்டி போகாத அமுதமே மதில் கட்டி காக்கும் உன் சேலைகளின் வானத்தில் .. முந்தானை முடிச்ச்குகளின் பிரதேசத்தில் பிரவேசிக்கும் வியர்வையின் எதிரியாய் என் பார்வை ,, மஞ்சள் பூசிய மேகங்கள் கண்டதுண்டோ ,, குங்குமம் வைத்த வானவில் தான் உண்டோ ,, தாமரை மருதாணி பூண்டதுண்டோ ,, வெள்ளை பனித்துளிகள் தங்கம் அணிந்தது உண்டோ .. எத்தனை எத்தனை அழகுண்டோ ,, அத்தனையும் மொத்தமாய் என் முன்னே ,, அடியே உன் அழகினிலே அடியேன் ஆக்கிடும் பேர் ஒளியே ,,, யாழ் இசையே ,, மெயதீண்டும் உன் கூந்தல் வாசத்தில் கொஞ்சமாய் சாகடித்து விடு ,, நீ புள் மேல் நடக்கயிலே ,, என்மேல் மிதித்து விடு ,, காதல் சொல்லும் என் மன கடற்கரையில் உன் பாதங்களின் தடங்களை ம

கள்ளிக்கு ஒரு மடல்

கள்ளிக்கு ஒரு மடல் புதிதாய் துளிர்க்கும் இலன்செடி போலவே காண படுகிறேன் ,, கண்ணாடியின் உடைகொண்டு எதோ மாற்றம் நிகழ்வதை அறிகிறேன் ,,,என் முக நாணம் நான் கண்டு ,, நெஞ்சுகூட்டின் சுவற்றின் மறுபக்கம் துடிக்கும் இதயத்திற்கு மாற்றாக .. மற்றொரு சப்தம் .. உன்  பெயராக இருக்குமானால் ,, ஒளிக்கும் மின்னலை கூட எளிதாக கையாளலாம் போலிருக்கிறது நங்கையை ஒப்பிடும் பொழுது ,, வானவில் கண்டு மயங்காத என் விழிகளும் பொய்யாகி போயின , ஒற்றை நிற வானவில் நடந்து போகையிலே ,, இருளின் ஆதிக்கம் அதிகமாக ஆக உந்தன் உருவம் நிழாலாய் என் கண்ணின் முன்னே ,, இரவின் வெளிச்சம் காண்கிறேன் இருட்டு அறையிலே ,,, உன் நினைவும் நானும் தனிமையில் ,, ஊடல் காணும் பொழுதுகளை மட்டுமே எதிர்பார்கின்றன சோடை போகாத என் மனதும் ,, அமிர்தம் தித்திக்குமோ கசக்குமோ என அறியாமல் .. தடவி சுவைத்து பார்க்க தூண்டும் ஆர்வம் ,, எல்லைகள் இல்லாத தேசம் ஏதும் இல்லை என அறிவேன் ,,என் காதல் வரும் முன்னர் .. தீமைகள் ஏதும் புரிந்தது இல்லை ,, திருட்டுத்தனம் அவ்வளவாக நடந்தேறியதில்லை , உன்னை ஒளிந்திருந்து பார்த்தல் நடக்கும் வ

சாதல்

கண்ணீரோடு கவலையும் செல்லும் வழியில் தான் வருகை தருகிறது தைரியம் எனும் கைப்பிடிகள் ,, காதலின் கட்டுகள் உடைக்கும் தருணம் வரும் வரை கழறாமல் இருக்கிறது அந்த நிமிட ,,உணர்வுகள் ,, எதோ எதோ என விழிகளின் கோலங்கள் கண்ணீரால் சுத்த படுத்தபடுகின்றன ,, மழையும் விழி மழைக்கும் போட்டி போல இருக்கிறது ,,, விழுவதை நிறுத்தமால் ,, சில நேர காவல்கள் கூட ,, அர்த்தவனம் ஆகிட ,, இமைகளுக்கு உள்ளே இமைக்காத இரு கோலங்கள் , இழுத்து கொள்கிறது என் மொத்த உலகத்தையும் ,, சொற்கள் காயபடுத்துமோ ,, படுத்துகிறது அனுபவிக்கிறேன் ,,, எல்லைமீறாமல் இருக்கும் வரைதான் அன்பிறகு கூட பாதுகாப்பு ,, கைகளில் கைப்பெசிகளுடன் காப்புகள் இடப்படும் பொழுதே கழுத்தினில் துன்பத்தின் தூக்குகள் முடிக்கப்பட்டு ,,தல்லாமல் இருக்கின்றன ,, ஒவ்வொரு பிரிவின் பொழுதும் ,, இருக்கப்படும் நினவின் அலைகளுடன் ,, இறுக்கப்படும கயிறுகள் ,, தோள்களின் நிலைகள் கூட சாயக்கூடும் ,,வராத பழக்கங்கள் அனைத்தும் வீடு வந்து சேரும் ,, வருந்தாத நாட்கள் மொத்தம் சேர்ந்து வருத்தும் ,, ஏணி படிகள் இல்லாமல் நரகம் நம்மை அழைக்கும் ,, காதல் சாதலுக

முற்றுப்புள்ளி

முற்றுபுள்ளி நைவளம் செல்கிறது ,, பொய் வான மேகங்கள் ,, மந்திர நிமிடங்கள் மெதுவாக ஓடிட ,,, நல்யாழ் தீட்டும் விரல்கள் ,, நிறுத்தும் ஓசையினை ... இலங்குழல் ஓட்டைகளில் என்னவோரு ஆனந்த ராகம் ,, மெய்த்தமிழ் நான் சொல்ல ,, பொய்யாகுமோ அச்சத்தில் ,,, நாணம் அடைக்கிறது என்  தொண்டையினை ,, இருபது வருடம் காத்திருந்த காலத்தின் தவம்தான் இருள்கூடும் ஒளியாய் என் தேவதை ,, வண்ணங்களின் விரிவில் எட்டாம் நிறமாய் நீ இருப்பாய் ,, இசைகளின் லயத்தில் ஏழாம் சுருதியை நீ தெரிவாய் , மரண பள்ளத்தாக்கு என்னை அழைக்குதடி ,, உன் கன்னத்தின் குழி விழவா ,, மோகத்தின் மொத்த்த வடிவம் சிரிக்குதடி ,,இதழ்ப்பனி பிரதேசம் ,, கிறுக்கியை போலவே முதல் நான் கண்டேன் ,, சிறுக்கியே காலமே , காதல் நான் கொண்டேன் ,, எதில் எதுவோ அதில் இதுவோ .. புரியாமல் உலரும் வாக்குகள் வீணாகி போகுமோ ,, இதம் தேடும் என் கண்களின் இமைக்கு என்ன பதில் நான் சொல்ல ,, உன் பெயர் சொல்ல அடங்குமோ , மரம் தாவும் குரங்கை  போலவே மனதை தேடுகிறேன் ,,, விழியின் மேல் உயிர் வைத்து ,, கறவாத பாலாக உந்தன் முகம் ,, தடைபோடும் ஒரு குச்சி எந்தன்

தாெடக்கம்

தொடக்கம் துளிர்க்கும் இலையிடம் ஒரு ஒப்புதல் ,, என்னவள் மலர்கையிலே ,, மறைக்காமல் விலக சொல்லி ,, சாயும் பொழுதுகள் ,, தொடங்கட்டும் மறுபடி ,, அவள் கைகோர்த்த கணம் தோன்றும் நினைவிது ,, இடம் பொருள் ஏவல் தனிமையின் உருவகம் மனதிடையே கேட்கும் பதில்கள் ,, கேளுங்கள் விடியற்காலை தான் ஒளிரும் சூரியன் தான் ,, இமைகள் கூட கூசவில்லை , காரணம் காதலி[இ]டமே ,, கரணம் தப்பினால் மரணம் காதலில் கூடுமோ இவார்த்தை,, சொர்கத்தின் எல்லையும் மரணத்தின் வாசலும் கூடுமிடம் தான் ஊடல் என்கிறது [கவி]தை கணிப்பு ஜீவிக்கும் அத்தனை உயிர்க்கும் இயல்பென்றால் ,, வெற்றி வாய்ப்புகள் மட்டும் குறைவது ஏனோ ,, துன்ப இன்ப கலவை  என்று தெரிந்தும் அள்ளி எடுத்து நெஞ்சிலே புதைக்க அத்துனை அவசரம் ,, சரளமாக பேசிடும் வாக்குகள் கூட , குழம்பி போகிறது ,, அவள்தலை காதல் கூறும் நேரம் ,, நிதர்சனம் என்று புரிந்தே ,, விதைக்க படுகின்றன ,, பிரிக்க நேர்கையிலே ,, வேருடன் அறுத்து கொலையாகிறது ,, பல உறவின் வேர்முடிச்சுகள் ,, சாதியின் பெயரோ ,, மதத்தின் துணி உடுத்திய , மனமில்லா பிணங்களோ ,, எதுவோ பிரிக்கிறது ஊரு

விரசாய்

விரசாய் பங்குனி வெயிலு மண்டையிலே அடிக்கையிலே ,, மனசுக்குள்ள குத்திடும் அவ உருவம் ,,, சீக்காழு கொண்டையிலே என முடிஞ்சு போறவளே ,, கண்ணுகொரு மைய வெச்சு ,, காலுக்குனு கொலுசு செஞ்சு , மெதப்புல பறக்குதம்மா ,, உன் சீல வானுயரம் ஏதும் இல்ல ,, கெண்ட காலு மண்ணுக்குள்ள ,, புதையாம நீயும் போக ,, மெதுவாக ,,,உச்சி வேற்குதடி ,, சாம விறகாக ,, என்னையும் எரிச்சுட்டு போற ,, கோல புழுவாய் என்னையும் வைப்பவளே ,, மண்ணும் விண்ணும் மாறுதடி ,,பாத சுவடும் தேயுதடி , சிலம்பு கொம்பாக ,, என் பார்வை சுருங்கி போக ,, நேர முள்ளாக ,, என் மனச தைக்குறியே , மேற்கே நீ செல்ல ,, மேகமும் ஒன்னு கூட ,, மழைவர போகுதுன்னு பார்க்காமே சொல்வேனே ,, விடியும் ஏற்பாடும் ,, எழாம என்ன தள்ள, குளிரும் உடம்பாக ,, கோட வெயில் போகுதடி , பசும்பால் கழுத்தோ ,, ஒத்த மணி அணியோ ,, உதட்டு ஓர் வளைவோ ,, விழுகும் கண்ண குழியோ ,, மறையும் இமையோ விரியும் புருவமோ ,, எது என்ன இழுத்துனு போச்சுன்னு இதுவர புரியலடி ,, என்னதான் காரணம் சொல்லுற ,, எதுவர போகசொல்லுற ,, தெளிவாதான் சொல்லடி ,, என் மனதிலே ,, குடிசை கோபுரம் என

வண்ணத்து பூச்சி

வண்ணத்து பூச்சி உருமிடும் வாகன  புகையிலே வண்ணத்து பூச்சியின் உடைமை அழுக்காக்க  படுவதில்லை ,, எந்த ஓவியன் தீட்டிய உயிரோவியமோ ,, பறந்து செள்கிறது மெல்ல காற்றிலே , தன்னை தானே அடைத்து வாழும் குணம் உனக்குமா நிறம் நிறமாய் இருக்கின்றாய் , இருந்தாலும் ஒரே பெயர் ,, யார் வைத்தது இப்பெயர் , ஒரு கண நேரம் போதும் உன்னை கண்டு நான் வியக்க ,,,விசித்திரம் ,, சரித்திரம் பேசிடும் வாக்குகள் இடையே இடையிடையே ,,,பேச்சினை கலைக்கிறது உன் அழகு ,, பெண்ணுக்கு பதில் உன்னை கட்டினானோ அக்கடவுள் இக்கணம் என் முன்னே ,,, நிஜமாய் உணர்கிறேன் ,, எளிதில் கடக்கும் காற்றிற்கும் அழகை சேர்க்கிறது உன் சிறகு ,, எத்தனை கற்பனை ,, எழில் கொஞ்சும் நிறமிகள் குடிகொள்ளும் தோகை வடிவினிலே , இருப்பிடம் ஏதும் இல்லாமல் திரியும் உனக்கோ இவ்வளவு அழகு ,, கற்பு தொல்லை இலையோ ,,, விரல் நுனி வானவில் பிடிக்க இயலாது வண்ணங்களின் வாசனை விருப்பத்தின் மொத்த உருவம் ,, கண்டால் உயரும் புருவம் ,, காதல் துளிர்க்கும் நொடியில் தோன்றும் அற்புத உவமை உருவகம் செய்ய உருவாக்க பட்ட ,,உன்னதம் ,, எத்தனை ,மலரின் தேன

இருவரி கடிதம்

இருவரி கடிதம் என் மூச்சு காற்றினை எடுத்து கொண்டு எந்த நிலவில் கால்தடம் பதிக்க இவ்வேகம் , குறிவைத்து தகர்ற்கும் துப்பாக்கி பார்வையிலே துளையிட்டு உன் அன்பால் நிரப்பினாய் , எதற்கு தூங்குகிறாய் என என் இமையில் குடியிட்டு கொள்[ல்]கிறாய் ஏங்கும் மனதிடம் ஓடிபிடித்து விளையாடுகிறாய் தோற்றுபோவது ஒவ்வொரு முறையும் நானே ,,குருடனாக \ செந்தேள் கொடுக்கினை இதுவரை கண்டதில்லை ,, கோவமாக நீ வையும் வரை . அலைபேசிக்கு என்ன ஒரு அழைப்ப்பு வந்ததோ காயச்சல் வந்து ,, உன்னை மேலும் பிரிக்கிறது ,, தெளிவுபடுத்தும் வார்த்தைகள் ஆயிரம் காதில் விழுந்தாலும் மறுகாதில் வெளிபடுகின்றன,, மனதிடம் தினமும் சண்டை இடுகிறேன் ,, எல்லா முறையும் என்னை மட்டும் துன்பத்தில் அழுத்துவது ஏன் என்று துடிக்கும் இதயம் கேட்டு கேட்டு துடிக்கிறது ,,அவளிடம் இருந்து அழைப்பு வந்ததா என்று ,, செத்தே போகிறேன் அடியே ,, இழுக்கும் உன் நினைவின் தூக்கினிலே ,, தனிமை என்மேல் மோகம் கொண்டு கட்டி அணைக்கிறது ,, தேங்கிடும் சிறுகுளம் ஆகுமோ என் வீடும் .. கண்ணீரும் தீர்ந்து போனதே வெறுக்கும் நொடிகள் ,, என்னை பார்த்

ஒரு விடியல்

உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை உன் பெயர் ,, கருவறை வேண்டும் என நான் கேட்பது ,, நான் தங்க அல்ல ,, என்னவளை தங்க வைத்திட காலம் கடந்தும் பேசட்டும் என் காதல் கதையினை ,,கட்டுகிறேன் இருதயம் பிளந்து மண்டபத்தை , போய்ச்சொல் அவளிடம் முடிக்கும் தருணத்தில் என் உயிர் அவளுக்காக இருக்குமென அணு அணுவாய் ரசிக்கிறேன் பிரமிப்பாய் உணர்கிறேன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறாய் என் கண்ணில் மட்டுமோ \///??? வயிறு பார்ப்பதால் நிறையுமோ உன்னை பார்ப்பதால் பசியும் மறையுமோ வார்த்தைகளில் விஞ்ஜானம் புகுத்துகிறேன் உன் குரலில்  கேட்கும் இசைகண்டு .. இலைகளின் மறைவினை தேடுகிறேன் , பகலவன் ஒளியாய் நீ என்னை தாக்கையிலே குழந்தையாக நினைக்குறேன் முடியவில்லை ,, சாக்கிலாவது உன் மடியில் தவழ உலகில் மிகவும் காதல் எங்கு வசிக்கிறது என்பதை தேடுகிறேன் போட்டியிட அருகில் இருந்தும் தொலைவை உணர்கிறேன் துளைத்து போன நினைவை கொண்டு ] வேறு என்ன வேண்டும் சொல்கிறது மனது ,, உன் ஒரு நெற்றி இடை பொட்டாக அசல் ஆசைகளை மட்டும் உனக்கு காண்பிக்கிறேன் , மற்றவை திருமணம் பின்பு

ஊடல் மோகம்

ஊடல் மோகம் இயல்மனம் ஏதுமின்றி ,, துடித்திடும் மீன் போலே ,, இரு கண்ணும் துடிக்க ,, கனவாக வருகிறான் ,, கணவனாக வர போகிறவன் ,, சிறை செல்லும் எந்தன் தைரியம் அவன் பார்வை முன்னே ,, என் அருகே அவன் இருக்க ,, என் உரிமை அவன் குடிக்க ,, ஆட்சேபனைகள் ,, ஆத்மார்த்தமாய் ,, ஒதுங்கி கொள்ளும் ,, அழகாய் அவன் மீசை , குறுக்கே ,,சதையின் இடுக்கே, சவரம் செய்திடாத ,, தாடியும் ,கன்னத்தில் மெதுவாய் விழும் குழியும் , மெய் மறக்க செய்திடும் செயல்கள் ,,என் மடியில் அவன் உறங்க ,, கருத்தரிக்கமலே தாயகிறேன் ,,தாடிவைத்த குழந்தைக்கு , வேறு என்ன வேண்டும் என வினவிடும் முன் ,, சற்றென்று ,,சைவ முத்தம் சாரும் கன்னத்தை ஒரு நிமிடம் ,,உலகம் நின்றுவிடும் அவனின் அந்நிமிட ,, இதழாலே என் கைகள் தடுத்ததும் இல்லை , அவன் கைகள் நுழைந்ததும் இல்லை , எத்துனை கண்ணியம் காதலில் கூட , கடைசி வரை வருவேன் என இவர் கூறிய வரிகளில் செய்யும் காரியம் புரியவைக்கிறது ,, வருவாய் என ,, நண்பனாய் வந்தாய் காதலாய் மாறினாய் ,, அது மட்டும் இன்றி அன்பினை காட்டி சிலநேரம் தாய் தந்தையாக கூட தெரிந்தாய் , ஒற்றை உருவத்தை த

ஊடல் காற்று

ஊடல் காற்று மாசி மாதத்தின் ஒட்டுமொத்த காற்றும் எனக்கெனவே அடிப்பது போல் ஒரு வர்ணனை அந்தரங்க மனதிலே ,, அழுக்காறு குணம் விதைந்து விட்டதா என புரியாத நிலை ,, இதுவரை கண்டதில்லை இத்தனை அழகை ஒரே குவியத்தில் , சிந்தனை செய்தால் கூட ,, மீள இயலாத கனவு , கதிரவன் கண்ணை மூடி வெட்கபடுகிறதோ என்கிற தோற்ற பாவனை , முகம் கொடுத்தும் பேசிடாத உன் விருப்ப வலையிலே என்னை மட்டுமே நுழைய விட்டாய் , நுழைந்தும் விட்டேன் , இருக்க இடம் கொடுத்தல் மடியை பிடிக்கும் கதையை போல் ,, நண்பன் நிலையில் இருந்து படி உயர்ந்து ,,காதல் தேசத்தில் உன்னையும் என்னையும் மட்டுமே பூட்டி விட்டு சாவியினை தொலைக்க நினைக்கிறேன் ,, பகல் கனவோ ,, பகல் நிலைவை போலே என் பார்வையில் மட்டும் பளிச்சிட ,,அத்துவனம் ஆகின்றன ,,, ஒரு நொடி போதும் என நினைத்து வந்தேன் ,, எரிமழை பொழியுமோ ,, பனித்துளி தூருமோ உன் விழிவழி சாலையில் திங்கள் தினம் தான் ,, பகல் பொழுதுதான் ,, தயக்கத்தின் உச்சியிலே ,, மாலை ஆகும் மங்கும் ஒளியும் ,, உனக்காகவே அழைக்க பட்டது போலவே அழைக்காமல் வந்து கொள்கிற பயம் ,,நிஜம் தான் இக்கணம் கில்லி

ஊடல்

ஊடல் தெரிந்தெ தொலையும் விழகளின் முன்னே ,,என்ன நான் சொல்வது புதைமணலா உன் கண்கள் பார்த்ததும் என்னை இழுத்து தள்ளுகிறது ,, என்ன தான் வசியம் செய்கிறாய் ,, கூந்தல் ,, அய்யயோ ,,,பிரம்மன் சிரமம் எடுத்து செய்த கார்முகில் மேகம் ,,, வஞ்சனை பாடும் ,, வானமும் ,,நீ செல்ல நேர்கையில் , வெளியிலே கண்கள் ,, அடடா ,,,காந்தம்  கொண்டு செய்ததோ ,,,கரிகாலன் கட்டிய ,, கல்லணை என்ன வலியது இவள் பார்வ்வையின் முன்னே ,, சிறுதுகள் ஆகும் கதிரவன் வெளிச்சமும் ,, புயலென வீசும் ,, சிருதழல் கோவமும் ,, குளிரால் வாட்டும் ,, ராட்சத அன்பும் ஆகாயத்தின் ஒட்டுமொத்த அழகையும் ,,எவனடி செதுக்கியது ,புருவத்தின் கீழே , முகம் ,, எழுத முடியாத கண்ணாடி ,, பிரதிபலிக்கும் ரசனை ,, விண்ணை மிஞ்சும் வடிவம் , எழிகொஞ்சும் பொலிவு ,, அத்தனையும் ஓரம்தள்ளும் ஒற்றை மச்சம் ,, இரு இதழ் கடத்தும் என்னை ,, உவமைகள் ஏதும் இன்றி இப்படியா தவித்திடிடுவேன்  ,, ஒரு கவிதை போதுமா ,, உன்னை வெளிபடுத்த ,, இல்லை வானமும் துளிதான ,,உன்னை பற்றி நான் வரைந்திட ,, வரைவோலை போலவே மாறுகின்றன ,, உந்தன் கைஎழுதுகளும் ,, மின்னலை மிஞ்ச

குறைகுடம்

தொடர்ச்சியான தோல்விகள் தான் ,, ஓய்விலே நமக்கு வெற்றியை தருமென உணர்கிறேன் , நிராகரிப்புகளின் மூலமும் ஒருவரை நிர்மூலமாக்க இயலும் என்றால் ,, வாழ்விலே எவரும் வென்று இருக்க முடியாது ,, வாழக்கையே வெறுப்பதாக உணர்கிறேன் ,,அப்படி என்ன வாழ்ந்துவிட்டேன் ..,,,,,,, ஒருவேளை முன்ஜென்மமோ, சிக்கும் வலையில் எல்லாம் விழுந்து விட்டேன் ,, வேறு ஏதாவது கொண்டு வாருங்கள் , முயன்று தோற்கும் நான் முட்டாள் என்றால் ,, வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருக்கும் ,, இவர்கள் யார் ,,?? முட்டாள்கள் ஜெயிப்பதில்லை ,, கவனிக்கபடுகிறார்கள் , கவனிக்கவாவது படுகிறேனே << தனிமையில் இருப்பதை விட ,, தன்மையானது வேறேதும் இல்லை , கடின நேரங்களில் ,, பிரச்சனைகள் தான் வாழ்வென்றால் ,, பிறப்பதை விடவா ,, பெரிய பிரச்சனை வந்து விடபோகிறது ,, சமாலிக்கலாமே ,, இறப்பது மட்டுமே தீர்வென்றால் ,, சவப்பெட்டிகள் தினம் தினம் தேவைப்படும் , வெல்வது யாராக வேணாலும் இருக்கட்டும் ,,முயல்வதை மட்டுமே குறிக்கோளாக வைக்கும் கண்களுக்கு தோல்விகள் கடினம் தான் ,. காலம் தேவை படும் ,, கண்ணீரும் தேவைப்படும் ,, சேம

வந்துவிடு

வந்துவிடு , சிதறி ஓடும் வாசல்களில் ,, சிந்தாமல் நிற்கும் நினைவுகள் ,,, வாசலை கடக்கும் போதே வாடகை வங்கி ஏறிக்கொள்கிறது ,, காக்கும் வலைகள் ,, ஏதும் இன்றி ,, இதய அறைகளிலே ,, அடித்து துடிக்கிறது ,, உன் மன வரிகள் ,, எதோ மலையின் மேல் ,, ஏறிக்கொண்டு , செத்து செத்து விளையாடலாம் என்கிறது ., ஆழ் மனம் ,,, எதோ ஒரு மூலைகளில் ,, உன் நினைவுகள் ,, பித்து பிடித்தது போல் ,, எழுந்து விழுந்து ,, அடங்குகிறது ,, காரணம் புரியாமல் , குடும்பம் நடத்திட ,,, இரு உடல் மட்டுமே போதுமென்றால் ,, மனம் படைத்தது ஏனோ ,, கணவன் மனவை , பந்தத்தில் நுழைந்து விடுகிறது , உண்மை காதல்கள் ,, அருகில் இல்லாமலே ,, ஆயிரம் மைல் இருந்தாலும் , அன்பு மட்டும் விலைக்கு கிடைக்கிறது என்றால் ,, வாங்கும் முதல் நபர் நான் தான் ,, கோடி ஆனாலும் சரி சதம் அடித்துவிடும் என்பது போலவே ,, என்னை அண்ணார்ந்து பார்க்கும் ,, உன்னை காணாத நாட்கள் , ஓடி பிடித்து விளையாட்டு , காட்டிடும் உன் நினைவலைகளுடன் ,, ஓடாமல் ,நிற்கும் சிறுவனாக நான் ,, ஆகாயம் முழுவதும் நினைந்து விடுமோ ,,, நான் சிந்திய கண்ணீரை கொண்டு ,அ

அம்மா

அம்மா , நான் இதுவரை பார்த்ததே இல்லை ,, நான் எழும் முன் நீ துயில்வதையும் .. துயில் முன் துயில்வதையும் ,,. காய்ச்சல் ஏதேனும் வந்தால் ,,கவலைதான் ,, உனக்கு ,, பிள்ளைகள் என்ன உண்பார்கள் என்று ,, நீ கோவம் கொள்வதையே பார்க்கும் எனக்கு பாசங்கள் புரிவது இல்லை ,, நான் உறங்கிய பின் எதோ விரல்கள் தலைகோதும் வரை , நான் கூறிய பல பொய்கள் நம்பினாய் ,, நான் உண்டேன் என்பதை தவிர ,, மாதம் மூன்றாய் வந்தாலும் .. உன் வேலைகளோ தேய்ந்ததே இல்லை பல நேரம் நீ கூறும் பொய்கள் ,,, எனக்கு பசி இல்லை ,, இந்தாப்பா ,,,, இதுவரை உலகிலே எழுதபடாத மிகபெரிய கவிதை ,, தன் வேலைக்கு மாற்றாக கடவுள் அனுப்பிய நடக்கும் தேவதை ,, நான் இன்னும் உன் கண்களிலே தவழ்கிறேன் ,, நீ அடிக்கடி சொல்லும் வார்த்தை ,, உன் விழிகளின் தேடல்களில் நான் தவறியதே இல்லை ,, உன் நெற்றியிலே பொட்டும் மறக்கலாம், என் வேலைகள் மட்டும் மறந்ததே இல்லை ,, எனக்கு பிடித்தவற்றிர்காக தனக்கு பிடித்ததையே மறக்கும் ஓர் உன்னதம் ,, நான் என்று பட்டம் பெற்றோனோ என் தாளினை தெருவெல்லாம் சுற்றிய பெருமிதம் ,, நித்தம் நீ சமைத்தாலும்

கனவு கள்வன்

கனவு கள்வன் கனவுகளுக்கு இங்கே வேலையே வருவது இல்லை ,,, நீ இல்லாமல் உறக்கமே வருவதில்லை பகல் கனவா காணட்டும் ,, கனவுகள் சொர்கத்தின் வாசலாகவும் ,, நரகத்தின் எல்லையாகவும் இருப்பதை உணர்கிறேன் ,, விடியும் வரை மட்டுமே கணைகள் வரும் என்றால் ,, எந்நேரமும் உன்னை நினைத்து நான் செய்யும் காரியங்கள் ,,,நிஜமா ,, சந்திரனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு ,, நீ வந்தால் தான் ,, இவன் வருகிறான் ,, கனவு காண்பதே வேலையாக ஆகிவிடும் போல் இருக்கிறது ,,, உன்னை நினைத்து அல்ல ,, நினைத்து நினைத்தே ,, கனவில் மட்டும்தான் நீ சிரிப்பாயானால் ,, தூக்கமே பிழைப்பாகட்டும் ,, உலகத்தின் எவ்வளவு தான் நடந்தாலும் ,, கனவுகள் மட்டும் என்னை எங்கேயோ தூக்கி செல்கின்றன , களைப்புகள் வரும் நேரங்களில் மட்டும் விடுப்பு எடுத்து கொள்கிறது ,, கனவு ,, நிஜமாய் இருக்கும் என நம்பியே பல விடியல் கடக்க கனவுகள் எனும் பதில் தான் கிடைக்கிறது உறக்கத்தில் நீ பேசிடும் வார்த்தைகள் பதிய படுகின்றன ,, முகுள மேடையிலே அட என்ன கொடுமை ,, குழந்தைகள் மட்டுமே உறக்கத்தில் சிரித்திடும் ,, நினைத்திருந்தேன் ,, உன்னை பா

நீ பேசாத நேரத்திலே

நீ பேசாத நேரத்திலே சித்திரம் பேசுமடி , உன் சின்ன விழிகளிலே ,, மந்திரம் ஏதும் இல்லை  ,, கண்களும் உன் காலடியில் ,.... சாதகம் ஏதும் இல்லை குயிலிசை ,குரலினிலே ,, அமுதமும் தேவை இல்லை ,, அன்பே உன் அருகினிலே ,, செய்தது சிலையும் இல்லை பார்த்ததும் கண்கள் இல்லை ,, கனவோ ஏதும் இல்லை ,, பறந்திடும் மீன் கூட , அழகாய் பேச வார்த்தைகள் போதவில்லை ,, அழகே உன் பார்வையிலே ,, திறந்திடும் குகைபோலே ,, விரிந்திடும் இமைமேலே , அசைந்தாடும் இல்லை போலே மனதின் மேலே விழுந்தாய் .. காற்றும் அடிக்கவில்லை ,, மரமும் வீசவில்லை ,, பார்த்ததும் ஊதிவிட்டாய் .. மௌனம் பேசவில்லையடி ,, முத்தின் வாய் திறக்கையிலே ,, கால்கள் ஊறவில்லை ,, சற்றே நீ முடி ஒதுக்கையிலே ,, வானவில் வெறுக்குமடி கார்முகில் சீலையிலே ,, மந்தமாய் ஆகுமடி , சந்திரன் உன்முன்னே , ஒவ்வொரு முறையும் சாகிறேன் , அழகே ,,துளிதூரம் நீ நடந்து செல்கையிலே , எத்துனைதான் மரணம் எனக்கு , கேட்கிறது உள்ளுக்குளே வேகாத வெயிலும் கூட ,, குளிர்காற்றை வீசுதடி என்னை நீ உரசி செல்கையிலே , கைபேசிகளுக்கு மட்டும் மானம் இருந்து இருந்தால் தூக்கிட

கழன்ற நினைவுகள்

கழன்ற நினைவுகள் ,, எழுத்துகளை சுமந்து செல்கின்ற காகிதமாய் நான் இருக்கையில் உன் கஷ்டங்களை மட்டுமே அதில் இடம்பற செய்வது ஏனோ ,,, வார்த்தைகளுக்கு ஓய்வளித்தபடியே மௌனத்தில் பேசிட ,, எதைக்கொண்டு எழுத என் வார்த்தைகளை , இரத்தமாய் இல்லை உணர்வாய் ,,, புரியாமல் ஒரு வேள்வி ,,,, சங்கடங்கள் சட்டைப்பை நிறைய கொண்டு செல்லும் வழியில்தான் அவிழ்துவிடபடுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொன்றாய் , இனிப்பை உண்ட அதே வாயில்தான் கசப்பையும் ருசிக்க நேர்கிறது ,, காலை பொழுதுகள் வரமாய் அமையத்தான் ஆசை ,,இருந்தாலும் ,,, என்ன செய்வது ,,, சமாளிக்கும் நேரங்கள் தான் ,தப்பிபதற்கு வழி என்றால் ,, ஒளிவது ஏன் .. கையளவு இருக்கும் இதயம் தான் இயங்க வைக்கிறது என்றால் ,,மற்ற உறுப்புகளின் பயன் ஏதோ ,, ஒவொரு முறை துடிக்கையிலும் புதிதாய் பிறந்திடும் வாழ்வு ,, காலநேரங்கள் பார்த்தே பலமனங்கள் சேர்கையில் விவாகம் நடந்த அதே கைகளால் விவாகரத்தும் ஏனோ ,, புரிதல் என்பது உன்னத நிலை புரிதல் அத்துனை எளிதேன்றால் பிரிதல் எனும் சொல்லுக்கு வாய்ப்பே கிடைக்காது ,, சேர்த்தல் அத்துனை கடினமில்லை விட்டு

கல்யாண பந்தம்

கல்யாண பந்தம் மஞ்சள் பூசிய முகமருகே முழித்து பேசிய விழிகள் , திரும்பி பார்க்கவும் நேரமில்லை ஒட்டி கொள்கிறதே உன் விழி போக்கினிலே , சாய்ந்திரம் வந்திடுமோ சூரியனும் சாய்ந்திடுமோ , மேகத்திடையே கலந்து பேசும் இரு ஜோடி மனங்கள் , சிரித்து சிறிதே கணங்களும் செல்லுகையில் நொடிகளும் வெறித்து வெறித்து நடக்குதே ,,கால்களில் அடிபட்டதோ என தெரியவில்லை சாயங்கள் பூசியே வானத்தை கருத்திட செய்யவும் ,யோசனை பெருகுதே ,, உற்றமும் ஒதுங்கிட , அவ்வேளை வருகுதே ,, உள்ளமும் மறுகிட இரவு உணவும் நரக வேதனை சொல்லி கடக்குதே , எப்படியோ வந்தது தனி அறை , எத்துனை வருட கனவு , முகர்ந்து பார்க்கும் நொடியிலே முதன்மை இரவு அழைக்கிறது என்னை நந்தவனம் போலவே அறையும் தெரிந்திட , அவசியம் தெரியாமல் போனதோ , அருகிலே பூச்செடி அமர்கையில் , வாசமும் தூக்குதே பூக்களை காட்டிலும் என்னவள் கூந்தலில் , அசைந்து பால்குவளை அசையாமல் ,பாதங்கள் வலிக்காமல் ,மேகங்கள் மழையை மெதுவாய் பொழிவது போலவே . அருகினில் வந்திட ,வெக்கங்கள் சாரலை போலவே ,  நான் குடித்த அப்பாலை அவள் குடித்திட ,, என்னதான் வசியமோ இழுத்து அடிப

கல்யாண சொந்தம்,, 2

கல்யாண சொந்தம் நலங்கு ,,நாலா புறமும் உற்றம் சூழ , கன்னம் மஞ்சளிலே ததும்ப கண்ணீர் புகையினை வீசிவது போல் கண்களிலே நீர் [நீ] ததும்ப விரைவாய் முடிந்தது வர்ணம் பூசும் காவியம் , குங்குமம் இடம் மட்டும் உரித்தானது என்றால் மீதம் //??? நட்பு வட்டாரத்தில் முணுமுணுத்த ரகசிய கேள்விகளுடன் ,, கொஞ்சி பேசின ,, சிரிப்பினை மொத்தமாய் விலையிட்டு வாங்கிகொண்டான் போல தலைவா முகம் , அழகாய் தெரிந்தது , நலங்கு பண்டிகை முடிந்திட ,, ஆரம்பமானது சாங்கியம் எல்லாம் விடிதல் ஏதும் இல்லையோ என்ற ஏக்கம் இருகண்களில் மட்டும் புலப்பட்டது , இடைவெளியாவது கிட்டுமோ கைவிரல் ஒரு சேர , இடையில் வெளியாவது கிட்டுமோ என ஏக்கமாய் பார்த்தது பாதி மனம் முடிந்த ஜோடிகள் ,. எப்படியோ முடிந்து போனது சாங்கியம் எணும் போராட்டம் .,,  மீழ்ந்த விழிகள் களைப்பாட என் மார் போதுமோ ஜாடையில் பேசிட மிச்சமாய் சேரட்டும் எல்லையில் வீழலாம் என்றது தலைவன் பார்வை , அவர் அவர் அறையிலே உடல் மட்டும் உறன்கிட மனதுக்கும் நேருமோ தூக்கமும் நேரமும்,வெளிவந்த இரு ஆத்மா ஒருசேர விண்மீன் பார்வையில் நுழைந்திட ,,நிலவின் ஆனந்த வெப்பத்தில்

கல்யாண சொந்தம்,, 2

கல்யாண சொந்தம் நலங்கு ,,நாலா புறமும் உற்றம் சூழ , கன்னம் மஞ்சளிலே ததும்ப கண்ணீர் புகையினை வீசிவது போல் கண்களிலே நீர் [நீ] ததும்ப விரைவாய் முடிந்தது வர்ணம் பூசும் காவியம் , குங்குமம் இடம் மட்டும் உரித்தானது என்றால் மீதம் //??? நட்பு வட்டாரத்தில் முணுமுணுத்த ரகசிய கேள்விகளுடன் ,, கொஞ்சி பேசின ,, சிரிப்பினை மொத்தமாய் விலையிட்டு வாங்கிகொண்டான் போல தலைவா முகம் , அழகாய் தெரிந்தது , நலங்கு பண்டிகை முடிந்திட ,, ஆரம்பமானது சாங்கியம் எல்லாம் விடிதல் ஏதும் இல்லையோ என்ற ஏக்கம் இருகண்களில் மட்டும் புலப்பட்டது , இடைவெளியாவது கிட்டுமோ கைவிரல் ஒரு சேர , இடையில் வெளியாவது கிட்டுமோ என ஏக்கமாய் பார்த்தது பாதி மனம் முடிந்த ஜோடிகள் ,. எப்படியோ முடிந்து போனது சாங்கியம் எணும் போராட்டம் .,,  மீழ்ந்த விழிகள் களைப்பாட என் மார் போதுமோ ஜாடையில் பேசிட மிச்சமாய் சேரட்டும் எல்லையில் வீழலாம் என்றது தலைவன் பார்வை , அவர் அவர் அறையிலே உடல் மட்டும் உறன்கிட மனதுக்கும் நேருமோ தூக்கமும் நேரமும்,வெளிவந்த இரு ஆத்மா ஒருசேர விண்மீன் பார்வையில் நுழைந்திட ,,நிலவின் ஆனந்த வெப்பத்தில்

கல்யாண சொந்தம்

கல்யாண சொந்தம் வழியிலே விழி கூட , வாழை மரங்களின் அணிவகுப்பு தொடர ,,காதுக்கு இதமான சுடுநீர் போலே , மேளதாளம் கொட்டிட , நட்சத்திரங்களின் எண்ணிக்கையை எட்டும் அளவு சீர்வரிசை தனது சிறப்பினை காட்ட , வைக்க இடம் அற்று , மணமகன் உறவினர் மடியிலே அமர்ந்தது ,,ஒருவழியே அத்தட்டுகள் , வெள்ளை வெட்டி அணிந்த மணமகன் பார்வையோ மணமகள் இடம் தேட , கண்களின் சுமைக்கு எதுவாக , கால்களும் அதன் இடத்தினை மாற்றிட ,மாற்றப்பட்டது தட்டுகள் ,ஏற்றப்பட்டது விளக்கு நிச்சயம் தார்த்தம் ,,அனால் அது மட்டும் இல்லை மணமகன் கண்களின் ஒரே உருவம்  பச்சைகுத்தியது , ஏற்றப்பட்ட விளக்கிலே எரியும் தீச்சுடர் போலே ,மனமகள் வந்து நிற்க , ஆரம்பனாது கல்யாணம் , மனதுகளுக்கு, தாலி ஏதும் இன்றியே பார்வையில் குடும்பம் நடத்த தொடங்கியது அந்த ஜோடி ,. வரவேற்பறையில் இடம்பெற்ற சந்தனம் மிகுதியில் வருவோரை வரவேற்க , சொந்த பந்தங்கள் உணவாரும் இடம் சேர , இனித்து உதயாமனது  க[ல்]லியாணம் ,,, பெரியோர் ஆசியுடன் , குதிரை துணையுடன் , வந்து இறங்கியது மனபம் முன்னே தலைவன் கால்கள் , இறங்கிய நொடி ,, மூச்சிலே அவளை பிடிப்பது போல்