வந்துவிடு

வந்துவிடு ,

சிதறி ஓடும் வாசல்களில் ,,
சிந்தாமல் நிற்கும்
நினைவுகள் ,,,
வாசலை கடக்கும் போதே
வாடகை வங்கி
ஏறிக்கொள்கிறது ,,

காக்கும் வலைகள் ,,
ஏதும் இன்றி ,,
இதய அறைகளிலே ,,
அடித்து துடிக்கிறது ,,
உன் மன வரிகள் ,,

எதோ மலையின் மேல் ,,
ஏறிக்கொண்டு ,
செத்து செத்து
விளையாடலாம் என்கிறது .,
ஆழ் மனம் ,,,
எதோ ஒரு மூலைகளில் ,,
உன் நினைவுகள் ,,
பித்து பிடித்தது போல் ,,
எழுந்து விழுந்து ,,
அடங்குகிறது ,,
காரணம் புரியாமல் ,


குடும்பம் நடத்திட ,,,
இரு உடல் மட்டுமே
போதுமென்றால் ,,
மனம் படைத்தது ஏனோ ,,
கணவன் மனவை ,
பந்தத்தில் நுழைந்து விடுகிறது ,
உண்மை காதல்கள் ,,
அருகில் இல்லாமலே ,,
ஆயிரம் மைல் இருந்தாலும் ,

அன்பு மட்டும்
விலைக்கு கிடைக்கிறது என்றால் ,,
வாங்கும் முதல் நபர் நான் தான் ,,
கோடி ஆனாலும் சரி

சதம் அடித்துவிடும்
என்பது போலவே ,,
என்னை அண்ணார்ந்து பார்க்கும் ,,
உன்னை காணாத நாட்கள் ,

ஓடி பிடித்து விளையாட்டு ,
காட்டிடும் உன்
நினைவலைகளுடன் ,,
ஓடாமல் ,நிற்கும்
சிறுவனாக நான் ,,

ஆகாயம் முழுவதும்
நினைந்து விடுமோ ,,,
நான் சிந்திய கண்ணீரை
கொண்டு ,அழுத்தினால் ,

பேனா ஏதும் இல்லாமலே ,,
எழுதிடும் வரிகள் ,,
உயிரோட்டத்திற்கு ,,
என்ன மையினை ,,
பயன்படுத்த ,,
கைகளில் மட்டுமே ,,
கொண்டு உன் சிலை நிறுவினால் ,,
விழுந்திடும் ,,,
துளிகளில் கலைகிறது ,,
சிற்பம் ,

வடிக்காமல் வடிக்குமோ ,,
மழைத்துளிகள் ,,சரியாக,,
பார்வை மீதே விழுந்திட ,,

அழியாமல் காத்திட ,,
என்னதான் செய வேண்டும் ,
சொல்லி விட்டாவது சென்றுவிடு ,,
காத்தாவது கொள்கிறேன் ,,

சட்டம் என்பது ,,
உயிர்களுக்கு மட்டும்
அமையுமென்றால் ,,
ஆயிரம் சட்டம் அமைக்க வேண்டும் ,,
புதிதாக காதலுக்கென்று ,
நிதர்சனம் ,,
வரைமுறை ஏதும் படிக்கவில்லையோ ,,
படைக்கவில்லையோ
உன்னை பற்றி நான்
நினைத்திட ,,

விலங்குகள் கூட ,
நிம்மதி பெருமூச்சினை
இயல்பாக விட ,,
நான் ,,அவ்வளவா ,,தேய்ந்துவிட்டேன் ,,

விரல்கள் கூட ,,
தேம்புகின்றன ,,
நீ தொட்ட ,,இடத்தினை ,,
நீரும் எரிக்குமோ ,

இதங்கள் ஏதும் இல்லாமல் ,,
மரங்கள் ,,கூட ,
வீசுவதில்லை ,,
அரண்மனை காற்றினை கூட ,,
குடிசைகள் பெறுவதில்லை
மாற்று கருத்து ,,
காதலுக்கும் காற்றுக்கும்
என்ன சம்மந்தம் ,,
உண்மை காதல்
பிரிந்த சில கணங்களில் ,,
மூச்சும் காற்றும் பிரிகிறது ,

பிரிவும் இல்லாமல்
சேர்தலும் இல்லாமல் ,,
ஏனோ ,,இப்படி ஒரு நிலை ,,
ஒரு துளி நேரத்தில் ,,
ஒராயிரம் வரிகள் படைக்கிறது ,,
விரலுக்கும் எனக்கும்
சம்மந்தம் இல்லாமல் ,,

வரிகளில் பிழையோ ,
வார்த்தைகள் வரவோ ,,
ஒற்றை வார்த்தைகளில் கூறுகிறேன் ,,
வந்துவிடு ,,,..

கவியரசன்....

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு