விரசாய்

விரசாய்
பங்குனி வெயிலு
மண்டையிலே அடிக்கையிலே ,,
மனசுக்குள்ள குத்திடும் அவ உருவம் ,,,

சீக்காழு கொண்டையிலே
என முடிஞ்சு போறவளே ,,

கண்ணுகொரு மைய வெச்சு ,,
காலுக்குனு கொலுசு செஞ்சு ,
மெதப்புல பறக்குதம்மா ,,
உன் சீல

வானுயரம் ஏதும் இல்ல ,,
கெண்ட காலு மண்ணுக்குள்ள ,,
புதையாம நீயும் போக ,,
மெதுவாக ,,,உச்சி வேற்குதடி ,,

சாம விறகாக ,,
என்னையும் எரிச்சுட்டு போற ,,
கோல புழுவாய்
என்னையும் வைப்பவளே ,,

மண்ணும் விண்ணும்
மாறுதடி ,,பாத சுவடும் தேயுதடி ,
சிலம்பு கொம்பாக ,,
என் பார்வை சுருங்கி போக ,,
நேர முள்ளாக ,,
என் மனச தைக்குறியே ,

மேற்கே நீ செல்ல ,,
மேகமும் ஒன்னு கூட ,,
மழைவர போகுதுன்னு
பார்க்காமே சொல்வேனே ,,

விடியும் ஏற்பாடும் ,,
எழாம என்ன தள்ள,
குளிரும் உடம்பாக ,,
கோட வெயில் போகுதடி ,

பசும்பால் கழுத்தோ ,,
ஒத்த மணி அணியோ ,,
உதட்டு ஓர் வளைவோ ,,
விழுகும் கண்ண குழியோ ,,
மறையும் இமையோ
விரியும் புருவமோ ,,
எது என்ன இழுத்துனு போச்சுன்னு
இதுவர புரியலடி ,,

என்னதான் காரணம் சொல்லுற ,,
எதுவர போகசொல்லுற ,,
தெளிவாதான் சொல்லடி ,,
என் மனதிலே ,,

குடிசை கோபுரம் என் நெஞ்சம் ,,\\
தஞ்சம் மட்டும் புரியடி ,,
ஆயிரம் முறை கூறும்
நெஞ்சுகிட்ட என்ன கூற

கேட்டு கேட்டு துடிக்குதடி ,,
கேக்கலையா உனக்கின்னும் ,,

சொல்லடி விரசாய்,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு