சொல்லமுதே

சொல்லமுதே

விண்மீன் செதுக்கிய பெண்மீனே .
வால்மீன் தொடுத்த கண்மீனே ..
வாழ்த்தாத உன் பெயரை
கூறாது வாயும் உண்டோ ,,

பவளதாமரை மலரே ,,
பனிக்குள் பூத்த பங்குனியே ...
பல்லாக்கில் செல்லும் பாதமே ,,

விடை பெரும் காற்றே ,
விரும்பாத சுவாசமே ,,
வித்தியாசம் காட்டும் உருவமே ,,
விளையாடும் அழகே ..

சிகரங்கள் தொடாத
கண்விழியே ...
எரிமலை சீண்டாத ..
கரு மழையே .

திகட்டி போகாத அமுதமே
மதில் கட்டி காக்கும்
உன் சேலைகளின் வானத்தில் ..
முந்தானை முடிச்ச்குகளின்
பிரதேசத்தில் பிரவேசிக்கும்
வியர்வையின் எதிரியாய்
என் பார்வை ,,

மஞ்சள் பூசிய மேகங்கள்
கண்டதுண்டோ ,,
குங்குமம் வைத்த
வானவில் தான் உண்டோ ,,
தாமரை மருதாணி
பூண்டதுண்டோ ,,
வெள்ளை பனித்துளிகள்
தங்கம் அணிந்தது உண்டோ ..

எத்தனை எத்தனை
அழகுண்டோ ,,
அத்தனையும் மொத்தமாய்
என் முன்னே ,,
அடியே உன் அழகினிலே
அடியேன் ஆக்கிடும்
பேர் ஒளியே ,,,
யாழ் இசையே ,,
மெயதீண்டும்
உன் கூந்தல் வாசத்தில்
கொஞ்சமாய் சாகடித்து விடு ,,

நீ புள் மேல் நடக்கயிலே ,,
என்மேல் மிதித்து விடு ,,

காதல் சொல்லும்
என் மன கடற்கரையில்
உன் பாதங்களின்
தடங்களை மட்டும் விட்டு செல் ,,

தாளம் போடும் ,மிருதங்க ஓசையும்
மிஞ்சுதடி உன் கொலுசு
அசைத்து நீ நடக்க ,,

பார்வைகள் மீறும் நாடுகள்
வரை நான் செல்ல நேர்கையில்
சட்டென முறைக்கும்
ஒரு கர்வ பார்வையில்
உச்சி தொட்டு பாதம் வரை
அத்தனையும் அடங்குதடி ,,

கடன்வாங்கி நீ போன
என் மனதும் ,,
வட்டி கூடியும் போகுதடி ,,
அசலுக்கு வழி இல்லாமல்
மீள்தொகை எனக்கென்ன , ,,

 நெஞ்சு பதைக்கும் தருணமெல்லாம்
உன் முகமும் விழி மொத்தம் ஆகுதடி ,,

நிலவின் துணையாய்
நான் ஆகிறேன் ,,
என் துணையாய் நீ
ஆவது எப்போது ,,

பதில் சொல்லும் முன்னர்
சிரித்து விட்டு சொல் ,,
சாவும் இன்பமாகட்டும் ,,

சொல்லமுதே ,,

கவியரசன் ......././/////]]]]

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு