ஒரு விடியல்

உலகில் எனக்கு மிகவும்
பிடித்தமான கவிதை
உன் பெயர் ,,

கருவறை வேண்டும் என
நான் கேட்பது ,,
நான் தங்க அல்ல ,,
என்னவளை தங்க வைத்திட

காலம் கடந்தும்
பேசட்டும் என் காதல்
கதையினை ,,கட்டுகிறேன்
இருதயம் பிளந்து
மண்டபத்தை ,
போய்ச்சொல் அவளிடம்
முடிக்கும் தருணத்தில்
என் உயிர் அவளுக்காக இருக்குமென

அணு அணுவாய் ரசிக்கிறேன்
பிரமிப்பாய் உணர்கிறேன்
ஒவ்வொரு முறையும்

ஒவ்வொரு முறையும்
புதிதாக தெரிகிறாய்
என் கண்ணில் மட்டுமோ \///???

வயிறு
பார்ப்பதால் நிறையுமோ
உன்னை பார்ப்பதால்
பசியும் மறையுமோ

வார்த்தைகளில்
விஞ்ஜானம் புகுத்துகிறேன்
உன் குரலில்  கேட்கும்
இசைகண்டு ..

இலைகளின் மறைவினை
தேடுகிறேன் ,
பகலவன் ஒளியாய்
நீ என்னை தாக்கையிலே

குழந்தையாக நினைக்குறேன்
முடியவில்லை ,,
சாக்கிலாவது
உன் மடியில் தவழ

உலகில் மிகவும் காதல்
எங்கு வசிக்கிறது என்பதை
தேடுகிறேன்
போட்டியிட

அருகில் இருந்தும்
தொலைவை உணர்கிறேன்
துளைத்து போன நினைவை கொண்டு ]

வேறு என்ன வேண்டும்
சொல்கிறது மனது ,,
உன் ஒரு நெற்றி இடை பொட்டாக

அசல் ஆசைகளை மட்டும்
உனக்கு காண்பிக்கிறேன் ,
மற்றவை திருமணம் பின்புதான்

வித்தை காட்டுதடி
உன் விழியன் கரு ,,
ஒரு புறம் அசைய என்னையும்
மறுபுறம் சுழல
என் மனதையும்
ஒருசேர கடத்தி கொண்டு விடுகிறது

அகிலமும் காலடியில்
உன் கை என் கையிற்குள் இருந்தால் ,

மரணமும் ஓரடியில் ,,
உன் முகம் சற்றே நகர்ந்தால்

ஜீவிக்கிறேன் அழகே
விடியல் காலையில்
உன் புகைப்படத்தோடு ,,
என்னை கொஞ்ச வந்துவிடு

ஒரு விடியல்

கவி

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு