கல்யாண பந்தம்

கல்யாண பந்தம்

மஞ்சள் பூசிய முகமருகே
முழித்து பேசிய விழிகள் ,
திரும்பி பார்க்கவும் நேரமில்லை
ஒட்டி கொள்கிறதே
உன் விழி போக்கினிலே ,

சாய்ந்திரம் வந்திடுமோ
சூரியனும் சாய்ந்திடுமோ ,
மேகத்திடையே கலந்து பேசும்
இரு ஜோடி மனங்கள் ,

சிரித்து சிறிதே
கணங்களும் செல்லுகையில்
நொடிகளும் வெறித்து வெறித்து
நடக்குதே ,,கால்களில்
அடிபட்டதோ என தெரியவில்லை

சாயங்கள் பூசியே
வானத்தை கருத்திட
செய்யவும் ,யோசனை
பெருகுதே ,,
உற்றமும் ஒதுங்கிட ,
அவ்வேளை வருகுதே ,,
உள்ளமும் மறுகிட
இரவு உணவும் நரக
வேதனை சொல்லி கடக்குதே ,

எப்படியோ வந்தது தனி அறை ,
எத்துனை வருட கனவு ,
முகர்ந்து பார்க்கும் நொடியிலே
முதன்மை இரவு அழைக்கிறது என்னை

நந்தவனம் போலவே
அறையும் தெரிந்திட ,
அவசியம் தெரியாமல்
போனதோ ,
அருகிலே பூச்செடி
அமர்கையில் ,

வாசமும் தூக்குதே
பூக்களை காட்டிலும்
என்னவள் கூந்தலில் ,

அசைந்து பால்குவளை
அசையாமல் ,பாதங்கள்
வலிக்காமல் ,மேகங்கள்
மழையை மெதுவாய் பொழிவது போலவே .
அருகினில் வந்திட ,வெக்கங்கள்
சாரலை போலவே ,
 நான் குடித்த அப்பாலை
அவள் குடித்திட ,,
என்னதான் வசியமோ
இழுத்து அடிப்பது போல்
துடித்து வெடிக்கிறது
இதயமும் ,
இரு கூடு இதயங்கள்
ஒரே சந்தியில் சேர,
ஆடைகள் நினையுமே
வியர்வையின் உச்சத்தில் ,

கள்வனின் தியாகமோ ஒருகனம்
சொன்னது, அலுப்பினால்
உறங்க செய் என்று ,,
கல்லியோ தியாகமாய்
உறக்கமே உறங்கட்டும்
நம் ஊடல் நேரத்தில்
என்றது ,,
மௌன விழிகள் ,,
புரிந்தது ,,,,,,....தொடங்கியது
சாட்டும் நொடிகள் என ,..

சந்திரன் பார்க்கவே
விளக்குகள் வெட்கப்பட்டு
தன்னை அனைத்துகொள்ள
இரவின் பூச்சுகள்
சத்தம் போடுமே ,,
அலைஎதும் இல்லாமல்
கடலிங்கே துடித்திட ,
தூண்டிலின் மீன் போல
தாலியில் சிக்குதோ ,,

வண்ணமீன் எதுமே
வலையிலே மாட்டுமோ
சேலையின் கப்பலில் ,

காகிதம் நினையுமோ
கால்தடம் பதியவே ,,
நீர்குமிழ் நிறையுமே
மீனின் தொட்டியில் ,,

சோலையின் பூக்களாய்
வண்டுகள் முகர்ந்திட ,
மகரந்தம் செல்லுமோ
மாங்குயில் மந்தையில் ,,,

போர் மட்டும் நடக்கவே


சத்தங்கள் முடிந்ததால்
விடியலும் வந்ததோ ,
விடியல் வந்ததால்
சத்தங்கள் தீர்ந்ததோ ,,

மறுவிழி கூந்தலில்
பூக்களும் உதிந்திட ,
கதிரவன் பார்க்கவே ,,
மறைத்திடும் சீலையை ,,,

கள்வனின் கைவிரல்
இடுக்கிலே நெற்றியின்
குங்குமம் ,,மோதிர
மறைவிலே கள்ளியின்
கூந்தலும் ,,

மௌனங்கள் பேசியது ,,
குளியலறை செல்லும் முன்னே ,,
வானவில் நிலவாய்
புது உயிர் பிறக்கட்டும் ,,......

கவியரசன் ,,,..
இரட்டை அர்த்தம் இடம் பெறவில்லை ,,
இலைமறைவாக எழுதப்பட்டுள்ளது ,
கற்பனை காட்சியே ,,
தேடலின் வாக்கியம் ,, 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு