கல்யாண சொந்தம்,, 2

கல்யாண சொந்தம்

நலங்கு ,,நாலா புறமும்
உற்றம் சூழ ,
கன்னம் மஞ்சளிலே ததும்ப
கண்ணீர் புகையினை வீசிவது
போல் கண்களிலே நீர் [நீ] ததும்ப
விரைவாய் முடிந்தது வர்ணம்
பூசும் காவியம் ,
குங்குமம் இடம் மட்டும்
உரித்தானது என்றால் மீதம் //???
நட்பு வட்டாரத்தில் முணுமுணுத்த
ரகசிய கேள்விகளுடன் ,,
கொஞ்சி பேசின ,,

சிரிப்பினை மொத்தமாய் விலையிட்டு
வாங்கிகொண்டான் போல
தலைவா முகம் ,
அழகாய் தெரிந்தது ,

நலங்கு பண்டிகை முடிந்திட ,,
ஆரம்பமானது சாங்கியம் எல்லாம்
விடிதல் ஏதும் இல்லையோ என்ற
ஏக்கம் இருகண்களில் மட்டும்
புலப்பட்டது ,
இடைவெளியாவது கிட்டுமோ
கைவிரல் ஒரு சேர ,
இடையில் வெளியாவது கிட்டுமோ
என ஏக்கமாய் பார்த்தது
பாதி மனம் முடிந்த ஜோடிகள் ,.

எப்படியோ முடிந்து போனது
சாங்கியம் எணும் போராட்டம் .,,
 மீழ்ந்த விழிகள் களைப்பாட

என் மார் போதுமோ
ஜாடையில் பேசிட
மிச்சமாய் சேரட்டும்
எல்லையில் வீழலாம்
என்றது தலைவன் பார்வை ,

அவர் அவர் அறையிலே உடல்
மட்டும் உறன்கிட
மனதுக்கும் நேருமோ தூக்கமும்
நேரமும்,வெளிவந்த இரு ஆத்மா
ஒருசேர விண்மீன் பார்வையில்
நுழைந்திட ,,நிலவின் ஆனந்த
வெப்பத்தில் குளிர்காய்குறது
எங்க வந்த ஜோடிகள் ,,

இதமாய் அமைந்த இரவு
விரைவாய் முடிந்திட
அவசர அவசரமாய்
திருமண கோலம் பூண்டு
உடனடி ராணியாகிறாள்
தலைவி ,,,தன் பங்குக்கு

மார்பிலே சந்தனம் பூசிட ,
நெஞ்சிலே பூணுலும்
ஓடிட ,வெண்மேகம் சுருங்கி
நீண்டு வந்த வேட்டியைக்
கார்முகில் புயல் போல்
சுற்றியது தலைவன் உடல்
நேர்ந்தது அக்கின்னிகுண்ட,
திருவிழா ,மேடை ஏறியது ,,
மந்திரம் ஓதிட ,
மாங்கல்ய தனமோ
ஊர்வலம் செல்லுமிடம்
தேடி ,திரும்பி வந்தது
திருமாங்கல்யம் ,

விண்ணில் செலுத்தும் ஏவுகனைபோல்
கைகளில் பூமடல் தடவிகொடுக்க,
அசுருமாய் கைவிரல் தொடுத்த தாலி ,
மணமகள் கழுத்திலே
ஏறியும் சீரிட
மூஉடல் அமைத்திட ,
மூன்று முடிச்சு கட்டிட
தளங்கள் தாளமாய் பாடிஏ
அட்சதை தூவிடும்
ஆயிரம் கரங்களும்
அசையும் கொடுத்தது ,
ஐபுலன் சிரிப்பிலே ,

தலைவியின் கண்ணிலே
சிறுதுளி வடிந்திட ,
கள்வனின் கைவிரல் சென்றதே துடைத்திட ,
ஆருயிர் மேனியில்
மெட்டியும் இணைந்திட ,
அடக்கமாய் இருக்கவே ,
செய்ததோ என்னவோ .

காற்றினை வணங்கிடும் இலையினை
போலவே ,மானுடல் இரண்டும்
சுற்றுதே உலகினை ,
ஒரு விரல் ஒருசேர ,
கடைவிரல் அதுவாக ,
உலகமே அழிந்தாலும்
என் பார்வை உன்னிடமே
என்கிறது அவ்வழி திருமணம்

நிறைவுற்ற தாளங்கள்
முனகிட ,,பரிசுகள் மழையினை
பொழிந்திட ,ஆயிரம்
சொந்தமும் சென்றதே உண்டிட ,
புகைப்படம் மீதிலே
மோகமும் ஏற்பட ,
ஜோடியாய் பிடித்தே
உருவம் அமிழ்ந்ததோ

கண்மணி என்றுஅவன்
உன்னையும் அழைத்திட
காற்றினை விடவும்
வேகமாய் வந்திட ,
புரிந்த காதல் சேர்ந்தது
ஒற்றை மஞ்ச கயிற்றினிலே

அழகு உருவத்தில் இல்லை
வாழும் வாழ்விலே காட்டினாள் போதும் ,,
தான் உண்ட உணவினை
அவள் உன்ன ,,நிரூபணம்
அவள் என்னில் பாதி என்று ,..

[[[[மீதி நாளையும் தொடரும் ,,
சின்னதா முடிக்கலாம் நு
பார்த்தேன் ஆனா முடியல ,

சோ நீங்க நாளைக்கும் வெயிட்
பண்ணனும் ,,ஏன் என்றால்
தவிர விட்டால் ,,,உங்க விருப்பம் ,,..]]]]]]]].

,கவியரசன் ,.
நாளைய தலைப்பு
 தொடர்வு 3-பந்தம் ,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு