இருவரி கடிதம்

இருவரி கடிதம்

என் மூச்சு காற்றினை
எடுத்து கொண்டு
எந்த நிலவில் கால்தடம்
பதிக்க இவ்வேகம் ,

குறிவைத்து தகர்ற்கும்
துப்பாக்கி பார்வையிலே
துளையிட்டு உன்
அன்பால் நிரப்பினாய் ,

எதற்கு தூங்குகிறாய்
என என் இமையில்
குடியிட்டு கொள்[ல்]கிறாய்

ஏங்கும் மனதிடம்
ஓடிபிடித்து விளையாடுகிறாய்
தோற்றுபோவது ஒவ்வொரு முறையும்
நானே ,,குருடனாக
\
செந்தேள் கொடுக்கினை
இதுவரை கண்டதில்லை ,,
கோவமாக நீ வையும் வரை .

அலைபேசிக்கு என்ன
ஒரு அழைப்ப்பு வந்ததோ
காயச்சல் வந்து ,,
உன்னை மேலும் பிரிக்கிறது ,,

தெளிவுபடுத்தும் வார்த்தைகள்
ஆயிரம் காதில் விழுந்தாலும்
மறுகாதில் வெளிபடுகின்றன,,

மனதிடம் தினமும்
சண்டை இடுகிறேன் ,,
எல்லா முறையும் என்னை
மட்டும் துன்பத்தில்
அழுத்துவது ஏன் என்று

துடிக்கும் இதயம்
கேட்டு கேட்டு
துடிக்கிறது ,,அவளிடம்
இருந்து
அழைப்பு வந்ததா என்று ,,

செத்தே போகிறேன் அடியே ,,
இழுக்கும் உன்
நினைவின் தூக்கினிலே ,,

தனிமை என்மேல் மோகம்
கொண்டு கட்டி அணைக்கிறது ,,

தேங்கிடும் சிறுகுளம்
ஆகுமோ என் வீடும் ..
கண்ணீரும் தீர்ந்து போனதே

வெறுக்கும் நொடிகள் ,,
என்னை பார்த்து பார்த்தே
நகர்கின்றன ,,

கோவம் உனக்கு கிடைத்த
மிகபெரிய ஆயுதம் ,,
என்னை கொன்றே விடுகிறது ,,

ஒவ்வொரு முறை சமாதனம்
செய்யும் நேரங்களில்
பழைய கதைகளுக்கு
பூட்டுகள் இடப்படுகின்றன ,,
உன் கைகளால் ,,

மறுமுறை சண்டையின்
முடிவிலே ,,உடைக்க படுகிறது
ஒவ்வொன்றாய் ,

விருந்து படைப்பாய்
என்று எண்ணி இருந்தேன் ..
கொடுத்துவிட்டாய் ,,பெரிதாக ,

பழகிவிட்டது ,,அல்லது
மருத்துவிட்டது
என்றே கூறலாம்

வாழ்கையின் எல்லைக்கு
செல்லும் என்னை எப்படியோ
திருப்பிடும்,உன் பார்வைக்கு
என்ன செய்வேன் ,,

எனக்கு இதுவரை புரியவே இல்லை ,
புரியவும் போவதில்லை என
நினைக்கிறேன் ,,
அதானே ,,
புரிதல் இருபக்கத்திலும்
நிகழ வேண்டும் அல்லவே ,

ஒருதலை காதலே
சுகமாகத்தான் இருந்தது,
இருதலை குறிக்கிடும் போது

உன்னது பயத்திற்கும் ஒரு
முடிவு உண்டு என்பதை அறிவேன் ,,
பிரிவின் கடிதம் மூலம்,,

அருகே இருந்து உன்னை
எவனோ போல் பார்க்க நினைத்தேன் ,,
ஏமாற்றம் மட்டுமே
பார்க்க கிடைத்தது ,,

தனியே இருந்து உன்னை
நினைக்க நினைத்தேன் ,,
வலிகள் மட்டுமே
வழியில் வந்தன ,,
இருப்பிடம் தேடி ,,
இருகண்கள் அலைந்தன ,,
இயற்கையாகவே வந்த
இனமோ என்னவோ ,,
இயற்பியல் விதிகள் எல்லாம்
இனைந்து போயின
என் வாழ்கையில் மட்டும் ..

விளையாடும் கஷ்டங்கள் ,,
எனக்கு மட்டுமோ ,,
கோவம்தான் வருகிறது
என் மேல் தான் ,,
காரணம் ஏனோ ,,எதுவோ ,

புரியாமல் இருக்க
குழந்தையாகவா நான் ,,

சிரிக்கிறாய் என்கின்றேன் ,,
அழுகிறாய் ,,
கண்ணீர்கூட ,,
காகித கப்பல்
செல்லும் அளவு ஏறுகிறது ,,

சந்திரனுக்கு ஒரு கடிதம்
தயவு செய்து ,,
இன்று ஒதுங்கிவிடு ,,

உன்னை பார்த்தாலும்
அவள் நினைப்பு
அரிக்கிறது ஆழ்மனதை

வெட்கம் ஏதும் இல்லாமல்
அழுகிறேன் ,,தினம்கனம்
வாயால் அல்ல ,,
அகத்தால் ,

புன்னகைக்கும் என்
இதழ்கள்,
தெரியவிடுவது இல்லை ,,
என் உள் பாரத்தை ,,

இறக்கிடவும் தேடிகிறேன் ,,
சவபெட்டியை ,,
என்னோடு சேர்ந்து
புதைந்து போகட்டும் ,,

இருவரி கடிதம்
எனக்கான நேரம் ,,உனக்கானது
உனக்கான நேரம்...>> இனி இறப்பின் பிறப்பாகிடும்

கற்பனை காதல் ,
கவி ,... 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு