கள்ளிக்கு ஒரு மடல்

கள்ளிக்கு ஒரு மடல்

புதிதாய் துளிர்க்கும்
இலன்செடி போலவே
காண படுகிறேன் ,,
கண்ணாடியின் உடைகொண்டு
எதோ மாற்றம் நிகழ்வதை
அறிகிறேன் ,,,என்
முக நாணம் நான் கண்டு ,,

நெஞ்சுகூட்டின் சுவற்றின்
மறுபக்கம் துடிக்கும்
இதயத்திற்கு மாற்றாக ..
மற்றொரு சப்தம் ..
உன்  பெயராக இருக்குமானால் ,,

ஒளிக்கும் மின்னலை
கூட எளிதாக கையாளலாம்
போலிருக்கிறது
நங்கையை ஒப்பிடும் பொழுது ,,

வானவில் கண்டு மயங்காத
என் விழிகளும் பொய்யாகி போயின ,
ஒற்றை நிற வானவில்
நடந்து போகையிலே ,,

இருளின் ஆதிக்கம்
அதிகமாக ஆக
உந்தன் உருவம் நிழாலாய்
என் கண்ணின் முன்னே ,,

இரவின் வெளிச்சம்
காண்கிறேன் இருட்டு
அறையிலே ,,,
உன் நினைவும் நானும் தனிமையில் ,,

ஊடல் காணும்
பொழுதுகளை மட்டுமே
எதிர்பார்கின்றன
சோடை போகாத என் மனதும் ,,

அமிர்தம் தித்திக்குமோ
கசக்குமோ என அறியாமல் ..
தடவி சுவைத்து பார்க்க
தூண்டும் ஆர்வம் ,,

எல்லைகள் இல்லாத தேசம்
ஏதும் இல்லை என
அறிவேன் ,,என் காதல் வரும் முன்னர் ..

தீமைகள் ஏதும் புரிந்தது இல்லை ,,
திருட்டுத்தனம் அவ்வளவாக
நடந்தேறியதில்லை ,
உன்னை ஒளிந்திருந்து பார்த்தல்
நடக்கும் வரை ...

எனக்கு என்ன பயம் ,,
பயப்படும் வியர்வை துளிகள்
காட்டி விடுகின்றன
நான் பயபடுவதை ,
கர்வம் கொண்ட கண்களால் பார்கத்தான்
செய்கிறாய் ...சிரிப்பின்
முத்தை நீ சிந்த ,,காத்திருக்கும்
என் மனதின் உள்ளுக்கு ,,
ஒரு முத்தும் முத்தம் தருவாயோ ,,

அழகு உலகத்தின் அரக்கியே ,,,
கசக்கி எரியும் காகிதமாய்
என் மனம் சுருங்கும் முன்னே
உன் பெயர் எழுதி விடு ,,

மிச்சம் ஏதும் இன்றி
என்னை குடித்துதான் விடேன் ,,
சொச்சமாய் நான் எதற்கு ,,
கல்லூரி பாடம் கற்ற எமக்கு ,,
கருவறை பாடம் எப்போது ,,
சற்றே அனுமதி ,,
தந்து விடு ,,

மூன்றே முடிச்சுகள் இட்டுப்
இஜ்ஜென்ம உரிமையை
நிறைவேற்றி விடுகிறேன்

உன் பாதம் தொட்டு மெட்டி இட ,,
நான் மயங்கி வீழ்வேனோ ,,
இமையமலை சீவி செய்த
உன் நெற்றி என் பொட்டிட
சிதறி போவேனோ ,,
எதுவானலும் நீ
எனதாகு அது போதும் ,,,

இருப்பதை கொண்டு வாழலாம் ,,
என்றும் அன்புடன் ,,
காதலின் சிறு சிறு
முத்தங்களுடன்
என் கள்ளிக்கு ஒரு மடல் ,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு