ஊடல் காற்று

ஊடல் காற்று

மாசி மாதத்தின் ஒட்டுமொத்த
காற்றும் எனக்கெனவே
அடிப்பது போல் ஒரு
வர்ணனை அந்தரங்க
மனதிலே ,,
அழுக்காறு குணம்
விதைந்து விட்டதா
என புரியாத நிலை ,,
இதுவரை கண்டதில்லை
இத்தனை அழகை
ஒரே குவியத்தில் ,

சிந்தனை செய்தால் கூட ,,
மீள இயலாத கனவு ,
கதிரவன் கண்ணை மூடி
வெட்கபடுகிறதோ என்கிற
தோற்ற பாவனை ,
முகம் கொடுத்தும் பேசிடாத
உன் விருப்ப வலையிலே
என்னை மட்டுமே
நுழைய விட்டாய் ,
நுழைந்தும் விட்டேன் ,

இருக்க இடம் கொடுத்தல்
மடியை பிடிக்கும் கதையை
போல் ,,

நண்பன் நிலையில் இருந்து
படி உயர்ந்து ,,காதல்
தேசத்தில் உன்னையும்
என்னையும் மட்டுமே பூட்டி
விட்டு சாவியினை தொலைக்க
நினைக்கிறேன் ,,
பகல் கனவோ ,,

பகல் நிலைவை போலே
என் பார்வையில் மட்டும்
பளிச்சிட ,,அத்துவனம்
ஆகின்றன ,,,
ஒரு நொடி போதும்
என நினைத்து வந்தேன் ,,
எரிமழை பொழியுமோ ,,
பனித்துளி தூருமோ
உன் விழிவழி சாலையில்

திங்கள் தினம் தான் ,,
பகல் பொழுதுதான் ,,
தயக்கத்தின் உச்சியிலே ,,
மாலை ஆகும்
மங்கும் ஒளியும் ,,
உனக்காகவே
அழைக்க பட்டது போலவே
அழைக்காமல் வந்து கொள்கிற
பயம் ,,நிஜம் தான் இக்கணம்
கில்லி பார்க்கும் கணம்
கூறிவிடுவேனோ
என்ற மயக்கத்தில் அவளும் ,,
உரிமை மீரிவிடுவேனோ
தயக்கத்தில் நானும் ,,
பிணையும் மாவினைபோலவே ,,
பிசைந்து பிசைந்து ,,,
அசைந்து அருகிலே செல்ல ,,
மௌனம் பேசிய வார்த்தைகளால் ,,
பேச்சுகளுக்கு மதிப்பு கிட்டாமல்
போய்விட்டதோ என
அவள் புரிந்து ,,
என் கன்னமருகே ,
இதழினை பதிக்க ,,,,
ஒரே துளி உலகம்
நீதானடி  ,தோன்றுதடி
அன்பின் அனுமதி
தாழ் உடைக்க பட்டது ,,
தடைகள் தகர்கபட்டது  ,

மோகம் ஆண்களுக்கே
உரித்தானது,எவன் உளறியது ,,
பெண்கள் காட்டி கொள்வதில்லை ,,

உணர்சிகள் ,எழும்பிடும்
வியர்வையின் வழியே ,,
காதலை நோக்கிடும்
விரல்கள் ,.
கடைக்கண் பார்வை தொலைவினிலே ,,
கணுக்கால் கூட ,,உதறுதடி ,,
சீக்கிரம் சொல்வாயோ,

என் கழுத்தில் நீ
கை பதிக்க ,,
கொள்வாயோ என ,,நினைதேன் ,,
ஆமாம் கொன்றாய் ,
ஆனந்தத்தில் ,,
வரிகளில் கூடவா
இவ்வளவு சுகம் இருக்கும் ,,
நீ பேசிய அவ்விரு வார்த்தைகளிடையே ,,

நான் பேசிய மௌனம் ,,
உன் காதோரத்தில் எப்படி விழுந்தது
என் ஆழ்மனதுடன் தொடர்பில்
உள்ளாயோ ,,பல வினாக்கள் ,,
விளங்காமல் ஒருபுறம் நிற்க ,,

விட்டு விடுவாயோ என
நான் பார்க்க ,,தொட்டுதான்
விடுவாயோ என நீயும்
கண்ணில் விளக்கிட ,,
அடுத்தது எதுவோ
என பெருமூச்சும் ,,
வரும் முன்னே ,,
சற்றே விலகிய ,,உடல் ,
திரும்பவும் இணைய ,,
கட்டி அணைக்குமா என
பார்க்கையிலே ,,
பொசுக்கென்று
காலை பிடுத்து ,,என்னை
உன் கரம் கொண்டு
அடைவாயோ என்றது
உன் பார்வை ,.
காலம் பதில் சொல்லும் ,,,
என் உயிர்  நீங்கினாலும்
எமனை கொன்று உன்னுடன்
வாழ்வேன் ,என்றது என் உதடுகள்
சட்டென ,,,

நான் வாய் மூடிய அடுத்த கணம் ,,
என் வாய் மூடியது
அவள் உதட்டின் பள்ளங்கள் மூலம்
அவள் விரல்கள் ,,
முதுகினை கிறுக்கு பிடி பிடித்தது ,,

கட்டி அனைக்கியிலே தான்
புரிந்தது ,,தாயின் உணர்வு
தாரத்தின் பாதி என்று ,,,

சிலநேரம் ,,சிணுங்குவாய் ,
சிலநேரம் உறங்கவாய் ,,
சிலநேரம் என்ன செய்வாய் என்றே .
விளங்குவதில்லை ,,,

இருந்தாலும் என் விழியும்
உன் மனதும் பேசிய
உடன் படிக்கை பத்திரத்தில்
காதல் கை எழுத்தானது ,

ஒப்புதல் வாக்கு மூலமாக ,,
அன்பும் ,,அறனும்
விவாதிக்கபட்டது ,

விவாதம் நடந்து சில
நாட்களில் விவாஹம் ,நடக்குமே
என கடந்து செல்கிறது ,
காதல் உறவுகளிடையே
இல்லத்தில் ,
பார்க்கலாம் ,,முடிவுகள் ,என்ன வென்று

அடுத்த அத்தியாயத்தில்
காண்போம் ,,
கவியரசன் ,
காதல் விழிகளுடன்
காத்திருங்கள் ,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு