முற்றுப்புள்ளி

முற்றுபுள்ளி

நைவளம் செல்கிறது ,,
பொய் வான மேகங்கள் ,,
மந்திர நிமிடங்கள் மெதுவாக ஓடிட ,,,
நல்யாழ் தீட்டும் விரல்கள் ,,
நிறுத்தும் ஓசையினை ...

இலங்குழல் ஓட்டைகளில்
என்னவோரு ஆனந்த ராகம் ,,

மெய்த்தமிழ் நான் சொல்ல ,,
பொய்யாகுமோ அச்சத்தில் ,,,
நாணம் அடைக்கிறது என்  தொண்டையினை ,,

இருபது வருடம்
காத்திருந்த காலத்தின்
தவம்தான் இருள்கூடும்
ஒளியாய் என் தேவதை ,,

வண்ணங்களின் விரிவில்
எட்டாம் நிறமாய் நீ இருப்பாய் ,,
இசைகளின் லயத்தில்
ஏழாம் சுருதியை நீ தெரிவாய் ,
மரண பள்ளத்தாக்கு
என்னை அழைக்குதடி ,,
உன் கன்னத்தின் குழி விழவா ,,
மோகத்தின் மொத்த்த வடிவம்
சிரிக்குதடி ,,இதழ்ப்பனி பிரதேசம் ,,

கிறுக்கியை போலவே
முதல் நான் கண்டேன் ,,
சிறுக்கியே காலமே ,
காதல் நான் கொண்டேன் ,,

எதில் எதுவோ
அதில் இதுவோ ..
புரியாமல் உலரும்
வாக்குகள் வீணாகி போகுமோ ,,

இதம் தேடும் என்
கண்களின் இமைக்கு என்ன
பதில் நான் சொல்ல ,,
உன் பெயர் சொல்ல அடங்குமோ ,

மரம் தாவும் குரங்கை  போலவே
மனதை தேடுகிறேன் ,,,
விழியின் மேல் உயிர் வைத்து ,,

கறவாத பாலாக உந்தன் முகம் ,,
தடைபோடும் ஒரு குச்சி எந்தன் அகம் ..
என்ன நான் சொல்ல ,,

முற்றுப்புள்ளிகள் இடுகிறேன் ,,
முடிக்கும் முன்னரே ,,
பார்க்கும் யாவும்
விழிக்கு சொந்தம் இல்லை ,,

தொடரும் ,,,
கவியரசன் ,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு