Posts

சருகு -கவிதைகள்

திசையறியாத சருகின்  நுனியில் வீடொன்று கட்டி நாடோடியாவோம் வா விளக்கொளியில் துளியெடுத்து  நிலவொளி செய்வோம் ,  அதில் நீருடுத்தி நாம் குளிப்போம்  காற்றில் கதையெழுதி  கண்ணில் திரையோட்டி  வானில் படம்பார்ப்போம் வா  கவியரசன் மனோகரன் .

நல்லை அல்லை - 1

Image
 கானல் நிலத்தில்  ரயில் பூச்சியின் கால்தடம் ! கண்டுகொண்டு கடந்தவன் எவனோ  விம்மி விரைந்த வானத்தில்  விளக்கேற்றும் வரை  காத்திருக்குமோ கற்றை ஒளி  சிகப்பாய் கருப்பாய்  பளபளப்பாய் சில்வண்டு  சீறிபாயும் தென்றலிலும் .  பஞ்சை உதிர்த்து பட்டுடையாக்கி  பயிர்செய்யும் நிலம்போல  வனன்தவள் அவளோ  எவன் செய்தான் மழை ! இவள் இப்படியே இருந்திருக்காலம்  உன்னால் !!!!!!!!!!! நல்லை அல்லை .

சுவாசமாய் அவள் - Swasamaai Aval - Tamil Love kavithaigal

காற்றின் வேகத்தில் உன் கால்தடம் கலைந்ததோ  கானல் நீரிலே கான்முகம் வரைந்ததோ  வெள்ளை வானிலே வெற்றிடம் நிரம்பியே  வீட்டில் மடிமீது வளைந்து கொண்டதோ  விழுந்த ரோசாக்கள் எழுந்து நிற்குமோ  அழுந்த மனம்தன்னில் சிரித்து சொக்குமோ  கொள்ளை மாந்தரில் தனித்து நின்றும் நீ  அல்லை கூந்தலில் அமிழ்ந்து செல்லுமோ !

பசி

Image
வியர்வையில் துணி நனைத்து வயிற்றோடு ஒத்திஉலர்த்திய காலத்தில் கனவென்பது ஒருவேளை உணவென்பேன் ! விழும் பருக்கைகள்  எனக்காக விழக்கூடாதா என்று  வேடிக்கைபார்த்த வித்தியாச மனிதர்களில்  அன்று நானும் ஒருவன்  இரைக்காமல் சாப்பிடு என்று  அம்மா சொல்வதில்  என் பசி அடங்கிவிடும் ,  எதுவும் மிச்சமில்லை எனக்காக ! எச்சில் இலை என்று எட்டிஎரிவதை  எச்சிலூற உண்ணும்  ஏகோபித்திய மாக்களில் ஒருவன்  உடுத்திய துணியில் மிடுக்கைபார்த்து  படுத்த இடத்தில் வீட்டை பார்த்து ,  சாப்பிட்டாயா கேள்வியாய் கேட்டு  சந்தித்த மனிதர்கள் கைகுலுக்கி  சற்றே பார்த்தால் !ஆன காலம்  வீட்டை பிரிந்து விலாசம் தொலைந்து  விண்ணே அடைக்கலமாய்  வீணே அலையும்  எவருக்கும் பொருந்தும்  எனக்கும் சமர்ப்பணம் !

கருப்பழகி

Image
அதோ , சாம்பலாய் போகட்டும் அந்த கதிர் வளையம் . கன்னியின் மேனியில் கோவமோ ஏன் , உன்னை வடிக்கும் நேரத்தில் வாரிவழங்கிவிட்டானோ தூரிகையில் வித்தன் அவன் கருநிறம் கொண்டே காவியம் முடித்துவிட்டான் . கண்மை திருட , உயிரோவியம் அனுப்பி வைத்தான் . பிரம்மன் ? புல்வெளியில் பனித்துளிகள் பிரதிபலிக்கும் இவள் விழிகள் . வயலின் வாசித்தே நகர்கின்றன வார்த்தைகள் அல்ல  வாழ்க்கையும் கூட வஞ்சிக்கொடிகள் வண்ணமாய் கண்டவனுக்கு அடர் நிறம்  என்றதும்  ஆச்சர்யமே வானும் விழுங்கும் இருட்டோளியில் நிலா அழகென்றால் , மிளிர மறைந்த இரவும் அதன் அடரும் அழகன்றோ வெட்கி குனிந்து விரல் தரை தேய்த்து , என்னை நோக்கி இன்முகம் கண்டாய் ! பாயும் காற்றில்  பல்சுவை கண்டேன் ! பதியம் அன்றி வான்வரை வளர்ந்தேன் . கண்பட்டு விடுமென கண்மை இட்டிருந்தாய் கண்டு கொள்ள கால் நாள் கழிந்தது , உதடுமட்டும் அடர்சிவப்பில் ஒன்றே முக்கால் அங்குலமாய் தனியே தெரிந்தது . அடர்மழையே அழகென்றால் அவள் என்ன ! விதிவிலக்கோ .

மந்திர புன்னகை -1

வெளியேறிய வாசனையில் முகர்ந்தது அவள் முகம் , மகரந்த சேர்க்கையில் தவறவிட்ட தேன்துளி  காரிருள் கண்ணுக்கிடையில் விழுந்தது எத்தனை மானுட பூச்சிகளோ தீச்சுடர் கண்டேன் திசைஏது அறியாமல் தொலைந்துவிட்ட காற்றோடு கைகள் பிணைத்தவாறு வர்ணம் வேண்டுமென்றால் வானவில் கொண்டு செல்வாள் வாசம் வேண்டுமென்றால் மலர்பொழில் வசித்துவந்தாள் காணும் கண்ணொளியில் நான் கண்ட என்முகமோ பேரார்வம் கொள்கிறேன் பகல் கனவு பளித்திடவே ,. google.com, pub-3059331261787785, DIRECT, f08c47fec0942fa0

கிறுக்கன் உளறல் -2

வீழும் வான் , ஆசையில் புல் கனவோடு நீ கானலில் நான் விடிந்தது எழுந்தது என்றது கைப்பேசி கூச்சல். கண்ணிமைக்கும் கணத்தில் மின்னல் ஒளி என்னுள் தெறித்தது, வேடிக்கை பார்த்தேன் கண்ணாடியில்  என்முன் நீ. வாடகை வாங்கியது நீ வீசி சென்ற வாசனையும் காது துளைக்கும் சப்த நெரிசலும் புல்லாங்குழல் இசையானது.. கொலுசொடு இணைவுண்டு. ஐந்தடி தொலைவில் ஆச்சர்யம் காண்கிறேன், எடுத்துச்சொல்ல எவருமில்லை.