கருப்பழகி

அதோ ,
சாம்பலாய் போகட்டும்
அந்த கதிர் வளையம் .
கன்னியின் மேனியில் கோவமோ ஏன் ,

உன்னை வடிக்கும் நேரத்தில்
வாரிவழங்கிவிட்டானோ
தூரிகையில் வித்தன் அவன்
கருநிறம் கொண்டே காவியம் முடித்துவிட்டான் .
கண்மை திருட , உயிரோவியம்
அனுப்பி வைத்தான் .
பிரம்மன் ?

புல்வெளியில் பனித்துளிகள்
பிரதிபலிக்கும்
இவள் விழிகள் .

வயலின் வாசித்தே நகர்கின்றன
வார்த்தைகள் அல்ல
 வாழ்க்கையும் கூட

வஞ்சிக்கொடிகள் வண்ணமாய் கண்டவனுக்கு
அடர் நிறம்  என்றதும்  ஆச்சர்யமே

வானும் விழுங்கும் இருட்டோளியில்
நிலா அழகென்றால் , மிளிர மறைந்த
இரவும் அதன் அடரும் அழகன்றோ

வெட்கி குனிந்து
விரல் தரை தேய்த்து ,
என்னை நோக்கி இன்முகம்
கண்டாய் !
பாயும் காற்றில்  பல்சுவை கண்டேன் !
பதியம் அன்றி வான்வரை வளர்ந்தேன் .

கண்பட்டு விடுமென
கண்மை இட்டிருந்தாய்
கண்டு கொள்ள
கால் நாள் கழிந்தது ,
உதடுமட்டும் அடர்சிவப்பில்
ஒன்றே முக்கால் அங்குலமாய்
தனியே தெரிந்தது .


அடர்மழையே அழகென்றால்
அவள் என்ன !
விதிவிலக்கோ .








Comments

Post a Comment

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு