Posts

Showing posts from June, 2016

ஆலங்கட்டி

ஆலங்கட்டி கண்ணோரத்தில் நீ வரும் நேரத்தில் நெஞ்சோரத்தில் புயல் மழை வருவதில் ஐயம் ஏதோ விதம் விதமாய் நிலவும் தெரிந்திடுமோ வண்ணங்களின் துணியிலே அதுவும் மிதந்திடுமோ வானத்தின் இருளில்தான் மிளிருமோ விழிக்கோளம் சுழற்றி அடிக்குமோ , மாயம் தானடி,நீ வந்து சென்ற அடுத்த கணம் குப்பையின் வடிவங்களில் ஓவியம் காணும் என்னிரு குருட்டு விழிகள். வித்தியாசம் தந்திடாமல் நகரும் காற்றுக்கும் உடை உடுத்தி பார்க்க தூண்டும் நயம் பூண்ட நெஞ்சம் ஏழைகள் கூரை மழையினில் நினைவது போலவே நினைகிறேன் காதல் மழை பசித்தும் விரதம் இருக்கும் ஒரு தியான நிலை , நினைவுகள் ஒரு சேர அவள் மட்டும் மண்டையின் நடுவில் நினைத்திடும் யோகா இல்லாத யோகா அத்துனை பொருத்தம் சேருமா என தெரிந்துவிடவில்லை என் விழிகளில் உண்மையாக பொருந்திவிட்டாள். உச்சி தலையின் ஒரு குளிர்ச்சி என் தாய் ஜென்னி வந்து இருக்குமோ என என்னை கேட்க என் உள்மனம் என்னிடமே இல்லை அவள் வந்துவிட்டாள். பாத சுவடுகள் எனக்கே தெரிவது இல்லை அத்தனை பொறுமை என் நடையினிலே எனக்கே தெரிந்துவிடாமல் . அழகாய் நானும் ஆகிடாமல் நித்தம் ஆகிறேன் என் கண்ணாடிகளில் ம

அசுர அழகு

பூமியிற்கும் ,,,பால்வழிக்கும் புதிதாய்  ஒரு தொடர்பு முளைக்குமோ ,, அவள் புன் சிரிப்பு ,,, புவியினை புன்னாக்கிவிடுமோ ,, அச்சத்தில் மற்றவை ,, கிரகங்கள் ,,போர்வையில் ,, சிறு சிறு துளைஇட்டு அவள் நடப்பதை பார்க்கும் ,, மந்திர துளைகள் ,,துகள்கள் , வான்மிஞ்சும் ,,உயிரம் அவள் கொள்ளவில்லை ,, பிறகேன் ,,இத்தனை வாக்கிய பந்தம் மற்றவை இடையே ,, விரதம் கொல்லாத ,,பிரார்த்தனை போலவே , திங்களும் செவ்வாயும் மோதிவிடுமோ , உடன் நிற்கும் புதனிற்கு ,, பங்குனி வெயில் உள்மனதில் , பார்வையில் வெடி வைக்கும் ,, அவளுக்கு வர்ணம் பூசவும் திட்டம் ,,புவி மழையில் , நிறம் மாற்றினால் அழகு குறையுமோ ,, அனாவசிய யோசிப்பு , வர்ணபகவான் உடன் வருகை ,, மேலாதிக்க குழுவுடன் ,, சிந்தனை இயலாத ,, அளவா கூட்டம் , திடிரென்று இத்தனை அழகு எங்கே வந்தது ,, எதற்கென வந்தது ,, படைத்தவனே புலம்பிடும் ,,முதல் கோலம் , பகலிடையே தோன்றும் இரவா ,, அவள் ,,தனித்து தெரிந்திட அசுர அழகென்பது ,,இதுதானே , வான்விழி தேவதைகள் பொறாமை கொன்றிடும் ,, மனதில் குன்றிடும் , தேசங்கள் ,,ஒன்றிணைத்து ,, உலக மொத்த , கலைநயம் ,,ஒரு சேர

நீதான் விழியடி

நீதான் விழியடி ,, கவிதைகளில் உச்சம் தெறித்து ,, பிதறிதள்ளும் ஆனந்த கிறுக்கன் நான் ,, வார்த்தைகளாய் வந்து விழும் அவளின் சிறு சிரிப்பு மணிகளுக்கு வெட்கப்படும்..மனம் வர்ணம் உடுத்தும் அவளின் வானவில் பார்வை ,என் நினைவிற்கு ,, செந்தேளின் கொடுக்கும் சாய்வாய் போகும் ,, அவளின் தொடுதல் ,,பட்ட கரம் , வெண்முகம் கண்ட அந்நாளில் இருந்தே , இம்முகம் வாடியது இல்லை ஒரே துளியில் மழையும் ,, ஒரே துளியில் நெருப்பும் தெரியுமடி ,,,இரண்டுமே உன் பார்வையோ ,, ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் வருமோ ,, உன் பற்றி என் நெற்றி தரும் சொற்கள் ,, எதுகையின் கைபிடியும் ,, மோனையின் மெய் உறவும் ,, என் இடம் சேருதடி,, கண்டநாள் முதல் கிரங்கிதவிக்கும் என் இதயத்திற்கு உன் பதில் ஏதோ ,, உவமை அணியை தன்] உடுப்பேன கொண்டவளே ,, மலர்சிந்தும் உன் மொழிமொத்தம் தந்துவிட ,,வேண்டாம் ,, ஒற்றை வார்த்தைகளில் என் உயரினை பறித்து விடு அது போதும் ,, கொண்டு சென்று என்னை அடைத்தாலும் சரி எப்படியாவது என்னை உன் மனதில் அடைத்துவிடு செல்ல சொற்களால் என்னை தீண்டிவிட வேண்டாம் ,,சொல்லாமல் இருந்திடாமல் இருந்திடு அது போதும் ,,

வியர்வை அகம்

வியர்வை அகம் ,, சாலையின் புறத்திலே,, புதரின் குடிசையிலே ,, பச்சிளம் சத்தம் பாடுதம்மா ,, பாலுக்காக கதறுதோ,, பெத்தவளை தேடுதோ ,, படைச்ச்சவனை திட்டுதோ , எது சொன்னாலும் எமக்கது புரியாதே ,,, சுடுகிற வெயிலும் இல்லை ,, குளுருற இரவும் இல்லை ,, மனத்துளே அன்பு இல்லை ,, கொடுக்கவும் நாதி இல்லை ,, அகதி பூவாய் சேரிலே மலர்ந்தேன் , அழகாய் பார்த்திடவும் கண்களும் இல்லை ,, விலங்கு உருவாய் நடையிலே ஆனேன் ,, மதித்து பேசிடவும் கூட்டங்கள் இல்லை ,, சோற்று சண்டையிலே படிப்பும் ஓடுதம்மா ,, நாற்று நாடுவதற்கும் நிலமும் இல்லையம்மா ,, விரதம் நானும் இல்லை ,, விரதம் இருக்கிறேன் ,, பசியும் எனக்கும் இல்லை பொய்களும் சொல்லுறேன் ,, படித்திட சான்று இல்லை பள்ளியை நாடினேன் ,, நல்லவர் அழியவில்லை கல்வியும் கற்கிறேன் ,, விடலை பருவமும் விற்று தொலைக்குறேன் ,, வறுமை போர்வையிலே முழுதும் மறைகிறேன் ,, தினம் செத்து தினம் பிழைக்குறேன் ,, உழைப்பு மட்டும் வருமா ,, மனம் வெறுத்து கணம் விழுகிறேன் , பிழைப்பு எனக்கு வரமா ,,? கன்னி பருவம் காதலை சுமக்குமோ ஏழை மழைதனில் நினைந்தே இருப்பேனோ ,, தெருவிளக

மஞ்சள் நிலவு

மஞ்சள் நிலவு இதய நாளத்தின் இடையே ஒரு அழகான கோடு. வரும் உதிரம் உன்னை தொட்டு குளிராய் போக ,,,விறைத்து போவேனோ உரைத்து சாவேனோ ,,, வண்ணங்களின் விரிவில் எத்தனையாவது நிறமடி நீ,, எண்ணி பார்க்க கண்களும் இல்லை ,, ஆகாயம் கூட ,,சின்னதாய் போகுமடி ,, உன் நெற்றி நீ சுருக்கையிலே ,, வதனம் கொள்ளும் மரணம் ,,, மண்டியிட்டு வீழுமடி ,, பாசக்கயிறும் உன் கழுத்தில் பாசி மணியாய் ஏறுமடி ,, ,, முழங்காலுக்கும் முகத்திற்கும் இடையே தூரமும் கூடுதடி ,, முன்னே நீ நிற்கையிலே ,, மத்திய வெயில் கூட ,, மண்டையில் மழை பொழியும் , மாலை இருள் கூட ,, பளிச்சென்று ஒளி வீசும் ,, உழி கொண்டு செய்த உருவமோ ,, உயிர்கொண்டு செய்த புருவமோ ,, அத்தனை ஜாடையடி ,, உன் புருவ பேசுதடி ,, அடக்கியும் நீ பேசிட வேண்டாம் ,, ஆயிரம் பதில் சொல்லும் உன் கண்முன்னே ,, வீணையின் வாசிப்பு அடங்கும் நொடியில் ,, உன் குரல் ஒலிக்கும் ,,, என்ன ஒரு பொருத்தம் நடந்திடும் வீணையோ நீ ,, காதலெனும் புதுமொழிக்கு அர்த்தம் தந்தவள் ,,, கடற்கரை மணலினே நண்டு நடையிட .. பிடிபடுமோ ,,என் மனம் ,, வலையிடையே சிக்கிய மீனாய் நான் துடிக்க ,,

இமை இடையே ஊசியாக நீ ,

இமை இடையே ஊசியாக நீ , என் தாயின் கருவறை நான் கிழித்து பிறந்தது உனக்காக தான் என்று நினைத்து இருந்தேன் ,,, கண்களுக்குள்ளக சொற்பனம் போலவே என் நெஞ்சில் மலராய் நீ விழுந்தாய் மரமாய் ஏனடி வளர்ந்தாய் ,, எழுதாத எத்தனையோ கவிதைகள் உன்னை கண்ட நொடியில் சிதறி விழுகின்றன,, கண்ணாடி துகள் போலவே ,, வசியம் வைத்து இழுத்திட என்னதான் அவசியமோ உன் கண்களுக்கு ,,, நவீனம் ,,,இழுத்து சாய்ப்பதே உன் கண்ணுக்கு வேலை போலாயிற்று ,, ஆழம் தெரியாமல் கால் விடுவது தவறென்றால் ,, உன் கன்னக்குழியில் மூழ்கிய எனக்கு என்ன தீர்வு ,, விஷத்தின் மறுபெயர் நீ விலகி செல்வதோ ,,, எத்தனை முறை தான் சாவது ,,, பிரசவித்த பட்டாம்பூச்சியின் வண்ணத்தை போலவே தினம் தினம் ,, புது புதிதாய் உடுத்துகிறேன் ,, நீ பார்க்கவோ ,,, உன் கண்கள் ரசிக்கவோ ,, வெட்கம் இன்றி சொல்லிடும் என் வாயிற்கு கூச்சமில்லை ,,, உன்னை பார்த்த கணம் நான் விழுந்தேன் என்கிறது ,, வெள்ளை காகித மனதில் உன் பெயரை பதத்து அமைதி காக்க செய்வது ஏனோ ,, வரலாறுகள் பேசிடும் பழந்தமிழ் போலவே ,, உன்னை கண்டிடும் எனக்கு புலப்படுவதில்லை ,,, ஏனோ புரியாத ம

கால் காெலுசு அடங்கும்;

ஆசைகளை  ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டி என்மேல் பொத்தென போடுகிறாள் என்னாவேன்,,, இதயம் துடிப்பது மெதுவாகும் ] அவள் இருக்க என்னை அணைக்கையில் அத்துனை பாசம் ,, சிலநேரம் கோவம் மூடிவிடுகிறது பாசத்தை ,, வெளியேவரும் தருணம் முதற்கொண்டு ஆடை சரிபார்க்கும் புராணம் தொடங்கிவிடும் ,,, எனக்கென வாழும் தேவதை ,, எழுதிய வார்த்தக வாய்  விட்டு பேசுமோ ,,,அதிசயம் ,,, நடக்கிறது ,,, திருவள்ளுவர் எழுதிய இருவரி உன்னதம் நீ என புரிகிறேன் ,, சிலநேரம் புரிகிறாய் பல நேரம் உட்சொல் தெரியாமல் குழம்பிட வைக்கிறாய் ,, எதுநான் சொல்லிட ,, எதை நான் விட்டிட ,,, சொல்லி முடிக்க ஆயுல் போதுமோ ,, வாழ்ந்து பார்க்க பல ஜென்மம் கூடுமோ ,,, விடை தெரியாத பொழுதுகள் இருக்கும் வரை வினாக்கள் நீளும் அதுவரை சண்டைகள் பொழுதுபோக்காக வந்து செல்லட்டும் அவள் செல்லமாய் என்னை கொஞ்சிட ,,, பைத்தியம் தான் உங்கள் மனதின் பேச்சு ,, என்ன செய்வது ம காதலித்து பாருங்கள் ,, உங்களுக்கும் இதே நிலைதான் , வஞ்சமாய் புகழவில்லை அணிகளில் கூடவும் அவளை திட்டிட விரும்பவில்லை ,, போகட்டும் ,,,காலம் மூன்று முடிச்சுகள் இருகட்டு

கால் கொலுசு சத்தம்

Image
சத்தியம் செய்தும் நிரூபணம் ஆகாத உண்மைகளின் இருட்டில் உன் காதலும் சேருமோ கண்டதும் காதல் பிறக்க அவ்வளவு அழகு இல்லை , என் மனம் நீ கண்டதில்லை ! என அறிகிறேன். ஆசைகளின் வடிவில் தான் ஏமாற்றம் என்பதை அடிக்கடி நீ விலகும் கணம் எல்லாம் உணர்கிறேன் , மற்றொரு கண்டம் குடியேறும் அளவு கவலைகள் சேரும் நிலையில் மீண்டும் திரும்பும் உன் குரல் நிலையால் திகைக்குமோ என் உயிர் , நிலவுகள் தேயும் அதே நாளில் தான் உன் அன்பும் தேய்கிறது நிலவில்லா பொழுதில் பைத்தியம் பிடிக்கும் என்ற கூற்று உண்மைதான் அவள் சாலையில் நின்ற மாலை நேரம் கண்களை இருக்க மூடும் சொற்பனம் கண்ட கணம் வழுக்கி விழுந்தேன் சாலையும் என் கீழ் விழுந்தது சாலைக்கு வந்த மாரடைப்பில் நான் பிழைத்தேன் நல்ல வேலை வாகனம் தப்பித்தது அவள் அருகில் நின்ற மரத்தினில் மோதி! மோகபுயல் என் மனதில் கொழுந்தாக வளர கிள்ளிவிட்டது அவள் சினங்கொண்ட பார்வை ! மருந்தளிக்க கூட முடிவதில்லை உடல் வலி நீக்கி மனவலி தந்து விலகியவள் பாதம் தடம் என்னை பார்த்து ஏளனமாய் சிரித்திட உடைந்து போனவனாய் அவள் தடங்களின் மேற்கூரையில் என் முகம் வைத்து அழுக

கால் கொலுசு. 1

கால் கொலுசு , கனவு சோலைகளின் மறைவின் நிழலில் உறங்கிடும் வண்ணத்து பூச்சியின் பட்டு மேனி திரும்பிடும் கணம் ,, என்னை மறந்து நான் வியந்தேன் ,, காணாத ஒரு அழகு கண்முன்னே வந்து நிற்கையில் அசையா சிலை ஆகிறது என் கட்டுடல் , சிலை என்று நடக்குமோ வந்த பகல் கனவு பலித்து போனதாக ஒரு கனவு ,, நிஜங்களின் மார்பில் துயில் கொள்ளும் பொழுது புரிவது இல்லை  ,,, எல்லை மீறி அடிக்கும் காற்று பிரிக்கும் என்று தென்றல் தேடி வந்ததோ தூதுவன் அனுப்பி வைத்ததோ நாரதன் நடத்தியதோ எதுவென புரிவதற்குள் ஏகாந்தம் என்னோடு சேர்ந்து கொள்கிறது ,, உச்ச பட்ச அன்பு எதுவோ அதனை சேமித்து வைக்கிறேன் ,, ஆழ்மனத்தின் ஒரு பக்கத்தில் கானம் கண்ணீரோடு இசைக்குமோ சோகத்தின் பிடியில் சிக்கிய மயில் போல ,, துடித்து விடுகிறது மழை எல்லோருக்கும் படைப்பது ஒரு இதயம் தானே திடீர் என ஒரு கேள்வி இதயத்தில் மொத்தம் நான்கு அறைகலாம் ,, ஒரு அறையில் கூட இரத்தம் சேராமல் ஏனோ ஒரு வித்தியாச  நிலை நீ வந்து நிரம்பியதால் இருக்குமோ ,, நின்றும் தொலையாமல் தவிப்பெடுத்த தருணம் ,, அர்ச்சனை தட்டுகள் இல்லாமல் செய்யும் ஆரதனைகளின்

ஒற்றை வழி பாதை

ஒற்றை வழி பாதை கானம் கேட்டிடும் தருணமெல்லாம் கனவின் நிழல் கண்முன் நடனமாடும் நேரம் ,, கணக்கில்லாமல் நீள,, எதோ புரியாத மொழியினை பொழிந்து செல்கின்றன பேசாத மேகங்கள் , வாமணன் தேசத்தில் மூண்ட கோவமோ என்னவோ ,,, நீர்த்துளி தவிர்த்து அக்கினி மழை குளிராய் என் வானில் ,, அற்புதங்கள் தினம் நடக்கும் தெரியாத உறங்கும் பொழுதில் கண் இமைக்கும் வலிக்காமல் ரத்தம் உருஞ்சும் அழகு அரக்கி ,, கிழித்து கிழித்து இமைகளின் போர்வையை அறுத்து ,,,உள் நுழைந்து என் உறக்கம் கெடுப்பதில் என்ன அற்ப இன்பம் உமக்கு , பொடிநடையாய் நான் யோசித்த நாட்களை சாலையில் கழித்து இருந்தால் விமானம் இல்லாமல் வேறு நாடு சென்று இருப்பேன் , வகை வகையாய் உணவினை விரும்பின என் நாவுகள் செத்து போயின , காதல் காதடைக்கும் கணம் ,, வேர்க்குரு போலவே என்னை குத்துகிறாய் எரிக்கிறாய் ,, ஆனாலும் என்ன அக்கறை அழகு பார்த்திட ,, உன்மேலும் தூவுகிறேன் வாசம் வீசும் வாசனை பொடியினை ,, அமைதியாக இருக்கிறாய் என நினைக்கிறேன் ,,ஆழ்மனம் பயபடுகிறது ,, எதிர்கால சேமிப்போ என ,, நமக்குள் சண்டை வருவதில் எனக்கு எந்த கடினமும் புலப்பட