கால் கொலுசு. 1

கால் கொலுசு ,
கனவு சோலைகளின்
மறைவின் நிழலில்
உறங்கிடும் வண்ணத்து பூச்சியின்
பட்டு மேனி திரும்பிடும் கணம் ,,
என்னை மறந்து நான் வியந்தேன் ,,

காணாத ஒரு அழகு கண்முன்னே
வந்து நிற்கையில்
அசையா சிலை
ஆகிறது என் கட்டுடல் ,

சிலை என்று நடக்குமோ
வந்த பகல் கனவு
பலித்து போனதாக
ஒரு கனவு ,,

நிஜங்களின் மார்பில்
துயில் கொள்ளும் பொழுது
புரிவது இல்லை  ,,,
எல்லை மீறி அடிக்கும்
காற்று பிரிக்கும் என்று
தென்றல் தேடி வந்ததோ
தூதுவன் அனுப்பி வைத்ததோ
நாரதன் நடத்தியதோ
எதுவென புரிவதற்குள்
ஏகாந்தம் என்னோடு
சேர்ந்து கொள்கிறது ,,

உச்ச பட்ச அன்பு
எதுவோ அதனை
சேமித்து வைக்கிறேன் ,,
ஆழ்மனத்தின் ஒரு பக்கத்தில்

கானம் கண்ணீரோடு இசைக்குமோ
சோகத்தின் பிடியில் சிக்கிய
மயில் போல ,,
துடித்து விடுகிறது மழை

எல்லோருக்கும் படைப்பது
ஒரு இதயம் தானே
திடீர் என ஒரு கேள்வி

இதயத்தில் மொத்தம் நான்கு
அறைகலாம் ,,
ஒரு அறையில் கூட
இரத்தம் சேராமல்
ஏனோ ஒரு வித்தியாச  நிலை
நீ வந்து நிரம்பியதால் இருக்குமோ ,,
நின்றும் தொலையாமல்
தவிப்பெடுத்த தருணம் ,,

அர்ச்சனை தட்டுகள் இல்லாமல்
செய்யும் ஆரதனைகளின்
மத்தியில்
ஏற்றப்படும் தீபத்தின்
ஒளி கூறும் ஒரு ஆனந்த நிலை
அடைகிறேன் ,,,
கன்னி கட்டை விரல் என் மேனி
தழுவையிலே ,,

தொடரும்....

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு