மஞ்சள் நிலவு

மஞ்சள் நிலவு

இதய நாளத்தின் இடையே
ஒரு அழகான கோடு.
வரும் உதிரம் உன்னை தொட்டு
குளிராய் போக ,,,விறைத்து போவேனோ
உரைத்து சாவேனோ ,,,

வண்ணங்களின் விரிவில்
எத்தனையாவது நிறமடி நீ,,
எண்ணி பார்க்க கண்களும் இல்லை ,,

ஆகாயம் கூட ,,சின்னதாய் போகுமடி ,,
உன் நெற்றி நீ சுருக்கையிலே ,,

வதனம் கொள்ளும் மரணம் ,,,
மண்டியிட்டு வீழுமடி ,,
பாசக்கயிறும் உன் கழுத்தில்
பாசி மணியாய் ஏறுமடி ,, ,,

முழங்காலுக்கும் முகத்திற்கும்
இடையே தூரமும் கூடுதடி ,,
முன்னே நீ நிற்கையிலே ,,

மத்திய வெயில் கூட ,,
மண்டையில் மழை பொழியும் ,
மாலை இருள் கூட ,,
பளிச்சென்று ஒளி வீசும் ,,

உழி கொண்டு செய்த உருவமோ ,,
உயிர்கொண்டு செய்த புருவமோ ,,
அத்தனை ஜாடையடி ,,
உன் புருவ பேசுதடி ,,

அடக்கியும் நீ பேசிட வேண்டாம் ,,
ஆயிரம் பதில்
சொல்லும் உன் கண்முன்னே ,,

வீணையின் வாசிப்பு
அடங்கும் நொடியில் ,,
உன் குரல் ஒலிக்கும் ,,,
என்ன ஒரு பொருத்தம்
நடந்திடும் வீணையோ நீ ,,

காதலெனும் புதுமொழிக்கு
அர்த்தம் தந்தவள் ,,,
கடற்கரை மணலினே
நண்டு நடையிட ..
பிடிபடுமோ ,,என் மனம் ,,

வலையிடையே சிக்கிய மீனாய்
நான் துடிக்க ,,
உயிர்கொடுக்க உதவுமோ
உன் தொடுதல் ,,

நீலக்கடலும் பச்சை ஆகுமோ ,,
உன் சுடிதார் சுமந்த நிறம் கொண்டு ..

ஏழாம் அறிவு எங்கு பிறக்கும்
இங்கே பிறக்குமோ ,,
உந்தன் கால்தடம் ,,

புதையும் ஒவ்வொரு உயிரும்
காதலின் வாசம் அறிந்தே
மண்வனம் செல்வதாய் ஒரு சிலிர்ப்பு ,,

சிந்தனையிடையே நீ மெல்லிய
ஒலியில் சிரித்து செல்ல ,,
யோசிக்கும் விசயமெல்லாம்
உன் முகம் ,

கவிதைகளின் உருவகமாகவே
உன்னை படைத்து விட்டனரோ ,,,
உவமை குறைதீர மாற்றாய்
அனுப்பிட பட்டவளோ ,,

சோகக்கவிதை எழுத சொல்லும்
என் பேனாவின் நுனிக்கு
நீ வந்த நேரம் ,,
உன்னை புகழ்வதை நிறுத்த
துடிக்கிறது ,,,

ஆகமொத்தம் தமிழில்
இருநூறு எழுத்துகள் உள்ளனவோ ,,
அத்தனையும் பிழைப்போல
இக்கவிதையிலே ,,

சேர்த்துவைத்த எல்லாம்
உன் காலடியில்
கொட்டினால் என் செய்வேன் ,,,
புயலுக்கும் உருவம்
கொடுக்கும் உலகுக்கு ,,
நம் காதலை புறம் பேசுவதா கடினம் ,,

எது எளிது என்பதை விட
எது கடினம் தேடுகிறேன்
உன்னை  அடைய
பயிற்சியாக கூட அமையலாம் ,,

எதற்காக புறம் போகிறாயோ
அதற்காக செல்லாதே ,,
ஒரு நாள் வரும் ,,
என் விரல் உன் விரல்
பிடித்து உலகம் சுற்ற ,,

மஞ்சள் நிலவே ,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி