அசுர அழகு


பூமியிற்கும் ,,,பால்வழிக்கும்
புதிதாய்  ஒரு தொடர்பு முளைக்குமோ ,,
அவள் புன் சிரிப்பு ,,,
புவியினை புன்னாக்கிவிடுமோ ,,
அச்சத்தில் மற்றவை ,,

கிரகங்கள் ,,போர்வையில் ,,
சிறு சிறு துளைஇட்டு
அவள் நடப்பதை பார்க்கும் ,,
மந்திர துளைகள் ,,துகள்கள் ,

வான்மிஞ்சும் ,,உயிரம்
அவள் கொள்ளவில்லை ,,
பிறகேன் ,,இத்தனை வாக்கிய பந்தம்
மற்றவை இடையே ,,
விரதம் கொல்லாத ,,பிரார்த்தனை போலவே ,

திங்களும் செவ்வாயும் மோதிவிடுமோ ,
உடன் நிற்கும் புதனிற்கு ,,
பங்குனி வெயில் உள்மனதில் ,
பார்வையில் வெடி வைக்கும் ,,
அவளுக்கு வர்ணம் பூசவும்
திட்டம் ,,புவி மழையில் ,
நிறம் மாற்றினால் அழகு குறையுமோ ,,
அனாவசிய யோசிப்பு ,

வர்ணபகவான் உடன் வருகை ,,
மேலாதிக்க குழுவுடன் ,,
சிந்தனை இயலாத ,,
அளவா கூட்டம் ,

திடிரென்று இத்தனை அழகு
எங்கே வந்தது ,,
எதற்கென வந்தது ,,
படைத்தவனே புலம்பிடும் ,,முதல் கோலம் ,

பகலிடையே தோன்றும் இரவா ,,
அவள் ,,தனித்து தெரிந்திட
அசுர அழகென்பது ,,இதுதானே ,

வான்விழி தேவதைகள்
பொறாமை கொன்றிடும் ,,
மனதில் குன்றிடும் ,
தேசங்கள் ,,ஒன்றிணைத்து ,,
உலக மொத்த ,
கலைநயம் ,,ஒரு சேர ,,
ஒரு உருவத்தில் ,
கொடுத்தால் என்னாகும் ,,
தோற்ற மாற்றம் ,,
அத்தியாந்தம் கொள்ளும் ,,அழகுக்கு ,
பெயர் வைப்பதர்கொரு குழு ,,
வர்ணிக்க தனி குழு ,,
வந்தனம் செய்திட ,,ஒரு குழு ,,

அய்யய்யோ ,,மேலோகம் ,,
கதிகலங்க ,,
பூலோக ,,தேவதை கண்டு ,,
தேவதை பொருந்துமோ ,,
இல்லை நிச்சையம் ,,

நிதர்சனங்களையும் ,
நிர்பந்தங்களையும்
தன் காலில் மிதித்து ,,,
புதிதென ,,பூட்டிய மாலை
அவள் ,,,,

வசதி படைத்த பெண்மணியின்
முகபூச்சும் ,,நகபூச்சும் ,,ஏறவில்லை ,,
அணிகலன் அதுவும் காணவில்லை ,,
கூரை புடவை உடுத்திய ,,
பொற்கூரை கணக்காய்
அத்தனை மிளிர்ப்பு ,,
அவள் ,

எதுவென்று நான் உவமை கூற ,,
இருக்கும் ஐந்தையும் அடிக்கடி
பயன் போயிற்று ,,
புதிதாய் இருப்பது ,,கள்வன் நெஞ்சம் தான்
ஏறிவிட ,,நீ வருவாயோ ,

ரதம் செலுத்தும் கடவுள்
அசைந்து அசைந்து ,,வந்தால் ,
ஈடாகுமோ ,,மெல்லின நடையினிலே ,,

என்ன இருந்தாலும் ,
பிரம்மன் இவ்வளவு பெரிய தவறை
செய்திருக்க கூடாது ,,
அழகை படைத்து ,,அசுரத்தில் விட்டுவிட்டான் ,,
தேனீ கதையினை போல ,,

விடுவித்து கொள்ள ,,
எமனிடம் கெஞ்ச வேண்டுமென்று ,,
தடை ,,கோரும் நெஞ்சம் ,,

அசாத்திய கடவுளும்
இயற்கையும் இவள்கண்டு ,,
பயப்படும் கணக்காய் ,,,
நான் எங்கு ,,

துச்சம் போல்தானே ..
எப்படியாவது காண வேண்டுமென்று
நெஞ்சம் தவிக்க ,,
அவள் வீதியில் ,,
நயாகராவை மிஞ்சும் ,,கூட்டம் ,

கொடுமை ,,
நடந்தது என்று கடவுளிடம் கேட்க சென்றேன் ,,
அவரும் வரிசையின் ,
கடைசியில் சிக்கியதாய் ஒரு பேச்சு ,,
பரிதாபம் ,

வெள்ளி பொக்கிஷம் ,,
நடைதெருவில் நின்றால் ,,,
அதன் மதிப்பு ,,
சொல்லியா புரியும் ,,

ஆகாயம் பயப்படும் அழகு ,,
அசுர அழகு ,,
அவள் முகம் ,,

தொடர்ந்தால் அழகாகும் ,,
பார்ப்போம் ,,
கவியரசன் ,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு