நீதான் விழியடி

நீதான் விழியடி ,,

கவிதைகளில் உச்சம் தெறித்து ,,
பிதறிதள்ளும் ஆனந்த கிறுக்கன் நான் ,,

வார்த்தைகளாய் வந்து விழும்
அவளின் சிறு சிரிப்பு மணிகளுக்கு
வெட்கப்படும்..மனம்
வர்ணம் உடுத்தும் அவளின் வானவில்
பார்வை ,என் நினைவிற்கு ,,

செந்தேளின் கொடுக்கும் சாய்வாய் போகும் ,,
அவளின் தொடுதல் ,,பட்ட கரம் ,
வெண்முகம் கண்ட அந்நாளில் இருந்தே ,
இம்முகம் வாடியது இல்லை

ஒரே துளியில் மழையும் ,,
ஒரே துளியில் நெருப்பும்
தெரியுமடி ,,,இரண்டுமே உன் பார்வையோ ,,

ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் வருமோ ,,
உன் பற்றி என் நெற்றி தரும் சொற்கள் ,,
எதுகையின் கைபிடியும் ,,
மோனையின் மெய் உறவும் ,,
என் இடம் சேருதடி,,
கண்டநாள் முதல் கிரங்கிதவிக்கும்
என் இதயத்திற்கு உன் பதில் ஏதோ ,,

உவமை அணியை தன்]
உடுப்பேன கொண்டவளே ,,
மலர்சிந்தும் உன் மொழிமொத்தம்
தந்துவிட ,,வேண்டாம் ,,
ஒற்றை வார்த்தைகளில்
என் உயரினை பறித்து விடு அது போதும் ,,

கொண்டு சென்று என்னை
அடைத்தாலும் சரி
எப்படியாவது என்னை
உன் மனதில் அடைத்துவிடு
செல்ல சொற்களால் என்னை தீண்டிவிட
வேண்டாம் ,,சொல்லாமல் இருந்திடாமல்
இருந்திடு அது போதும் ,,

மெய் சொல் பேசி
மகிழ்விக்க வேண்டாம் ,,
பொய் கூறாமல் இரு ,,
நிபந்தனை ஏதும் இல்லையடி ,,
உன் காலடி சேரும் என்
இரு விழி முன்னே ,,

வலிகள் தந்துவிடு ,,
உன்னை நினைக்கும் நெஞ்சம்
அதிகமாக நினைக்கட்டும்
உன்னை பற்றி கோவதில்லாவது

சட்டென எதையும் நான் கற்கவில்லை
உன் ஆழ்கடல் நெஞ்ச ஆழம் ,,
மூழ்கி மூழ்கியே கற்கின்றேன் ,,
நீயும் அறிவாய் என அறிந்திடாமல்,

மனதோரம் நினைக்கும் என்னை ,
மனதொரமே விட்டு விடுவதன்
காரணம் மட்டும் சூழ்ச்சமம் ,,

வாங்கிய கடன் போல ,,
நான் மாட்டி தவிக்கின்றேன் ,,
அசல் கேட்கும் நின்பற்றி ,,

ஒரே ஒரு பார்வையால்
என்னை கொன்று செல்லடி ,,,
மரணம் வரை தாமதிக்காதே ,,
என் விழி கானும் சொர்கமே ,,

வஞ்சனை பேசும் கூடத்தின்
முனுமுனுப்பை என் அப்பக்க
மனதில் சுமையாக்கி விடாதே ,,
வாதங்களால் என்னை பொசுக்கினாலும்
பரவாயில்லை ,,,நீயே செய் அதையும் ,,

விட்டு கொடுத்தே
என் ஜென்மம் ,கடந்தாலும் சரி ,,
என் விரலிடையே நீ சேரு.,,

உலகில் மொத்தம் எத்துனை மொழிகளோ ,,
தேவை இல்லாத கேள்வி ,,
அத்தனையும் ஒன்று சேருமடி ,,
என் ஒரு துளி கண்ணீரில்
குளிப்பவளே ,புரியாமல் நீ இருப்பாயோ ...

மயக்கம் தெளிந்த ,,,பெண்மணி
போல் ,,சொன்னதையே சொல்கிறாய் ,,
என்னடி அச்சம் உனக்கு ,,
உம் என்று மட்டும் சொல்லடி ,,
இமையத்தை விழுங்கிடவா ,,
வானவில்லை மடித்திடவா ,,
ஐயோ ,,கூறும் உருவகம்
நீதானே ,,,எப்படி செய்வேன் ,,,
உன் வாள்கூறு விழிகளிலே ,,

வணக்கம் என்ற சொல் கூட
திரிந்து கேட்குதடி ,,
எத்தனை இசை ,,
வாய்மொழி கண்ணே ,,
என் மேனியிலோ,,மனதிலோ
வடுவை கூட ,,பதித்துவிடு ,,,
உன் நியாபகம் அப்படியாவது
வளரட்டும் என் வாழ்நாள் முழுதும் ,,

உள்ளே இறங்கிவிட்டாய்
பெயர் சொல்ல இயலாத நோய் போல ,,,
சாகவும் அடிக்கிறாய் ,,
வாழவும் சொல்கிறாய் ,,
எத்தனை வித்தியாசம் உன் ஒரு பார்வை இடையே ,,

வராமல் இருந்திட ,,,
ஓராயிரம் காரணம் ,,
உன் மனம் சொன்னாலும் ,,
வர ,,என் மனம் ,,ஒரே
ஒன்றை மட்டும் சொல்லுதடி
அழகி என் காதல் பாரடி ,,,பாரும் ,,நீயடி ,

விரலுக்கு என் வசந்த
காதல் புரிந்து
இக்கவிதை பொழிகின்ற ,,,தருணத்தில் ,,
உன் மனதுக்கா எட்டிடவில்லை

வகை வகையாய் ,,
என்னடி கொல்கிறாய் ,,
தகை தகையாய்

என்னை உரிக்கிறாய் ,

வதனம் புரியும் முன்னே ,,
என்னை தகனம் செய்வதேனடி ,,

வானம் எங்கு விரிகிறதோ ,,
அத்தனையும் என் மனதுமடி ,,
எல்லா நேரமும் வெண்மையடி,,
வருட மொத்தம் மழையாய் ,,நீயடி ,,

என்னை செதுக்கிவிட்டால் என்ன ,,
உனக்கு பிடித்த வாறு ,,,
தினம் என்னை நானே செதுக்குகிறேன் ,
உனக்கு பிடித்தவாறு ,,
உளியாய் உன் காதல் தந்திடு ,,,

அதுவாய் ,,,மெதுவாய் ,
சிரிப்பாய் ,,என் விழியில் ,,
நீதான் விழியடி ,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு