கால் காெலுசு அடங்கும்;

ஆசைகளை  ஒட்டுமொத்தமாக
மூட்டை கட்டி என்மேல்
பொத்தென போடுகிறாள்
என்னாவேன்,,,

இதயம் துடிப்பது மெதுவாகும் ]
அவள் இருக்க என்னை அணைக்கையில்
அத்துனை பாசம் ,,
சிலநேரம் கோவம்
மூடிவிடுகிறது பாசத்தை ,,

வெளியேவரும் தருணம்
முதற்கொண்டு
ஆடை சரிபார்க்கும் புராணம்
தொடங்கிவிடும் ,,,
எனக்கென வாழும்
தேவதை ,,

எழுதிய வார்த்தக வாய்  விட்டு
பேசுமோ ,,,அதிசயம் ,,,
நடக்கிறது ,,,

திருவள்ளுவர் எழுதிய
இருவரி உன்னதம் நீ
என புரிகிறேன் ,,
சிலநேரம் புரிகிறாய்
பல நேரம் உட்சொல் தெரியாமல்
குழம்பிட வைக்கிறாய் ,,

எதுநான் சொல்லிட ,,
எதை நான் விட்டிட ,,,
சொல்லி முடிக்க
ஆயுல் போதுமோ ,,
வாழ்ந்து பார்க்க
பல ஜென்மம் கூடுமோ ,,,

விடை தெரியாத பொழுதுகள் இருக்கும் வரை
வினாக்கள் நீளும்

அதுவரை சண்டைகள்
பொழுதுபோக்காக வந்து செல்லட்டும்

அவள் செல்லமாய் என்னை
கொஞ்சிட ,,,

பைத்தியம் தான்
உங்கள் மனதின் பேச்சு ,,
என்ன செய்வது ம
காதலித்து பாருங்கள் ,,
உங்களுக்கும் இதே நிலைதான் ,

வஞ்சமாய் புகழவில்லை
அணிகளில் கூடவும்
அவளை திட்டிட விரும்பவில்லை ,,

போகட்டும் ,,,காலம்
மூன்று முடிச்சுகள் இருகட்டும்
இருக்கட்டும் ,,,

அவள் பேசுவதெல்லாம்
கவிதை ஆகுமோ ,,,
வீசுவதேல்லாம்
வால் ஆகுமோ ,,,
இடம் பொருள் இவள் ,,,
எதை நான் கேட்க  ,,,

என்னிலை அறிய வானிலையும்
தடுமாறுமோ ,,,
மாறட்டும் ,,,

கண்மணியின் கால் கொலுசாக ,,
கள்வன் இதயம் ,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு