ஆலங்கட்டி

ஆலங்கட்டி

கண்ணோரத்தில் நீ வரும் நேரத்தில்
நெஞ்சோரத்தில் புயல் மழை
வருவதில் ஐயம் ஏதோ

விதம் விதமாய் நிலவும் தெரிந்திடுமோ
வண்ணங்களின் துணியிலே அதுவும் மிதந்திடுமோ
வானத்தின் இருளில்தான் மிளிருமோ
விழிக்கோளம் சுழற்றி அடிக்குமோ ,
மாயம் தானடி,நீ வந்து சென்ற அடுத்த கணம்

குப்பையின் வடிவங்களில்
ஓவியம் காணும்
என்னிரு குருட்டு விழிகள்.

வித்தியாசம் தந்திடாமல்
நகரும் காற்றுக்கும்
உடை உடுத்தி பார்க்க தூண்டும்
நயம் பூண்ட நெஞ்சம்

ஏழைகள் கூரை மழையினில்
நினைவது போலவே
நினைகிறேன் காதல் மழை
பசித்தும் விரதம் இருக்கும்
ஒரு தியான நிலை ,
நினைவுகள் ஒரு சேர
அவள் மட்டும் மண்டையின் நடுவில்
நினைத்திடும் யோகா இல்லாத யோகா

அத்துனை பொருத்தம் சேருமா
என தெரிந்துவிடவில்லை
என் விழிகளில் உண்மையாக
பொருந்திவிட்டாள்.

உச்சி தலையின் ஒரு
குளிர்ச்சி என் தாய்
ஜென்னி வந்து இருக்குமோ
என என்னை கேட்க
என் உள்மனம் என்னிடமே
இல்லை அவள் வந்துவிட்டாள்.

பாத சுவடுகள் எனக்கே
தெரிவது இல்லை
அத்தனை பொறுமை என் நடையினிலே
எனக்கே தெரிந்துவிடாமல் .

அழகாய் நானும் ஆகிடாமல்
நித்தம் ஆகிறேன்
என் கண்ணாடிகளில் மட்டும் ,

கொத்து கொத்தாய்
உயிர் முடியுமோ
முடிகிறதே அவள் முடி போலவே ,

செத்து செத்து துள்ளி விளையாட சொல்லும்
என் மனது குவியல்கள்
அவளின் கூந்தல் வடம் பிடித்து ,

வாசனை திரவியம் ஏதும் இன்றிடாத
ஒரு வாசனை மூக்கினை பிளந்திட
அவளின் கூந்தல் மனம் தான்
என்கிறது என் கூந்தலின் உள் இடுக்கு

கண்ணுக்குளே சொற்பனம்
கால்கள் இடையே புதையல்
உடையின் மேல் ஒரு ஜுரம்
வழிகள் எங்கும் பூ மரம்
மாய பிரம்மை
காதல் படுத்தும் பாடு ,

தென்றல் எதுவும் இல்லாமல்
காற்றும் வீசும் ,
மழை தனில் பெய்யாது உடலும் நினையும்

விழியிற்கு ஒரு புனைபெயர் வரும்
அழகுக்கு அழகாய் ஒரு
அம்சம் என் முகம்
உள்ளுணர்வு கேளிக்கிறது

தினம் காணும் கணவாய்
அவள் காண ,
மழையுள்ளே வானவில்லாய்
அவள் தெரிய
என்னாகி போவேன் என தெரியாமல்
விழுந்து புண்ணாகி போகும் என் மனது

ஒருதலை காதலில்
விழுவதும் அழுவதும் சுகம்தானே
ஆலங்கட்டி மழையோ அவள் ,.
கவியரசன் .

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு