Posts

Showing posts from April, 2016

கண்ணீர் மட்டுமே மிச்சம்

கண்ணீர் கலந்து வியர்வை தெளித்து ,பட்டுபோகும் முல்லை  கொடியாக நெய்தல் வழிந்திட குறிஞ்சி பொழிந்திட மருதம் அழிந்திட ,,, பாலை ஆகும் விவசாயி நெஞ்சம் பார்வை பட்டு , விரல் பட்டும் துளிர்த்திடும் குருந்தழை மணிகள் ,,, பாழாய் போன மழை பட்டு அழிந்தால் என் செய்வேன் , கடன் பட்டு அடி பட்டு வளர்த்த நெல்  கதிர் வீணாய் போன காற்றிலே கொட்டினால் தான் நான் என் செய்வேன் , கந்துவட்டி கழுத்தினை நெரித்திட, காணமல் போகும் கொஞ்ச நெஞ்ச மானம் எல்லாம் ஒருசேர கழன்டோட ,, வண்டிமாடுகள் போல் அடிமட்ட பயணம் ,,, எதோ எதோ பெய்திடும் மழைகொண்டு\ பாத்தி அமைத்தால் நாற்று நடைகூட கூழி ஆள் இல்லாத நிலையிலே தரிசாக போகும் எழிலுரித்த விளநிலம் ,நான் விழுந்த நிலம் நன்செய் புன்செய் என எல்லாம் என் மனதினை ரணம் செய்ய ,, போட்ட முதலே திரும்ப வராமல் விளையாட்டு காட்டுகிறது விளைந்த விலைபொருள் மழை பெய்யும் நேரமெல்லாம் இடுப்புவலி கர்ப்பிணி போல் வெட்டி துடிக்கிறது இதயம் ,, காற்றடிக்கும் பொழுதெல்லாம் சூரையடிக்கும் இடிபோல வெக்கி போகிறது வயிறு ,,, தினம்தினம் வயிறார நான் உலவாட உணவளிக்கும் ஒரு ம

கேள்விகள் [தொடர்ச்சி]

கேள்விகள் [தொடர்ச்சி] கண்டுபிடிக்க படவேண்டும் என்பதற்காகவே தொலைக்கபடுகின்றன ,சிரிப்பும்  வாழ்வின் முடிசுகளும், ஆரம்பம் தெரிந்தவரை பொறுத்த நம்மால் , முடிவை தெரிய மட்டும் அத்துனை சங்கடம் ஏன்   ஆசையாய் பேசும் போதே தொடங்கிவிடுகிறது ஏமாற்றத்தின் முதல் அத்தியாயம் ,, கோவம் கொண்ட நெஞ்சிலும் எதோ ஒரு ஓரத்தில் அன்பும் இருக்க தான் செய்கிறது , கோடைகால மழை , மோகம் எனும் ஒற்றைசொல் தான் தாம்பத்தியம் என்றால், விட்டு கொடுத்து வாழ்வதற்கு பெயர் ஏது???? குடிக்கும் தேனிரிலும் கூட கசப்பான தேயிலை இடம்பெறும் வகையில் வாழ்விலே மட்டும் கூடாதென்பது என்ன அர்த்தம்  , என்னதான் திருடினாலும் உழைப்புக்கு சலுக்காத நான் கண்ட பிறவிகள் , தேனியும் ,விவசாயியும் ,. இரு கோடுகள் இணையும் இடத்தில வைக்க பட்ட புள்ளிதான் வாழ்வு என்றால் , புள்ளியை கூட பெரும்பாலும் யாரும் தொடுவதே இல்லை , விடுகதைகள்  இருக்கும் வரைதான் தெளிவுபடுகிறது விடைகள் ,. அர்த்தவனமாக காட்சியளுக்கும் வானுக்குள்ளும் ஒளிந்து இருக்கும் அருமைகளை ,,இருளில் தான் காண முயல்கிறது ,, கருணை இல்ல வாசல்களில் தன் பங்குக்கு செய்

கேள்விகள்

கேள்விகள் வேகமாக செல்லும் காற்றுக்கு தாழ் அடைத்தவன் யாரோ ,, அடித்திடும் வெயிலுக்கும் வெள்ளை குடை பிடித்தவன் யாரோ , மந்திர புன்னகை வீசும் மழையிடையே மாட்டி தவிக்குறது மனம் , முயல்குட்டிகளுக்கு மூஞ்ஜூரின் நிறம் எப்படி , பூனைகளுக்கும் புலியின் வடிவம் எப்படி இயற்கையின் ஏடுகளிடையே எண்ணற்ற கேள்விகள் , பதில் சொல்ல கடவுளின் அதிகாரத்திலே பதில் உண்டோ ,, கேள்விகளுடன் தொடரும் ,நாளை ,,.   

வேலை தேடிய வேளை,

வேலை தேடிய வேளை, துடித்து எழும் மீன் போல் குதிக்கிறேன் , திரும்பும் நிலையிலே வறண்ட கடல் , கண்ணீர் தூறும் மழையிடையே , ஒளிந்து கொள்ளும் திறமை பூச்சிகள், காலங்கள் செல்ல செல்ல கோவணம் கூட மீதாத சூழலிலே நம்பிக்கை மட்டும் கைகொடுத்திடுமா என்ன ? விடியல் பொழுதுகள் வெளிச்சமாய் இருந்தாலும் உண்ணாத வயிறுகளிடையே , சூரியனும் மங்கிடும் விளக்கு தான் பேருக்குதான் பசிகள் எல்லாம் , பணம் செய்கிற சூழ்சிகள் காய்ந்திடும் குடலும் , தண்ணீர் கூட விலைக்கு விற்கும் காலமல்லவா இங்கே , எதோ கோடை மழை போல் ஆங்காங்கே நல்ல உள்ளங்கள் தரும் உணவுகளே அமர்தமாக ஆகிறது , ஏழன பிழைப்புகளுக்கு மத்தியிலே வைராக்கிய வயிறு , கைபேசி அழைக்ககூட கையில் பணமில்லா நிலை , கண்ணீரும் ,கால் செருப்பும்  மட்டுமே என் சொத்துகள் , அழுக்கு உடைக்குள்ளே வெள்ளை மனது , நினைத்திடும் தருணம் புல்லரிக்கும் உடல் , அலுவலக நாற்காலியலே அண்ணார்ந்து ஓய்வெடுக்கும் நேரம் , என் கீழே பத்து பேர் ,, ஆறுபூஜிய சம்பளம் , நான்கு சக்கர வாகனம் , வேலைதேடிய வேளைகள் செய்த வேளை இது ,,

முயன்றே விடு?

இலையினை கொண்டு கிளைகளும் இல்லை காற்றால் வாடும் மலர்களும் இல்லை , செய்தால் தீரும் பொருட்களும் இல்லை , தீவனை இல்லாமல் எவ்வினை இல்லை , செய்யாது ஏதேனும் ஈட்டுதல் இல்லை , உண்ணாது உயிரன்று, உலகிலும் இல்லை , முயலாது யான் செய்யினும் வெற்றியும் இல்லை , முயன்றே இருந்தால் தோல்விகள் எல்லை ,, முடியும் வரை முயலாதே , நினைத்தது முடியும் வரை முயலு ,,, நிரகரிப்பு,வாழ்கையின் படிகள் ,,அதிகமாக ஏமாறு , அதிகமாக தோல்வியுறு , அதிகமாக கஷ்டப்படு, அதிகமாக ஒதுக்கப்படு , உன் வாழ்வின் திருப்பும் முனைகள் அதுவாக கூட இருக்கலாம் ... ஒதுக்கப்படும் போதே புரிகிறது , நம் உழைப்பு எவ்வளவு என்று ,,,விடு, உழைத்து விடு , முயன்றாவது விடு   கவியரசன்,உழைப்புடன் .

கண்ணகி

கண்ணகி காற்சிலம்பு பிடிபட்டு கணவனை கொன்றாய் என எரித்தாயா என்ன மதுரையை ? பிடித்துபோய் தன்னை சுமக்கும் பெண்ணை வேசி எனுமோ சமுதாயம் , காதலெனும் சொல் விடுமுறை பெற்று ஓடுமோ சமுதாயம் முன்னரே  , காதலை காதலாக பாராமல் காமமாக பார்த்திடும் கண்களின் முன்னே ,காதலும் பாவம் கடந்தே போகும் நேரங்கள் காதலனுடன்,வயிற்றிலே குழந்தையுடன் ,கழுத்திலே தாலியை மட்டும் தொலைத்துவிட்டது , ஜனநாயக வளர்ச்சி ,,,... ஓடும் பேருந்துலே கற்பழிப்பு ,குற்றம் செய்தவன் சிறுவன் என விடுவிப்பு ,, சட்டம் ,,, பெண்ணின் மரணத்திற்கு பின்னரும் தலையிடும் மனித உரிமைகள் ,, குற்றம் செய்தவனும், மனிதன் என கரிசனைப் பாடும் மக்கள் மரணதண்டனை கூடதெனும் அமைப்பும் நாட்டிற்கே உரித்தான அன்பு ,,,கேவலம் பெண்ணின் கைகளிலே கண்ணகியின் ஒளிகொடுக்க எரிக்கபடுமோ உறுப்புகள் ,,,,, கண்ணகி தேவை , கூடிடும் சமுத்திர நாட்டிற்கு,,, கண்டுபிடித்து தாருங்கள் என் தமைக்கைகளுக்காக தோழிகளுக்காக , உறவுகளுக்காக .. கவி ,,,  

இயற்கையே [பெண்] தானே

இயற்கையே [பெண்] தானே அழகாய் வானிலே இட்ட பொட்டாக நிலா, கார்மேக கூந்தலாய் மேகம் , பார்த்தால் எரிக்கும் விழிகள் ஏதும் எழுதாத வெள்ளை காகிதமாய் வானம் ,என்னவளின் பெயரை நிரப்பவா , எழுதுகோலாக நானே மாற , வர்ணமாக கரைந்திடும் காதல் , சொல்லேதும் தீண்டாமல் இடம்பிடிக்கும் மௌனம் , வெகுண்டு துடிக்கும் மின்னலுக்கும் விடுமுறை அளித்து , ஓராயிர பார்வையிலே சிலிர்க்க வைத்திடும் நெஞ்சம் ,தஞ்சம் அடையும் மஞ்சம் , அழகிய வான் , இயற்கையின் உச்சமாய் நீ , எரியும் பார்வையை போல் என் கண்களை திறந்தால் மூடிடும் விளக்கு , திறந்திடும் பொழுதிலே அணத்திடும் வெளிச்சம் , இருளை தனக்குள்ளே கொண்டு எறிந்திடும் மெழுகுவர்த்தி , தனக்குள்ளே தனிமையை புதைகொண்டதோ . யாரை தேடி ஓடுகிறதோ காட்டு தீ , பனிமலை குறுக்கே யார் குளிர் காய இந்த எரிமலை , அனலும் குளிர்ந்திடும் செங்கண் பார்வையிலே .. விழிமொத்தம் பச்சையாக மாற , கருப்பு நிற கண்ணாடியில் உன் உருவம் , எங்கேயும் கண்டிடும் புதர்செடி போல , புதையாமல் எழுந்திடும் உன் கனவுகள் , நான் நிற்க உன் தலைதான் கிடைத்ததோ , உருண்டு விளையாட நெஞ்சம் தான் தகுந்ததோ , ப

மின்னலின் சிறகு

மின்னலின் சிறகு , கேட்கப்போகும் குழந்தையின் சத்தம் , கேட்டு அடங்கும் அழுகையின் சத்தம் , கருங்கல் வெடிக்கும் சத்தம் , கல்லுபானை உடையும் சத்தம் . கன்னக்குழி மோதும் சத்தம் , கட்டிபோடும் மாட்டின் சத்தம் , தேடி ஓடும் நாயின் சத்தம் சத்தம் , கட்டை பிளக்கும் கிழவன் சத்தம் ஒல்லி நிலவிலே குயிலின் சத்தம் காதை பிளக்கும் இடியின் சத்தம் , ,ஈரம் சொட்டும் மழையின் சத்தம் , ஒதுக்குப்புற முனகல் சத்தம் எல்லா சத்தமும் அடங்குதடி ஒற்றை பாத கொலுசின் ஓசையிலே , அங்கே நீ தெரு கடக்க இங்கே என் மனம் பறக்க சிறகே முறிந்து பார்வையிலே கண்முன்னே விழும் காக்கை நான் இதழின் மடிப்புகளுக்கிடையே தவழ்ந்து செல்லும் குழந்தை நான் , காதோர அட்டிகளுக்கு இடையே சிணுங்கும் கோபுரம் நான் , விரல்களுக்கு இடையே ஊடுருவும் அக்கினி விரல்களும் நான் , மல்லிகை பூ மேனியிலே வாசம் தேடும் வண்டும் நான் , இத்தனையும் நானாக இருக்க , நீ மட்டும் தொலைவிலே ஏன் மின்னலின் சிறகுகள் மெல்லிதாய் மனதிலே இறங்கிட ,பார்வைகள் மறுப்பதேனோ , கவியரசன் ,

கள்வனின் முத்தம்

கள்வனின் முத்தம் கல்யாணம் ஆச்சு , கன்னி போச்சு , கள்வன் கன்னியின் கண்ணாக மாறியும் ஆச்சு , சிவந்த உதடை நீ உரசையிலே என் கன்னிச் சேலை பறந்ததடா, விரல் என்னை தீண்டியிலே என் உயிர் போனதடா ,, [இதுக்குமேல சொன்ன ,,ஐயோ A certficate கிடைச்சுரும் ,என்ன கொடும sir.] கருவும் சேர , காதல் மாற , புதுமணம் இரண்டும் திருமணத்தால் இணைய , வாழ்விலே புதுக்கோள் அரைகுறையாய் என் வயிற்றினிலே ,, தொட்டு தொட்டு பார்த்தேன் , தொட்டேவிட பார்த்தேன் , பொறுமை தனை இழந்து , முத மாசம் , வாந்தி எடுத்தது, இரண்டாம் மாதம் தலை சுற்ற மயங்கி விழுந்தேன் மூன்றாம் மாதம் மருத்துவர் சொன்னார் மூன்றாவது உசுரு உன் குடும்பத்திலே என்று , நான்காம் மாதம் முதலே கணவனின் கொஞ்சல்களுக்கு இடையிடையே காணமல் போவதும் , கணவனின் அன்பிற்கு அடங்கிபோவதுமாய்,பொழுதுகள் கழிய , ஐந்தாம் மாதம் உணர்ந்தேன் , என் சிசுவை , என் கைகளால் அவனை இதபடுதிகொண்டே , படுக்கும் பொழுதும் நடக்கும் பொழுதும் ஒரு போதும் நான் மறந்தது இல்லை . நன் கர்பிணி என்று , ஆறாம் மாதம் மெல்ல வலித்தது என் கணவனின் முத்தம் போலவே , ஏழாம் மாதம் கைகொரு கொட

கரும்பாய் ஆன சக்கரை

கரும்பாய் ஆன சக்கரை , கால தேவனின் கை இடுக்கிலே சிக்கி களிமண் ஆகிய கதையாய் வாழும் கதி ,,, விலங்காய் போன மனிதர்கள் வெட்டும் வாளின் நுனியாய் வீசும் வெயிலின் தாக்கம் மண்டையை ஒரு பிடி பிடிக்க வதங்கி போகிறது பசுவளை பாதங்கள் ,பாவம் அரைவயிறு கஞ்சியை தான் குடும்பம் பருக வெயிலையையும் மழையை பருகும் கூட்டம் , விசித்திரம் தான் , வேகாத உணவருந்தி வெந்துபோகும் வயிறுகள் , சுதந்திர போராட்டம் போல , பசியின் தாகம் எவ்வளவு இருந்தாலும் மிச்சம் பிடிக்கும் கையின் மடிப்புகள் . செங்கலும் மணலும் சுமந்தே பாதைகளில் துரும்பேற, உழைக்கும் வரம் பெற்று பிறந்தனறோ, அறியவே இயலவில்லை , தூங்கும் இடமும் ,அதே தான் , கழிக்கும் இடமும் அதே தான் , உணருந்தும் இடமும் அதே தான் , என்னவொரு கொடுமை ஆப்பிரிக்க நாடல்ல இதெல்லாம் நடப்பது , கட்டும் புது புது கட்டிடங்களுக்கெல்லாம் புதைந்து போன உண்மைகள் , ரதங்கள் எல்லாம் சிமெண்டால் பூசி மொழுக , மூச்சு காற்றிலும் மணல் வாசம் , வாழும் ஒவ்வோர் வீட்டிலும் எதோ ஒரு பிணத்தின் ஜீவன் தங்க, குடிஏறுகிறது பணம் பெற்ற மக்கள் , எழிகள் ஏழைகளாகவே இருக்க பணக்காரன் கையில

வாழ்வின் மிச்சம்

வாழ்வின் மிச்சம் எட்டி எட்டி பார்கிறேன் வானம் தெரியவில்லை ,காணமல் போய்விட்டதோ பயத்திலே மனதும் குழம்பிட ,, கண்ணெதிரே வானம் ,,, தேவதையின் தடம் பதித்த இடம் கூட பூப்பறிக்கும் நேரத்திலே சிவந்துவிடும் விழிகளுக்கு என்ன தெரிகிறது , பார்வை ஒன்றே பேசும் வார்த்தைகளுக்கு விடுமுறை அளித்து ,, சிவப்பு கம்பளம் நீட்டி என் மனதும் உன்னை வரவேற்றிட, முகத்திலே சுருக்கம் ஏன் ,, பார்க்க,,; கிடைக்கும் பொருளெல்லாம் அடங்கிவிடும் அந்த பார்வையிலே நான் துச்சம் தான் ,, உமக்கு சீலை தான் வேண்டும் என்றால் மழையினை சேகரித்து வடிவமைத்து இருப்பேன் , அணிகலன் ஏதும் வேண்டும் என்றால் என் நரம்பிடையே சுருக்கிட்டு , செய்து அணிவிப்பேன் , கேட்கும் மனதுக்கோ கூச்சம் தான் நானோ கிழிந்த துணியாய் காட்சியளிக்க என் மனம் கேட்பதேனோ ,, வானம் நீ என்றாலும் , ஒருதுளி என்னை கேட்பதேனோ , காதலுக்கு கண்ணில்லை என்பது தெளிவாகி விட்டது உன் விருப்பத்தின் மூலம் , சிந்தும் காற்றிடையே அடிக்கும் தக்கை போல் செல்லும் எனக்கா இவ்வளவு பெரிய கோபுரம், கல்லிடையே மாட்டிய புழுவாய் நெஞ்சம் நெளிந்திட , கை விரல் இணைப்பதேனோ , என

ஒரே ஒரு துளி

ஒரே ஒரு துளி . கண்ணின் இமைக்குள்ளே கட்டிவைத்து தான் பழக்கம் ,அவிழ்த்துவிட்டது பாவமாகிவிட்டது, மெதுவாக ஊர்ந்து செல்கிறது என் சொகுசு நான்கு சக்கரம் யார்காகவோ பழகிய வார்த்தையெல்லாம் இடறு செய்கிறது , நெய்தல் நிலம் போல் மனமோ குளிக்க , துடிக்கிறது அடிக்கடி வரும் காற்று ... இங்கேதான் பிறந்தேனோ என எட்டிபார்க்கும் மனித குணம் , என்னையே கேள்வி கேட்கிறது , கடன் பெற்ற நிமிடமெல்லாம் மெதுவாக பறக்க, கடந்து போகிறேன் நான் செல்லும் பாதையை ,, வழிதோறும் எட்டாகனிகளாய் இருந்த கடைகள் என்னை அழைக்க , திரும்பாத கழுத்தை கொண்டு முன்னேறுகிறது கால்கள் , ஏட்டிலே படித்த யாவும் நெஞ்சிலே நிற்கவில்லை , எழுதிய வாசகமும் மனதிலே பதியவில்லை , எட்டுசுரக்காய் எதுக்கோ உதவாதது போல் ஒரு படிப்பு , எங்கே படித்தோம் ,,, மறந்தே விட்டது , மறக்கமுடியாத தோள்களின் மத்தியிலே மறந்தே விட்டது ,, நான் அன்று இருந்த நிலையை கண்டு பரிதாபம் கண்ட ஒரு உள்ளம் காண இங்கே வந்து உள்ள என் உள்ளம் ,,, கனவு தேசமாக என் மனம் படபடக்க கால்களோ நெருங்கிவிட்டது தோழனின் இல்லத்தை ,, தலை இடிக்கும் ஓலை வாசல் வெளியே தெரியும் வீடு

செந்தூறல் வீசிடும் மேகம்

செந்தூறல் வீசிடும் மேகம்  விழியும் மழை பொழியும் தருணத்திலே  கண்ணருகே வெள்ளம் பாய்ந்து வழியும்  நேரத்தில் நெஞ்சருகே மஞ்சள் பூசியமுகம் , அரவணைப்பில் ஈர கண்கள் களைப்பாட  தேம்பிகொல்கிறது மனம் , இருக்கத்தான் ஆசை என்றாலும்  பிரிந்து செல்லும் மூச்சு ,, அணைக்கத்தான் மனம் வந்தாலும்  தடுக்கிறது மானம் , எதோ ஒன்று என் மேல விழ  திரும்புகிறது அந்த துளி  என் தோலின் மேல் , என் தோழியின் ,கண்ணீர் வியர்வை .. காதலை தாண்டியும் பல உறவுகள்  இருக்கத்தான் செய்கின்றன , பாக்கியம் படைத்தவன் போல் எழுகிறேன்  என் தோழியின் கரம் பிடித்து , பெண் தோழியின் நட்பும்  உன்னதம் தான் .மதிப்பு அங்கே அதிகம் ... எனக்கு கிடைத்த நட்பின்  சில துளிகள் ,,,.................. செந்தூறல் வீசிடும் மேகமாய் என் நட்பும்  என்னை பார்த்து பொழிகிறது , கவி  ,

நிலவிலே இருட்டு

நிலவிலே இருட்டு கண்கள் தான் வெளிச்சமாய் இருக்கே ,இடையே ஒரு கரும்புள்ளி இல்லாவிட்டால் பார்க்க முடியாது போலும் , வாழ்கையே இது தானே , திருத்தி எழுதிய தலை எழுத்தாய் நெஞ்சின் மருமுனையிலே பேனாவும் இடம்பிடிக்க உதவாது என்ற பேரும், உதவாது ஆனது ,, கலங்கபடமாய் நான் இருக்க எங்கே தெரிந்தது குடும்ப சூழல் , எதிரே ஒரு பெண் சென்றாலும் பின்னே என் கண் சென்றாலும் பழிபாவம் மட்டும் எந்தன் மேலே , கண்ணை அடைக்க கருவி உண்டோ எழுதுகோலின் முனையிலே உலகம் இருப்பதை நேற்றே கண்டேன் உலக வரைபடத்திலே நான் சென்ற நாடுகளை குறிப்பெழுதும் போது , நல்லவன் தான் நான் எனினும் ,உலகம் என்னை வேறாக பார்ப்பது ஏனோ வித்தியாச  நிலைமை , கழுகும் களிப்புடன் நோக்க செல்கிறது மிதந்து செல்லும் விமானம் , கனவு என்று கில்லி பார்த்தேன் ஐயோ மாற்றி கில்லிவிட்டேன் அருகில் இருந்த அழகியை , புரிந்தது நான் என்ன நிலைமையில்உள்ளேன் என்பது என் வீட்டிலே இருந்து பார்க்க எல்லா வீடுகளும் தெரியும் உயரமாக மூவேளை உணவென்பது வருடத்தில் வரும் நல்ல நாட்களில் எதோ ஒன்றில் மட்டுமே கிட்டும் அன்னதானம் மூலமே ,, கண்ணீர் கண்ணை கொப

கல்லறை செல்லும் கனவுகள்

கல்லறை செல்லும் கனவுகள் படுத்திருந்தே பல நாள் கழிந்த நிலையிலே, வெட்கத்துடன் எட்டி பார்க்கிறது சோம்பேறித்தனம் பொழுதுகள் முடியும் நேரத்திலே தொலைக்காட்சியின் முன்னே தொல்லைகாட்சிகள் ஓடும் தருணத்திலே வெகுண்டு விழுகிறது மனம் , காரணம் இல்லாமல் மேகங்கள் கடக்க கண்ணில் படும் தொலைவிலே விழுந்து தொலைக்கிறது பகல் சூரியன் , எட்டிபார்க்கும் தொலைவில் தான் வெற்றி இருந்தாலும் எட்ட மறுக்கிறது உடல் , பழகிவிட்டது போலும் , சுய சிந்தனை கொடிபிடிக்க பலநேரம் முகதேர்வும் சென்றதுண்டு ,முகத்தினை கூட பாராமல் வழி அனுப்புகிறது அலுவல் , கண்டதும் வரும் நோயினை போல , இடையிலே காதல் வேறு , எனக்கே இங்கு சோறு இல்லாத போதும் என்னை நம்பியும் ஒரு ஜீவன் ,மகத்தான காதல் கண்விழிக்கும் போதெல்லாம் ராஜ தரிசனம் ,என்ன கேட்கத்தான் கூசுகிறது காதுகள் மறுத்துவிட்டன நினைக்குறேன் தோல்வியின் காரணம் முயலாமை என்றால் ,முயலக்கூட வாய்புகள் வருவதில்லை , தேடிசென்றாலும் கிடைக்காத போது, கடவுள் கூட நிதர்சனம் , விருந்து படைக்கும் உதடுக்கு இடையே சிலநேரம் நீர் சென்று இடம் பிடிப்பதுஉண்டு, நீர்கட்டிய துணிகளும்

உன் 'முகம்'

உன் முகம் கண்ணாமூச்சி காட்டும் கண்களுக்கென்ன தெரியும் மனதில்,இருப்பது என்னவென்று ஒளிந்து விளையாடும் மனங்களின் மத்தியிலே புதிராகும் மௌனம் , விழியிரிக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பார்க்க இயலாது , மனதின் ஓட்டையிலே , உன் சிறகு மாட்டி தவிக்கிறது எனக்கு புரிகிறது , கேட்கும் கேள்விகள் எல்லாம் உன் காதில் இடியாய் விழ அக்கறை துளிதான் ,என புரியவில்லை ,,,உமக்கு தனிமை என்னை திராவகம் குடிக்க செய்யும் போது பழரசம் அருந்தும் உன் உதடு . உன் நாக்கிலே என்னதான் வாள்களோ,தெரிவதில்லை பேசும் ஒவ்வோர் வார்த்தையும் கிழிக்கிறது நீ உறங்கும் இடத்தை , கண்களிலே மட்டும் தினமும் மழை பெய்ய ,,விழும் துளியில் எல்லாம் உன் முகம் ,, கவியரசன் ,

வாழ்வு

வாழ்வு , நதிக்கரையின் ஓரம் , நதி செல்லும் பாதையிலே, மனதை ஓடவிட்டு அமைதி காக்கும் பொழுதுகள் இரவு வரும் என தெரிந்தே உதிக்கும் சூரியனை உற்றுநோக்கி சவால் விட்டு இரவின் நிலவிலே குளிக்க கிடைத்தால், வெளியே தள்ளுகிற வியர்வையை கையிலே தள்ளி ,பையிலே கட்டிட இரவிலே முடிச்சினை  அவிழ்த்து கிடைக்கும் உறக்கம் ,ஆகா கிடைக்கும் பத்திலே, தானுண்டு ,தன குடும்பம் உண்டு மற்றவர்க்கும் பகிர்ந்தளிதால் வரும் மன நெகிழ்வு ,என்னவொரு மருவு காலம் சென்றாலும் ,ஈடு கட்டி அதனுடனே செல்லும் வயதை இழுத்து பிடித்து ,எமனுக்கே விளையாட்டு கட்டும் உடம்பாய் இருப்பது மூப்பினாலும் தாயின் மடியருகே தலை வைத்து படுக்க கிடைக்கும் ஒரு சுகம் அது வல்லவோ, வாழ்வு ,,, வாழ்கையை ரசித்து வாழுங்கள் அடுத்த நாள் உதயம் பார்போமா என்ற வாழ்விலே . வாழ்கையை ரசித்து வாழுங்கள் .   கவியரசன் ,, 

வண்ணமீன் மிதக்கும் வானம்

வண்ணமீன் மிதக்கும் வானம் இருகோட்டு புள்ளிகளுக்கு இடையே ஒரு புது புள்ளி , கண்டதும் புரியவில்லை நேரம் பிடித்தது , இருவிழி அழகே ,காண கிடைத்தது சொல்லேதும் தீண்டாமல் கற்பனை பெறுகியது,உச்ச மூச்சின் வாசத்திலே ,கவிதையை துப்பியது , சிறகுகள் ஏதும் கிடைக்காமல் தரையில் கால்கள் நிற்கவில்லை , உன்னை பார்த்தது தான் , என விளங்கியது,விழுந்த பின்னே இருதயம் இருகுதிரை வேகம் பிடிக்க , ஓட்டுபவள் நீயா என கேள்வி எழுப்புகிறது முகுளம் , சிறைவாசம் பெற்ற கைதிபோல் சிக்கிகொள்கிறேன்,ஒருவழி பாதையன்றோ , கனவேதும் காணவில்லை , கண்மணியே என் கண்முன்னே திகைத்து போகிறேன் , உன் செந்தழழ் உதட்டிடையே , ஒருவார்த்தையாவது வெளியிலே வருமா, என கோணத்திலே என் மனம் , வானவில் உனக்கு தந்த பரிசாக உன் சேலை என்னை கண்ணடிக்க, உதிரம் கொள்கிறது ,நாடிகளும் வர்ணனை பேசசிகளுக்குகாக, வரைந்த ஓவியமோ உன் முகம் , இடம்பிடித்த பொட்டுக்கும் என்னவொரு வெறி . நடந்துவந்த பாதையை சற்றே திரும்பிப்பார் , பூக்களின் வடிவத்தை , துளைத்து எழுகிறது , பாதம் பட்ட இடமெல்லாம் , உன்னை படைத்தவனும் கர்ணனே ,என்னவொரு வள்ளல்தனம், ஐயோ

ஒளியின் மறைவிலே இருட்டு

ஒளியின் மறைவிலே இருட்டு                                  கலங்கரை விளக்கம் இருக்கும் தொலைவு கப்பலுக்கு தெரிவதில்லை , கப்பல் இருக்கும் தொலைவும் கலங்கரைக்கு புரிவதே இல்லை , இணையும் தருணம் தான் வழிகாட்டுகிறது வெளிச்சம் ... காற்றோடு மிதக்கும் கரிசல்மண் போல்,கனவுகள் கரைகிறது களிமண் பானையிலே , துணிஎன்பதுஉடுக்கதான் என்பது மருவி உடுத்திடதான் துணி என மாறியது , காலம் போன போக்கிலே , கொண்டு சென்றது இவர்கள் ஆசையினை, கதிர் அறுத்தாலும் ,கண்கள் மூடினாலும் நினைக்கும் நினைப்பெல்லாம் மூன்றாம் உசுரும் நாலாம் உசுரும் தான் , எனக்கென கிடைக்குமோ என்று பாராமல் உணவருந்தும் பொழுதெல்லாம் பசியுடனே முடிந்த நாட்கள் நட்சத்திர வடிவில் வானிலே , சிறைவாசம் பட்டு பத்துமாசம் வயிற்றிலே இருக்கும் வரை புரியவில்லை ,என் கஷ்டம் உன்னை தாக்குமென்று , தந்தையின் தோல் உன்னை தாக்கு பிடிக்கும் வரை தான் , தாயின் மடிவாசம் கிடைக்கும் , தலைகோதும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்கிறது என் ஆழ்மனம் , இருபதாண்டு வாழ்கையை பிச்சையாக போட்டு புண்ணியம் தேடவில்லை, மாறாக புண்ணியம் தந்தனர் , மறு தாயாக வ

கோடை மழை

கோடை மழை வஞ்சனை கோரும் வானம் வருத்து எடுக்கிறது கதிரவன் கண்களின் ஈரம் கூட காய்ந்து விடும் தருணம் தோலின் மேல் ஒரு அருவி கணப்பொழுது கண்ணிமைத்தது கண்ணெதிரே மழை ,, நின்றும் பெய்யவில்லை, நின்றும் போகவில்லை காற்றில்லாமல் ஆடிய கிளைகள், நீரில்லாமல் நினைந்த இலைகள் கண்ணின் காட்சியோ கற்பனை காட்சியோ விளங்கும் தருணத்தில் பிரிந்தது யாவும் .... வெட்டியாக திரிந்த காற்றோ அடிக்க ஆரம்பித்தது , வேலை செல்லும் வெயிலோ வாட்ட தொடங்கியது, என்ன நடந்தது அக்கணம் புறமுதுகு இட்டு ஓடிய இருட்டெல்லாம்,ஒரே சேர எந்தன் முன்னே ,, கோடை மழையாய் வந்தவள் எங்கே ,,,

அடுப்பின் வெளிச்சம்

அடுப்பின் வெளிச்சம் மஞ்சள் பூசிய மனதார விழிகளிலே ஏன் இந்த மயக்கம் ,,/ கண்ணிபெண்ணின் மனதாய் காதல் நுழைய, கருபிடிக்கும் வெள்ளை சுவரும் , வெறுத்து ஓடும் நாயை போல் விட்டு துரத்தும் நினைவு ஒற்றை பார்வையிலே என்னவொரு கண்ணிவெடி ,, கண்களிலே ,,, துருபிடித்த இரும்பாய் என்தேகம் பளிச்சிடும் பாத்திரமாய் நீ ஓட்டினால் ஓட்டும் , என்னுடன் நீ .. மாவிலை கட்டிய வீட்டின் முன்னே மறைந்து பார்க்கும் ,கண்கள் மஞ்சள் அறைத்து உன்னை குளிப்பாட்ட நினைந்து போனது எந்தன் நெஞ்சம் , இதுவரை சிறுமி நீ , பெரியவளாகி விட்டாய் ஒற்றை வ[லி]ழியிலே எனக்கும் வராதா என நான் ஏங்கிய பொழுதுகளே காட்டிகொடுக்கும் உன்மேல் வைத்த அன்பினை பசுமர காற்றைபோலே பசும்பால் தேககாரி அடித்துவிட்டாய் நெஞ்சினை , உடைத்துவிட்டாய் உயிரினை, எல்லாவற்றிற்கும் முடிவுண்டு என்றால் ,காதலே உனக்கு இல்லை ,, இமைகள் எறிந்தாலும் உன்னை காண்பேன் என்கிறது விழிகள் ,காது அடைத்தாலும் கேட்பேன் சொல்கிறது செவிகள் , ஐம்புலனும் உன் கட்டுப்பாட்டிலே அழாககிறது நெஞ்சம் , அடுப்பின் வெளிச்சம் போல ,

கைப்பையின் ஓரம்

கைப்பையின் ஓரம் விண்மீன்கள் பல வீட்டின் முன்னே வாடகை கேட்டு, கன்னியின் இல்லம் எதிரே ,,, செல்லும் காற்று கூட நின்றே செல்கிறது ஒரு கணம் ,எட்டியாவது பார்ப்பாயா என்று , கொட்டும் மழையும் குடை பிடிக்கிறது நின்ற வேளையில் வெளியிலே தெரிவாய என்று விழிகோளம் தேய்ந்து புதுக்கோளம் அணிந்துள்ளேன் அவள் கோலம் போடுவதை பார்த்திட இரு உதடு இணைந்து ஒரிதழ் ஆகிறது பார்வை வீசும் வேகத்திலே வெட்ட படுகிறது நெஞ்சமும் , இடுக்கிலே துணுக்காய் நீ ஓட்டுவேன் மேலும் வசிக்க ஓரங்கள் யாவும் இருப்பிடம் ஆக, நீ நிற்கும் ஜன்னலும் பூங்காவாக மாற , மொய்க்கும் தேனியாய் நான் , தெருவிலே அத்தனை வெளிச்சம் நடந்திடும் நிலா நீ பகலிலே ,வெளியிலே கண்ணீர் பூக்களுடன் பல நேரம் நீந்துகிறேன் , கவனிப்பாயா என்று , சற்றே உன் விழி என் உடல் திரும்ப , மேல்சென்று திரும்பும் இதயம் துடிப்பின் வேகம் கூடும் தருணம் உணர்வேன் ,என்னருகே நீ குளிரின் மத்தியிலே என்னவொரு வெப்பம் உந்தன் மூச்சு எரிக்கிறது என்னை , துளசி மரத்தினை நீ சுற்ற என் பார்வை உன்னை சுற்ற , என் துளசியாய் நீ, எதோ ஆகிறது , என்னமோ ஆகிறது மனம் மட

மல்லிகை மொட்டு

மல்லிகை மொட்டு கூந்தலுக்கு நீ அழகா இல்லை உனக்கு கூந்தல் அழகா ,புரியவில்லை என்னவள் தலையினிலே நீ குடியேறும் தருணத்திலே வெள்ளை நிறமெப்படி வந்தது தெரியவில்லை ,நிறம் பொருந்த படைத்தானோ ,வரம் வாங்கி படைக்கப்பட்டதோ ,விளங்கவில்லை உன்னிடமும் ஒரு கேள்வி , அவ்வளவு உயரத்திலே நிற்கிறாயே மெல்லிய கையிரினை பிடித்தவாறு , பயம் இல்லையோ ,, சாகசம் செய்கிறாயோ ...என்னவளுக்காக பாவம் நல்ல காரியத்திலும் நீ ,கேட்ட காரியத்திலும் நீ யாரடா நீ ... விதவை பெண்களுக்கு என்ன பாவம் இழைத்தாய் ஏன் உன்னை சூடுவது இல்லை , கன்னி பெண்களின் தலையிலே நீ இருக்கையிலே பதறுதடா நெஞ்சம் ,,நான்  இருக்க வேண்டிய இடத்திலே நீ உதிர்வதிலே  .சிலிர்கிறது உள்ளம் எப்படியோ வீழ்ந்துவிட்டான் பாவி என்று என்னவொரு வாசம் உமக்கு என்னவளிடமிருந்து எப்படி பெற்றாய் , எவ்வளவு ஒட்டியும் எனக்கு வரவில்லை , வரம் பெற்றாயோ அவளிடம் , .தன் இனத்திற்காக, ஆனாலும் தினமும் தூக்கிலே ஏற்றுகின்றனர்,சுரணையே இல்லாமல் அடுத்தநாள் தலையிலே நீ . படுக்கையிலே நீ ,வரமடா உமக்கு , ,முதலிரவிலே மூன்றாம் நபராய் நீ எல்லாம்  (உறுப்பினையும்) எப்படிய

குடிசை சொர்க்கம்

குடிசை சொர்க்கம் விண்ணில் இருந்து விழுந்த கடைசி துளி சொன்னது ,, நானும் உனக்காக தான் என்று , கண்ணில் இருந்து வந்த முதல் துளி கேட்டது இது தான் வறுமையா என்று , நாக்கிற்கும் ,வயிற்றிற்கும் இடப்பட்ட தொலைவில் தான் உயிருள்ளதை உணர்ந்தேன் , விளையாட்டாய் உணவு அங்கு சோறே விளையாட்டாய் இங்கு பிரிவினை ஏனோ , தண்ணீரும் உணவாகும் , கண்களின் வழியே பசி தெரியும் போது ,தண்ணீரும் உணவாகும் . ஒருநாள் உழைப்பு ஒருகை வயிற்றை நினைக்கும் போது.,சோகம் கூட இன்பாகும் , ஏணிவைத்தும் எட்டாத மாடிகள் இருக்கும் இடத்தில் தான் குடிசைகளும் வாழ்கின்றன கொசுகடிகள் தாலாட்டாய் மாறும் தருணத்திலே,உறக்கம் கூட சவமாகும் ,அழுப்பினிலே சமரசமே வாழ்க்கையாகி விட்ட நேரத்திலே ,குழந்தையும் பெரியவராக நடக்கிறது , எட்டாகனியாய் பல கடை இருக்க , தெருவோர கடைகளே நட்சத்திர உணவாகுகின்றன , கறிசோறும்,காட்டன் துணியுமே எண்ணமாக பலர்மனதிலே , பர்மாபஜாரே பலநாடுகள் ஆகின்றன, நான்கு சக்கர வண்டிகள் தெருவில் நிற்கவே கண்ணாடிகள் ஆகின்றன ,. குளியலறையும் எதிர்பார்ப்பாக ஆகும் இளசுகள் மனதிலே , கற்புக்கும் தெரிகிறது குடிசைக

நெல்மணியின் மனது

கண்ணீர் வரும் நேரங்களில் தான் கவலையும் வருகிறது , மாற்றி கூறி விட்டேனோ , கதிர் அறுக்கும் கைகளில் , பூச்சு மருந்துகள் ... விவசாயத்திற்கு அல்ல ... நெல்பாத்தி அறுத்த கத்திகள் , இன்று பலபேர் கழுத்தை அறுக்கின்றன, தற்கொலைகள் இல்லை , தண்ணீரே கொடுப்பது இல்லை , வயலுக்கு மட்டும் , சரக்குக்கு அல்ல .... கோடிருபாய் ஏமாற்றியவன் சுதந்திரமாய் ,ஆயிரம் வாங்கியவன் தூக்கின் கயிற்றினிலே , மாடுகள் கூட உழைக்கின்றன , மனிதர்களை தவிர அதற்கு தெரிகிறது உணவென்பது ஏதுஎன்று ..... கலப்பைகள் புதைக்கபட்டன வயலின் அருகினிலே , கூடிய சீக்கிரம் நாமும் அருகே ... ஏர்கலப்பை போட்ட நிலங்கள் இங்கு பட்டா போடுகின்றன , வயல் என்பது இல்லை , கிரிக்கெட் ஆட இடமுண்டு அதற்கு இங்கே வரியில்லை , உணவு பொருளை தவிர .,,, கூடிய சீக்கிரம் இடமிருக்கும் தங்க , உடை இருக்கும் உடுத்த ,, உணவிருக்காது ,,,உண்ண, யோசியுங்கள் நேசியுங்கள் ,, விவசாயத்தை ,,,  நெல்மணியின்மனது ..

கவிதை

கவிதை , இனம் புரியா இரு சொற்கள் உறவாடுவது , எழுத்துகளுக்கு இடையே எதுகையை விடுவது , எங்கே பிறந்தனவோ எப்படி இணைந்தனவோ என்னதான் மாயமோ எவ்வளவு அழகு இவ்வெழுத்துகளுக்கு, சில்லூத்தாய் தோன்றும் சில சொற்கள் , சிலிர்ப்பை ஊட்டும் செவ்விதழ் மேனியிலே , உதடுகளும் அழகாகும் , உன்னை வாசிக்கும் தருணத்திலே , ஏழாம் சுவையாய் என் நாக்கிலே நீ , எழுதுகோலுக்கு ரசிகனாய் நான் , எப்படி வந்தாய் எனக்குள்ளே , அடுக்கடுக்காய் பல கேள்விகள் , ஒற்றை வரிகளிலே , பூட்டி வைத்தவன் யார் , என் மனதினை, ஏகாந்த பார்வைகள் , எல்லாம் உன் மடியிலே , தவழ ,,குழந்தையாகிறேன் நான் , அணிக்கோவை ஏதும் இல்லை , எத்துனை சிறப்பு, புதையலோ ,,மண்டையும் ... நீ அங்கே தானே தோன்றுகிறாய் , இல்லை கைஎனும் ஆயுதமோ ,.. எங்கே கண்டுபிடிக்கபட்டதோ எளிதில் வராத விஷயம் , மனங்களின் நண்பன் , காதலின் காதலன் , படைக்க பட்ட அத்தனைசொல்லும் ஏங்கும் செயல் , எட்டாம் அதிசயம் , மோகத்தின் மோனை கண்ணீரின் கள்வர் , காதலென்னும் சொல்லுக்கே இலக்கணம் பறித்தவன் , என்னையும் வாழ வைப்பவன், கவிதையே உனக்கும் சமர்ப்பணம் ,,,

ஏதோ நேரம்

சிரித்து செல்கிறது மேகங்கள் , கருந்துணியை உடுத்தி யார்க்கு தெரிவிக்கிறது ,தன் எதிர்ப்பை ???? கட்டளையிடும் இடியின் சத்தம், யாரை மிரட்டுகிறது , அர்ஜுனனையா ,,... புகைப்படம் எடுக்கும் மின்னல் , யாரை தான் படம் பிடிக்கிறது , ஒரு வேலை என்னைத்தானோ ,, எலியும் புலியுமாய், வானமும் பூமியும் சண்டையிட , ஒளிந்து பார்கின்றன வண்டுகள்,,, எத்தனை பேரிடம் தான் கடன் வாங்கியதோ மழை , இப்படி அளிக்கிறது ,... எதுகை மோனையாய் ஏலம் போடும் சிட்டுக்குருவிகள் , வரவேற்கின்றனவோ , மயில் ஆட்டத்துடன் ... முள்ளிருக்கு கீழேயும் ஈரம் இருக்கும் , மாற்றி பாருங்கள், மாற்றம் தெரியும் ....,

காதல் கோவை

நிலவும் வெட்கப்படும் தருணம் தரையில் தெரிகிறது தேவதை முகம் ,.. ஆகாயம் என்பது தொலைவு அல்ல நீ விலகும் நேரத்தினை விட ... வெளிச்சம் கூட இருட்டாகும் பெண்ணே உன் மந்திர மேனியினால், பகலெல்லாம் இரவாகும் பளிங்கு உதட்டால் நீ சிரிக்காத பொழுதிலே , பனிபாறையும் பனைவெல்லமாகும், கல்லிசெடியும் ரோஜாவாக மாறும் என்னடி பெண்ணே உன் இதழின் வசியத்திலே , கதைபேசும் கண்களின் முன்னே மீன்கள் வாயடைத்து போகும் , என்னதான் மலரோ வாசம் கூட நாறுகிறது , உன்னை முகர்ந்த பின்னால் , வார்த்தைகள் செய்த சாபமோ வழுக்கியும் கூட வருவதில்லை வெளியே , கண்ணே மணியே கொஞ்சிட கவிஞன் இல்லை நான் , ஆக்கிவிட்டு போவது ஏனோ . அகண்ட பார்வையும் சுருங்குமடி உன் ஒற்றை முடி நீ ஒதுக்கையிலே , கட்டுடல் மேனியும் காலாவதியாகும் , நெற்றியிற்கும் பாதத்திற்கும் உள்ள தூரங்கள் பாதாளம் தொடுகின்றன , ஒற்றை அடி நீ கடக்கையிலே , எழுதிவைத்து தான் செய்தானோ இச்சிலையை ,என்னவொரு போட்டி பிரம்மனிடம் , போட்டி வைத்தவன் நான்தானோ , கடற்கரை காற்று கூட கவிபாடும் , என் அருகே உன் மூச்சு வருவதிலே , பித்து பிடித்தவன் போல் புலம்

கட்டணம் கேட்காத காற்று

சிரிக்கும் வயல்வெளியும் சீரும் பாம்பும் சிந்தனை மல்கும் சொல்லும் பிறக்கும் இடமது , எங்கே செல்லுமோ வானம் அங்கே செல்லும் அவள் அன்பு , இறுதிவரை தெரியவில்லை அவள் உண்ணாவிரதம் இருந்த பொழுதுகள் , ஏட்டிலே ஏதும் எழுதவில்லை எட்டி பிடிக்கவும் முடியவில்லை , ஏனோ ஒரு சொல் அடக்கமது , கட்டில் சுகம் தடுத்தவள் , எனக்கொரு உடகேடு வந்தா உடகிட்ட விலகாம , உன்சூடு தந்து என்சூடு தனிப்பா , மழைதண்ணி நெனசுபுட்ட மழைக்கொரு கேடுகாலம் , புடவையும் துண்டாகும் , பேச்சும் மருந்தாகும் , எத்தனைஉருவம் பெற்றாலும் உன் பாசம் மாறியது இல்ல எங்கே நான் போனாலும் உன் நிழல் விட்டது இல்ல முன்னூறு நாள் மூச்சடக்கி படுத்திருந்து ,திரும்பினாலும் இரும்பினாலும் எனக்கென ஆகுமோனு, இடுப்புல கையவெச்சு தட்டிகொடுத்து, இருக்க இடமளித்து பசிக்க பால் கொடுத்து , உடுக்க துணி கொடுத்து , பிழைக்க உயிர் கொடுத்த , உனக்கென்ன இப்பாவி என் செய்வேன் , இருக்கும் உயிரும் உன்னாலே உடுத்தும் துணியும் உன்னாலே வாழும் வாழ்க்கையும் உன்னாலே பெற்ற செல்வமும் உன்னாலே , உன்னாலே ஆனா இத்தனை இருக்க நீயோ முதியோர் இல்லத்திலே கிடக்க ,

தொடக்கமது புள்ளியில்

சிதறும் ஒளியான சூரியனை கீழே தள்ளி காலில் மிதி , பளிங்கும் பாறைதான் நம்பிவிடு மழையும் உயிர்தான் எடுத்துகொள் அன்பும் உணவுதான் உண்டுவிடு கோவம் குப்பையாகட்டும் பொறாமை பொசுங்கட்டும் போட்டிகள் நிறையட்டும் வாழ்க்கை கடினம் தான் வாழாத வரை ,கடலும் கல்லறைதான் நீந்தாத வரை உணவும் எளிமைதான் உருவாக்காத வரை ஒற்றைத்துளி சேர்ந்தே கடலாகும் நெற்றிவியர்வை சிந்தியே பணமாகும் உழைத்து விடு தொடக்கம் அது புள்ளியில் தான் , 

அர்த்தமற்ற அமைதி

ஆழ்கடல் தூங்கும் வேளையிலே பல கடல் எழுகிறது தலையணை அருகே , எண்ணிப்பார்க்க ஆசையில்லாமல் நட்சத்திரங்கள் கோவப்படும் வேளையிலே , முறைத்து கொண்டிருக்கும் நிலவு , சிரிப்பிலே சிறைவைத்து போனவர் ஏனோ திரும்பவில்லை மனதருகே , விழியிற்கும் வெட்கமில்லை கதறிக்கொண்டே இருக்கிறது மனதிற்கும் பூட்டு இல்லை சாவியும் அவனிடமே ,, கால்கள் ஓய்வில்லாமல் நடக்கிறது அனுமதி இல்லாமலே , கனவுகள் கலைகிறது காற்றேதும் அடிக்கவில்லை, நெஞ்சமோ உடைகிறது ஆயுதமும் ஏதுமில்லை சிலையும் வடிக்கிறது என் கண்கள் உன்னை கண்ணீரால் , இவ்வேளை நிலவும் நீளும் நிலவும் நீடிக்கிறது அர்த்தமற்ற அமைதி ,.. வார்த்தையின் ஆழமோ உன் பெயர் ,......... துடிக்கிறது இதழும் . கவியரசன் ,,,,ஜஸ்ட் பீலிங்க்ஸ்