வேலை தேடிய வேளை,

வேலை தேடிய வேளை,

துடித்து எழும் மீன் போல்
குதிக்கிறேன் ,
திரும்பும் நிலையிலே
வறண்ட கடல் ,

கண்ணீர் தூறும்
மழையிடையே ,
ஒளிந்து கொள்ளும்
திறமை பூச்சிகள்,

காலங்கள் செல்ல செல்ல
கோவணம் கூட
மீதாத சூழலிலே
நம்பிக்கை மட்டும்
கைகொடுத்திடுமா என்ன ?

விடியல் பொழுதுகள்
வெளிச்சமாய் இருந்தாலும்
உண்ணாத வயிறுகளிடையே ,
சூரியனும் மங்கிடும்
விளக்கு தான்
பேருக்குதான் பசிகள் எல்லாம் ,
பணம் செய்கிற சூழ்சிகள்
காய்ந்திடும் குடலும் ,
தண்ணீர் கூட விலைக்கு
விற்கும் காலமல்லவா இங்கே ,

எதோ கோடை மழை போல்
ஆங்காங்கே நல்ல உள்ளங்கள்
தரும் உணவுகளே
அமர்தமாக ஆகிறது ,

ஏழன பிழைப்புகளுக்கு
மத்தியிலே
வைராக்கிய வயிறு ,

கைபேசி அழைக்ககூட
கையில் பணமில்லா நிலை ,

கண்ணீரும் ,கால் செருப்பும்
 மட்டுமே
என் சொத்துகள் ,
அழுக்கு உடைக்குள்ளே
வெள்ளை மனது ,

நினைத்திடும் தருணம்
புல்லரிக்கும் உடல் ,
அலுவலக நாற்காலியலே
அண்ணார்ந்து ஓய்வெடுக்கும் நேரம் ,
என் கீழே பத்து பேர் ,,
ஆறுபூஜிய சம்பளம் ,
நான்கு சக்கர வாகனம் ,

வேலைதேடிய வேளைகள்
செய்த வேளை இது ,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு