கேள்விகள் [தொடர்ச்சி]

கேள்விகள் [தொடர்ச்சி]

கண்டுபிடிக்க படவேண்டும்
என்பதற்காகவே
தொலைக்கபடுகின்றன ,சிரிப்பும்
 வாழ்வின் முடிசுகளும்,

ஆரம்பம் தெரிந்தவரை
பொறுத்த நம்மால் ,
முடிவை தெரிய மட்டும்
அத்துனை சங்கடம் ஏன்  

ஆசையாய் பேசும் போதே
தொடங்கிவிடுகிறது
ஏமாற்றத்தின் முதல்
அத்தியாயம் ,,

கோவம் கொண்ட நெஞ்சிலும்
எதோ ஒரு ஓரத்தில்
அன்பும் இருக்க தான் செய்கிறது ,
கோடைகால மழை ,

மோகம் எனும் ஒற்றைசொல்
தான் தாம்பத்தியம் என்றால்,
விட்டு கொடுத்து வாழ்வதற்கு
பெயர் ஏது????

குடிக்கும் தேனிரிலும் கூட
கசப்பான தேயிலை
இடம்பெறும் வகையில்
வாழ்விலே மட்டும்
கூடாதென்பது என்ன அர்த்தம்  ,

என்னதான் திருடினாலும்
உழைப்புக்கு சலுக்காத நான்
கண்ட பிறவிகள் ,
தேனியும் ,விவசாயியும் ,.

இரு கோடுகள் இணையும்
இடத்தில வைக்க பட்ட
புள்ளிதான் வாழ்வு என்றால் ,
புள்ளியை கூட பெரும்பாலும்
யாரும் தொடுவதே இல்லை ,

விடுகதைகள்  இருக்கும் வரைதான்
தெளிவுபடுகிறது விடைகள் ,.
அர்த்தவனமாக காட்சியளுக்கும்
வானுக்குள்ளும் ஒளிந்து இருக்கும்
அருமைகளை ,,இருளில் தான்
காண முயல்கிறது ,,

கருணை இல்ல வாசல்களில்
தன் பங்குக்கு செய்துவிட்டு
செல்கின்றன ,பறவைகள் ,
விதைகளை தெளித்து
கனிகளை வளர ,

காய்கறி வாங்க கடைக்கு
செல்லும் போதெல்லாம்
கை கழுவ வேண்டியுள்ளது ,
வயிற்ரை எதை கொண்டு கழுவ ,,,

சிலநேரம் சிரிக்கும்
பொழுதுகளில் தான்
பல கதறல்கள்
வெளிபடுகின்றன ,,

எல்லைகள் ஏதும் இல்லாத
வாழ்வு வேண்டும் என்றால்
பால்வழி அண்டத்தில் தான்
குடியேற வேண்டி இருக்கும்

காதளுக்குள்ளே சண்டை வராமல்
இருக்க அமைதி மட்டுமெ
இன்றி அமையாததாக
அமைகிறது ,

சொற்பொழிவுகள் நடக்கும்
மேடைகள் அருகில்தான்
தாலாட்டும் நடக்கிறது ,,
கட்டில் இல்லாமல் ஒய்யார
உறக்கம் ,,

நட்பின் வாசல் தான்
கண்கள் என்றால்
விழி அற்றோருக்கு வருவதெல்லாம்
என்னவென்று கூற ,,

செய்தி தாள்களில்
தினம் நடப்பதை தெரிந்து
என்ன கிழிக்க முடிகிறது ,
அத்தாளினை தவிர

கண்முன்னே நடக்கும்
பலவும் தெரிந்தும்
குருடனாகவே பழகிவிட்டது
சமூகம் ,

கருவறைகள் ஏதும் இல்லாமல்
பிரசவிக்கபடுகின்றன ,,
உண்மை காதல்கள் சில
ஆண்களில்

கண்சிமிட்டும் கணத்திலே
உறுதியாகி விடுகிறது
நெருக்கம் ,

குற்றம் ஏதும் இல்லாமல்
திருடபடுகின்றன ,,தினந்தோரும்
பல மனதுகள்

பயணம் செல்லும் தடம் கூட
அழியாமல் அழிந்து விடுகி
ன்றன
ஆயுள் ,,,உருவாக்கி இருந்தால்

நோயெதிர்ப்பு சக்திகள்
அவசியமாகி விட்டன ..,,
சுயலநல சமுதாயத்திலே
தனியாக போராட ,,

கேள்விகள் என்று கூறி
விட்டதால் என்னமோ ,,
பதில் தெரியாதோ என எண்ணி
பதில்களும் மொழிந்து விட்டன ,,
வார்த்தைகளின் இடுகிலே

வினாமட்டும் தான் வாழ்வென்று
இருப்போருக்கு ஒரு பதில் ,,
பதில் உங்கள் கையில் தான்
நிரப்புவதும் ,,நிரப்பாமல் வினாக்குவதும்
நம் கையிலே ,,
[தத்துவம் போல தோணுது ல,,,
எனக்கே விசித்திரம இருக்கு நானா இது நு ]

சிந்தனையுடன் கவி , ,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு