மின்னலின் சிறகு

மின்னலின் சிறகு ,

கேட்கப்போகும் குழந்தையின் சத்தம் ,
கேட்டு அடங்கும் அழுகையின் சத்தம் ,
கருங்கல் வெடிக்கும் சத்தம் ,
கல்லுபானை உடையும் சத்தம் .
கன்னக்குழி மோதும் சத்தம் ,
கட்டிபோடும் மாட்டின் சத்தம் ,
தேடி ஓடும் நாயின் சத்தம் சத்தம் ,
கட்டை பிளக்கும் கிழவன் சத்தம்
ஒல்லி நிலவிலே குயிலின் சத்தம்
காதை பிளக்கும் இடியின் சத்தம் ,
,ஈரம் சொட்டும் மழையின் சத்தம் ,
ஒதுக்குப்புற முனகல் சத்தம்

எல்லா சத்தமும் அடங்குதடி
ஒற்றை பாத கொலுசின்
ஓசையிலே ,
அங்கே நீ தெரு கடக்க
இங்கே என் மனம் பறக்க
சிறகே முறிந்து பார்வையிலே
கண்முன்னே விழும் காக்கை நான்

இதழின் மடிப்புகளுக்கிடையே
தவழ்ந்து செல்லும் குழந்தை நான் ,
காதோர அட்டிகளுக்கு இடையே
சிணுங்கும் கோபுரம் நான் ,
விரல்களுக்கு இடையே ஊடுருவும்
அக்கினி விரல்களும் நான் ,
மல்லிகை பூ மேனியிலே
வாசம் தேடும் வண்டும் நான் ,
இத்தனையும் நானாக இருக்க ,
நீ மட்டும் தொலைவிலே ஏன்

மின்னலின் சிறகுகள்
மெல்லிதாய் மனதிலே
இறங்கிட ,பார்வைகள்
மறுப்பதேனோ ,

கவியரசன் ,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு