வாழ்வின் மிச்சம்

வாழ்வின் மிச்சம்

எட்டி எட்டி பார்கிறேன் வானம்
தெரியவில்லை ,காணமல் போய்விட்டதோ
பயத்திலே மனதும் குழம்பிட ,,
கண்ணெதிரே வானம் ,,,
தேவதையின் தடம் பதித்த இடம் கூட
பூப்பறிக்கும் நேரத்திலே
சிவந்துவிடும் விழிகளுக்கு
என்ன தெரிகிறது ,
பார்வை ஒன்றே பேசும்
வார்த்தைகளுக்கு விடுமுறை அளித்து ,,

சிவப்பு கம்பளம் நீட்டி என் மனதும்
உன்னை வரவேற்றிட,
முகத்திலே சுருக்கம் ஏன் ,,
பார்க்க,,; கிடைக்கும் பொருளெல்லாம்
அடங்கிவிடும் அந்த பார்வையிலே
நான் துச்சம் தான் ,,

உமக்கு சீலை தான் வேண்டும் என்றால்
மழையினை சேகரித்து
வடிவமைத்து இருப்பேன் ,
அணிகலன் ஏதும் வேண்டும் என்றால்
என் நரம்பிடையே சுருக்கிட்டு ,
செய்து அணிவிப்பேன் ,

கேட்கும் மனதுக்கோ கூச்சம் தான்
நானோ கிழிந்த துணியாய் காட்சியளிக்க
என் மனம் கேட்பதேனோ ,,
வானம் நீ என்றாலும் ,
ஒருதுளி என்னை கேட்பதேனோ ,

காதலுக்கு கண்ணில்லை என்பது
தெளிவாகி விட்டது உன் விருப்பத்தின் மூலம் ,
சிந்தும் காற்றிடையே அடிக்கும்
தக்கை போல் செல்லும் எனக்கா
இவ்வளவு பெரிய கோபுரம்,

கல்லிடையே மாட்டிய புழுவாய்
நெஞ்சம் நெளிந்திட ,
கை விரல் இணைப்பதேனோ ,

என் கைவிரலுக்கு

இடையே புதுவிரல்
இணைந்திட ,கண்களும் கடத்துமே
புதுவித மரணத்தை ,
மரணமும் சுகமே ,,

துளி துளியாய் நீ வந்ததால்
துளையாகி போகிறேன் ,
என் நெஞ்சின் ஓரத்தில்
உன் உருவம் தீட்டிட,
மழையாவும் வருமோ ,
தீயாக இடுமோ ,,
கண்ணே நீ மறைத்தாலும்
வாசத்தில் நான் உணர்வேன் ,
சொல்லேதும் சொல்லாமல்
மௌனத்தை நான் படிப்பேன் ,
அழகே ,,

இரவுக்கும் நிலவுக்கும் இடையிலே
பிறந்திடும் குழந்தையாய் நான் வருவேன் ,
கனவினை தருவேன் ,

மலரென  நீ இருந்தால்
பணியென வருகிறேன் ,
வாசத்தில் அடிக்கிறாய் ,
என் இதழிலே துளிர்ப்பாய்

மஞ்சள்  கயிறே போதுமடி
நம் வாழ்வின் உயரம் ஆகுமடி
,திருமணம் வரமே ,
நம் வாழ்விலே சுகமே ,,

இதமாக நீ இருப்பாய் ,
பூக்களும் கூறுமடி ,
உறவாக நாம் கடக்க ,
கட்டிலும் பேசுமடி ,
காதல் கவிதைகள்
நான் படிக்க ,முனகலும்
பெருகுமடி ,சிரித்து செத்து
விளையாட ,துளி நேரமும்
போதாதடி ,,,
சேவலும் கூறும்
வாழ்வின் மிச்சத்தை

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு