கவிதை

கவிதை ,

இனம் புரியா இரு சொற்கள்
உறவாடுவது ,
எழுத்துகளுக்கு இடையே
எதுகையை விடுவது ,

எங்கே பிறந்தனவோ
எப்படி இணைந்தனவோ
என்னதான் மாயமோ
எவ்வளவு அழகு
இவ்வெழுத்துகளுக்கு,

சில்லூத்தாய் தோன்றும்
சில சொற்கள் ,
சிலிர்ப்பை ஊட்டும்
செவ்விதழ் மேனியிலே ,

உதடுகளும் அழகாகும் ,
உன்னை வாசிக்கும் தருணத்திலே ,

ஏழாம் சுவையாய் என் நாக்கிலே நீ ,
எழுதுகோலுக்கு ரசிகனாய் நான் ,
எப்படி வந்தாய் எனக்குள்ளே ,

அடுக்கடுக்காய் பல கேள்விகள் ,
ஒற்றை வரிகளிலே ,
பூட்டி வைத்தவன் யார் ,
என் மனதினை,

ஏகாந்த பார்வைகள் ,
எல்லாம் உன் மடியிலே ,
தவழ ,,குழந்தையாகிறேன் நான் ,

அணிக்கோவை ஏதும் இல்லை ,
எத்துனை சிறப்பு,
புதையலோ ,,மண்டையும் ...
நீ அங்கே தானே தோன்றுகிறாய் ,
இல்லை கைஎனும் ஆயுதமோ ,..

எங்கே கண்டுபிடிக்கபட்டதோ
எளிதில் வராத விஷயம் ,

மனங்களின் நண்பன் ,
காதலின் காதலன் ,

படைக்க பட்ட அத்தனைசொல்லும்
ஏங்கும் செயல் ,
எட்டாம் அதிசயம் ,
மோகத்தின் மோனை
கண்ணீரின் கள்வர் ,

காதலென்னும் சொல்லுக்கே
இலக்கணம் பறித்தவன் ,
என்னையும் வாழ வைப்பவன்,

கவிதையே உனக்கும் சமர்ப்பணம் ,,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு