குடிசை சொர்க்கம்

குடிசை சொர்க்கம்

விண்ணில் இருந்து விழுந்த
கடைசி துளி சொன்னது ,,
நானும் உனக்காக தான் என்று ,

கண்ணில் இருந்து வந்த
முதல் துளி கேட்டது
இது தான் வறுமையா என்று ,

நாக்கிற்கும் ,வயிற்றிற்கும்
இடப்பட்ட தொலைவில் தான்
உயிருள்ளதை உணர்ந்தேன் ,

விளையாட்டாய் உணவு அங்கு
சோறே விளையாட்டாய் இங்கு
பிரிவினை ஏனோ ,

தண்ணீரும் உணவாகும் ,
கண்களின் வழியே பசி தெரியும்
போது ,தண்ணீரும் உணவாகும் .

ஒருநாள் உழைப்பு
ஒருகை வயிற்றை நினைக்கும்
போது.,சோகம் கூட இன்பாகும் ,

ஏணிவைத்தும் எட்டாத மாடிகள்
இருக்கும் இடத்தில் தான்
குடிசைகளும் வாழ்கின்றன

கொசுகடிகள் தாலாட்டாய் மாறும்
தருணத்திலே,உறக்கம் கூட
சவமாகும் ,அழுப்பினிலே

சமரசமே வாழ்க்கையாகி விட்ட
நேரத்திலே ,குழந்தையும்
பெரியவராக நடக்கிறது ,

எட்டாகனியாய் பல கடை இருக்க ,
தெருவோர கடைகளே
நட்சத்திர உணவாகுகின்றன ,

கறிசோறும்,காட்டன் துணியுமே
எண்ணமாக பலர்மனதிலே ,
பர்மாபஜாரே பலநாடுகள் ஆகின்றன,

நான்கு சக்கர வண்டிகள்
தெருவில் நிற்கவே
கண்ணாடிகள் ஆகின்றன ,.

குளியலறையும் எதிர்பார்ப்பாக
ஆகும் இளசுகள் மனதிலே ,
கற்புக்கும் தெரிகிறது குடிசைகளை ..

உடல்நலக்கேடுகள் எளிதல் வருவதில்லை
மனதிலே குறைகள் இல்லாதவரை ,
எவ்வளவு தான் கடினமென்றாலும் ,
நிம்மதி பொழுதுகள் ,
குடிசை சொர்கத்திலே ....

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு