இயற்கையே [பெண்] தானே

இயற்கையே [பெண்] தானே

அழகாய் வானிலே
இட்ட பொட்டாக நிலா,
கார்மேக கூந்தலாய் மேகம் ,
பார்த்தால் எரிக்கும் விழிகள்
ஏதும் எழுதாத வெள்ளை காகிதமாய்
வானம் ,என்னவளின் பெயரை நிரப்பவா ,
எழுதுகோலாக நானே மாற ,
வர்ணமாக கரைந்திடும் காதல் ,
சொல்லேதும் தீண்டாமல்
இடம்பிடிக்கும் மௌனம் ,
வெகுண்டு துடிக்கும் மின்னலுக்கும்
விடுமுறை அளித்து ,
ஓராயிர பார்வையிலே சிலிர்க்க வைத்திடும்
நெஞ்சம் ,தஞ்சம் அடையும் மஞ்சம் ,
அழகிய வான் ,

இயற்கையின் உச்சமாய் நீ ,
எரியும் பார்வையை போல்
என் கண்களை திறந்தால்
மூடிடும் விளக்கு ,
திறந்திடும் பொழுதிலே
அணத்திடும் வெளிச்சம் ,
இருளை தனக்குள்ளே கொண்டு
எறிந்திடும் மெழுகுவர்த்தி ,
தனக்குள்ளே தனிமையை புதைகொண்டதோ .
யாரை தேடி ஓடுகிறதோ காட்டு தீ ,
பனிமலை குறுக்கே
யார் குளிர் காய
இந்த எரிமலை ,
அனலும் குளிர்ந்திடும்
செங்கண் பார்வையிலே ..

விழிமொத்தம் பச்சையாக மாற ,
கருப்பு நிற கண்ணாடியில்
உன் உருவம் ,
எங்கேயும் கண்டிடும்
புதர்செடி போல ,
புதையாமல் எழுந்திடும்
உன் கனவுகள் ,
நான் நிற்க உன் தலைதான்
கிடைத்ததோ ,
உருண்டு விளையாட
நெஞ்சம் தான் தகுந்ததோ ,
பொறுமையின் சின்னமாய்
இருக்க ,என்ன எதற்காக
புண்ணியம் தேடுகிறாய் ,

பறந்திடும் ,கால்கள்
கண்ணகுகே,
கண்ணகியின் கால்தடம் ,
சிறகுகள் முளைக்காமல்
சிரிப்பிலே வீசினாய்
சிதறிடும் தோட்டாவாய் என் மனம் ,
சிகையிலே தோண்டினாய்,
குழியான தேகம் கொண்டு
துடித்திடும் இதயம் ,
வில்லாகி பிறந்தவளோ ,
அம்பாக எவுகிறாய் ,
காற்றைப்போல் சிணுங்கி
பெருகும் ஆசை மத்தியிலே
அச்சம் கொண்ட கனவு ,

அழகாழாய் நீ தூர ,
அதில் மெதுவாய் நான் தேற ,
கனவாக நீ ஊற ,
மிதப்பேனே தரை மேலே ,
கல்லாய் போகும் நீரும்
தொட்டுவிட்டால் நீ தொட்டும்
விட்டால் ,வீணாய் போகும்
காதலும் ,கரைமேல்
பொங்கும் நுரையாவேன்,
சிலநேரம் கதறினேன்
பலநேரம் வெகுநேரம்
ஓடினேன் நீரிலே ,

பார்வைதான் மோசம் என்றால்
கண்ணீரும் மிச்சம் தான் ,
கரைமேல் ஒதுங்கும்
பிணமாக என் பிண்டம் ,
சாக்கடை நீர் போல் கலங்கினேன் ,
குப்பையாய் என் நினவு ,
கஞ்சம் தான் என்றாலும்
வெளியேற துடித்திடும்
கண்ணீர் ,விளையாட்டாக பெய்திடும்
மழை ,,எதோ தவறு
பெய்வது மழையா ,??/

பெண்மேல் வைத்தால் பொய்யென்றால் ,
உன்மேல் வைத்தேன் ,
நீயும் ஏமாற்றுகிறாய்
பலமுகமாய் ,
எதோ ஒன்றாய் வந்து
அவளையே
நினைவு படுத்தும்
உன் கரங்கள் ,
காதலே காலம் போகும்
கண்ணிலே நீரும் ,நேரும் ,
கேள்வி
இயற்கையே பெண் தானே ,,,
எத்துனை அழகோ அத்துனை ஆபத்து ..,,,,

அன்புடன் கவியரசன்,ம
,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு